Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Domestic gas cylinder

காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் இரண்டாம் முறையாக உயர்வு; சேலத்தில் 803; சென்னையில் 785 ஆக நிர்ணயம்!

காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் இரண்டாம் முறையாக உயர்வு; சேலத்தில் 803; சென்னையில் 785 ஆக நிர்ணயம்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமில்லா எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை, நடப்பு பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது மேலும் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்நாட்டு சந்தையில் தேவை அளவு, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுனங்களின் கூட்டமைப்பு கூடி, விலை நிர்ணயம் செய்கின்றன.   நடப்பு பிப்ரவரி முதல் தேதியில் புதிய விலை அறிவிக்கப்படும் என வழக்கம்போல் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அன்றைய நாளில், காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நடைமுறைக்கு மாறாக, பிப். 4ம் தேதியன்று எல்பிஜி சிலிண்டர் விலை 25 ரூபாய்
சமையல் காஸ் சிலிண்டர் விலை 63 ரூபாய் உயர்ந்தது! ரூ.979 ஆக நிர்ணயம்!!

சமையல் காஸ் சிலிண்டர் விலை 63 ரூபாய் உயர்ந்தது! ரூ.979 ஆக நிர்ணயம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர் விலை நடப்பு நவம்பர் மாதத்திற்கு ரூ.979 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, முந்தைய அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் 62.50 ரூபாய் அதிகமாகும். ரூ.979 ஆக நிர்ணயம்   காஸ் சிலிண்டர் விலைகள் மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை, உற்பத்தி மற்றும் உள்ளூரில் காஸ் சிலிண்டர்களுக்கான தேவை, ஆலைகளின் உற்பத்தித்திறன் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.   அதன்படி நடப்பு 2018, நவம்பர் மாதத்திற்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு, ரூ.979 ஆக நிர்ணயித்துள்ளது. இது, முந்தைய அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 62.50 அதிகமாகும
எகிறியது காஸ் சிலிண்டர் விலை! பட்ஜெட்டில் துண்டு!!

எகிறியது காஸ் சிலிண்டர் விலை! பட்ஜெட்டில் துண்டு!!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தசரா, தீபாவளி என பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும் நிலையில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் வகையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் 916.50 ரூபாயாக உயர்ந்தது.   வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, உற்பத்தி, உள்நாட்டில் சிலிண்டர்களுக்கான தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களின் சிண்டிகேட் கமிட்டி இதன் விலையை நிர்ணயம் செய்து வருகிறது.   வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 320 ரூபாய் வரை மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி விடுகிறது. அதனால், முழு தொகையை காஸ் முகவர்களிடம் செலுத்தி, சிலிண்டரை பெற்று வருகின்றனர்.   கடந்த செப்டம்ப
பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.30 உயர்வு!

பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.30 உயர்வு!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  பெட்ரோல், டீசல் விலைகளைத் தொடர்ந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.30.50 அதிகரித்து, நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு ரூ. 858.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.   வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கப்படுவதால், காஸ் ஏஜன்சியிடம் இருந்து வாடிக்கையாளர்கள் முழு தொகையை செலுத்தி காஸ் சிலிண்டரை பெற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், சந்தை தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றைப் பொறுத்து மாதந்தோறும் சமையல் காஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது.   அதன்படி நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.858.50 ஆக நிர்ணயிக்கப்பட்ட