Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: doctors

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமா?; விசாரணை ஆணையத்திடம் சொல்லலாம்

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமா?; விசாரணை ஆணையத்திடம் சொல்லலாம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களிடம் உள்ள தகவல்களை எழுத்து மூலமாக வரும் 30ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப். 22ம் தேதி, உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த அவர், டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் வேறு சிலரும் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். கடந்த செப்டம்பர் 25ம் தேதி இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அ
ஜெயலலிதா மரணம்: மாஜி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்

ஜெயலலிதா மரணம்: மாஜி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு செப். 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாள்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி, கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இறந்தார். இதையடுத்து, உள்கட்சி பூசல்களால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது. எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைய வேண்டுமெனில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட்
முதல்வர் மருத்துவக்குழு டாக்டர்கள் குறைப்பு:  ஓரவஞ்சனை  ஏன்?

முதல்வர் மருத்துவக்குழு டாக்டர்கள் குறைப்பு: ஓரவஞ்சனை ஏன்?

கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது முதல்வருடன் பின்தொடர்ந்து செல்லும் மருத்துவக்குழுவின் பலம் திடீரென்று குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர் போன்ற முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லும்போது, அவர்களுக்கு 'ஹை செக்யூரிட்டி' போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். தவிர, அந்தந்த மாவட்டக் காவல்துறையினரும் பாதுகாப்புக்குச் செல்வது நடைமுறை. போலீஸ் பந்தோபஸ்து தவிர, விஐபிக்களை பின்தொடர்ந்து மருத்துவக்குழுவினர்களுடன் கூடிய ஓர் ஆம்புலன்ஸ் வாகனமும் செல்லும். அந்த வாகனத்தில் அவசர சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டு இருக்கும். பொதுவாக, இருதயவியல் மருத்துவர், பொது மருத்துவர், சிறுநீரகவியல் மருத்துவர், எலும்புமுறிவு மருத்துவர் மற்றும் இவர்களுடன் ஒரு மயக்கவியல் மருத்துவரும் உடன் செல்வர். இவ
ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே! செய்வீர்களா?

ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே! செய்வீர்களா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைப்பு முடிந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் பேச்சு செயல்வடிவம் பெறுமா? என்பதில் தொண்டர்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். அதன்பிறகு, ஒன்றரை கோடி தொண்டர்கள் பலமிக்க அதிமுகவை கைப்பற்ற 'சசிகலா அன்டு கோ' கடும் முஸ்தீபுகளில் இறங்கியது. ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதெல்லாம் தற்காலிக முதல்வராக ருசி கண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அந்த அரியணையை நிரந்தரமாக்கிக் கொள்ள உள்ளூர ஆசை இருந்து கொண்டே இருந்தது. இதை மோப்பம் பிடித்துவிட்ட மன்னார்குடி தரப்பு, அவர் வாயாலேயே சசிகலாவை முதல்வர் பதவியேற்க அழைக்கும்படி ஆளுநரிடம் சொல்ல வைத்தது. ஆனால், ஆசை யாரை விட்டு வைத்தது?. சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கும்பலுடன் மோத முட