Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: disconnected

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பலி: அலட்சியத்தால் இரையான அவலம்!

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பலி: அலட்சியத்தால் இரையான அவலம்!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இரண்டு சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாயினர். சிறுமிகள் பலி: சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரைச் சேர்ந்த பாவனா (11), யுவஸ்ரீ (10) ஆகியோர் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர். வடகிழக்கு பருவமழை காரணாக அப்பகுதியில் பள்ளிக்கு இன்று (நவம்பர் 1, 2017) விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் இரண்டு சிறுமிகளும் இன்று மதியம் வீடு அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். தெருவோரம் இருந்த மின்பெட்டியில் (Electricity Piller Box) இருந்து ஒரு மின்சார கம்பி அறுந்து மண் தரையில் நீண்டு கிடந்தது. அதை அறியாமல் மதித்த சிறுமிகள், மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு சிறுமி மின்சாரம் பாய்ந்ததில் பலத்த கா
எடப்பாடி பழனிசாமி இப்படி; மம்தா பானர்ஜி அப்படி!

எடப்பாடி பழனிசாமி இப்படி; மம்தா பானர்ஜி அப்படி!

இந்தியா, சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றுக்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கிய காவி கும்பலை எதிர்க்கும் மிகப்பெரும் சக்தியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உருவெடுத்துள்ளார். மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களுடனும் இணைக்கும் படி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதேபோல் சிம் கார்டுகளை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்துவதைத் தடுக்க மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ''நான் என்னுடைய மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க மாட்டேன். ஆதார் இணைக்குமாறு கட்டாயப்படுத்துவது தனிநபர் உரிமை மீது நடத்தப்படும் தாக்குதலாகும். இதனால் என் மொபைல் எண் இணைப்பை துண்டித்தாலும் பரவாயில