Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: dinakaran

டிசம்பர் வரைக்கும்தான் எடப்பாடி ஆட்சி;  நேரம் குறித்த தினகரன்

டிசம்பர் வரைக்கும்தான் எடப்பாடி ஆட்சி; நேரம் குறித்த தினகரன்

தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
வரும் டிசம்பர் மாதத்திற்குள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விடுவோம் என்று டிடிவி தினகரன் கூறினார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக அம்மா அணி சார்பில் இன்று (அக். 15, 2017) நடந்தது. நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். பின்னர், ஊடகங்களைச் சந்தித்த அவர் கூறியது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதனை மறைத்தும், மறந்தும் விட்டு மேடை போட்டு எதை எதையோ பேசுகின்றனர். அரசு செலவில் எடப்பாடி பழனிசாமி கதை கூறிவருகிறார். இதனை பொது மக்கள் நம்ப தயாராக இல்லை. தற்போது கட்சியினர், தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் ஓபிஎஸ் யார் என்று தெரிந்து விட்டது. சட்டமன்ற கூட்ட
ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிங்கம்போல் வாழ்ந்த ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தக் கூடாது என்பதற்காகவே, அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்த ஒளிப்படங்களை சசிகலா வெளியிட மறுத்துவிட்டார் என்று அதிமுகவின் கோவை எம்பி நாகராஜன் இன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளார். கோவை எம்பியும் வழக்கறிஞருமான நாகராஜன் இன்று (29/8/17) காலை திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தார். அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவு குறித்து அவர் பேசினார். பிரிந்து கிடக்கும் டிடிவி தினகரன் அணியினரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அழைத்துப் பேச வேண்டும் என்றார். அரசியல் என்பதே சூதுதானே. சூதில் வெற்றி பெறுவதுதான் முக்கியம் என்றார். சிலரை ஒதுக்கி வைப்பதும், பின்னர் மீண்டும் சேர்த்துக் கொள்வது எல்லாமே அரசியல் ராஜ தந்திரம். ஓபிஎஸ், இந்த ஆட்சியைப்பற்றி என்னவெல்லாமோ சொன்னார். அவரை இப்போது நாங்கள் துணை முதல்வராக ஏற்கவில்லையா? ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவின
அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களில் அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா கையெழுத்திட்டு உள்ள நிலையில், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தினகரன் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் மாறி மாறி முண்டா தட்டுவதால், உச்சக்கட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது. அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (28/8/17) காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஊடகங்களை கட்சியே ஏற்று நடத்துவது, தினகரனால் நியமிக்கப்பட்ட பதவிகள் செல்லாது, தினகரனை கட்சியை விட்டு நீக்க வேண்டும், விரைவில் பொதுக்குழு&செயற்குழுவைக் கூட்டுவது என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டது தற்காலிகமானது என்றும், அவருடைய நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் குறிப்பிட
எடப்பாடி பழனிசாமி பதவி பறிப்பு: தினகரன்

எடப்பாடி பழனிசாமி பதவி பறிப்பு: தினகரன்

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டதாக, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்களால் அரசு இக்கட்டான நிலையில் உள்ளது. அக்கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ளனர். தினகரனுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் அதிரடி நடவடிக்கையாக கட்சி பொறுப்பில் உள்ளவர்களின் பதவியினை பறித்து வருகிறார். அதற்கு பதிலாக தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். திருச்சி. எம்.பி. குமார், தைரியமிருந்தால் முதல் அமைச்சரை கட்சி பதவியிலிருந்து நீக்குங்கள் என தினகரனுக்கு சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ப