
சேலம் ரவுடியை தீர்த்துக்கட்டிய 9 எம்.எம். பிஸ்டல்! பத்து ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டூமீல்!!
சேலத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த
ரவுடியை காவல்துறையினர்,
வியாழக்கிழமை (மே 2, 2019) காலையில்
நடந்த எதிர்மோதல் (என்கவுண்டர்)
தாக்குதலில் சுட்டுக்கொன்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதாலோ என்னவோ, மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சேலம் மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறையினர் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்குவதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு, முன்னாள் குற்றவாளிகள், பிணையில் வெளியே சுற்றும் ரவுடிகளின் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று அறிவுரைகளும், மென்மையான எச்சரிக்கையும் வழங்கினர்.
இது ஒருபுறம் நடந்தாலும், கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்தல், குண்டர் சட்டத்தில் அடைத்தல் போன்ற நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினர். மாநிலத்தில் வேறு எ...