Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Chennai High Court

எட்டு வழிச்சாலை திட்டத்தில் திருட்டுத்தனம்!; நீதிமன்ற உத்தரவை மதிக்காத நெடுஞ்சாலைத்துறை!! #EightLaneRoad

எட்டு வழிச்சாலை திட்டத்தில் திருட்டுத்தனம்!; நீதிமன்ற உத்தரவை மதிக்காத நெடுஞ்சாலைத்துறை!! #EightLaneRoad

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக எந்தவித பூர்வாங்க பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருட்டுத்தனமாக ஜருகுமலையில் மண் பரிசோதனை பணிகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.   பாரத்மாலா பரியோஜனா   சேலம் முதல் சென்னை வரை புதிதாக பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின்கீழ், எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. மொத்தம் 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைய உள்ள இந்த சாலைப்பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த சாலை முடிகிறது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபு
எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க இடைக்கால தடை!; உயர்நீதிமன்றம் உத்தரவு!! #EightLaneRoad #GreenFieldExpressWay

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க இடைக்கால தடை!; உயர்நீதிமன்றம் உத்தரவு!! #EightLaneRoad #GreenFieldExpressWay

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த மேலும் இரண்டு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 14, 2018) உத்தரவிட்டுள்ளது.   எட்டுவழிச்சாலை   சேலம் - சென்னை இடையே பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வந்தன. இதற்காக மொத்தம் 2343 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு, மே மாதம் முதல் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.   சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கும் எட்டு வழிச்சாலை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை வரை 277.3 கி.மீ. தூரம் வரை நீள்கிறது. இந்தத் திட்டத்துக்காக எடுக்கப்படும் நிலங்களில் 95 விழுக்காடு சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். ஏற்காடு, கல்வராயன்
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் ரத்து – ஹைகோர்ட்

சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் ரத்து – ஹைகோர்ட்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சேலத்தை அடுத்த பள்ளிக்கூடத்தானூரை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகள் வளர்மதி. சேலம் பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். இயற்கை பாதுகாப்புக்குழு என்ற அமைப்பின் சேலம் மாவட்ட பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்த அமைப்பின் சார்பில் நெடுவாசல் ஹைட்ரோகார்பன், கதிராமங்கலம் ஓஎன்ஜிசி ஆகிய திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்ததுடன், துண்டு பிரசுரங்கள் வாயிலாக மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தார். கடந்த ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அருகே இத்திட்டங்களுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல்துறையினர், அரசுக்கு எதிராக மாணவர்களைத் தூண்டி விடுவதாகவும், ஆட்சேபகரமான துண்டு பிரசுரங்களை வெளியி