Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: chahal

செஞ்சூரியன் டி-20: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி

செஞ்சூரியன் டி-20: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர்களின் ரன் குவிப்பும், பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டி செஞ்சூரியனில் நேற்று (பிப்ரவரி 21, 2018) நடந்தது. 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டுமினி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். இந்திய அணியில், தசை பிடிப்பால் அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரை வீசிய கிறிஸ் மோரீஸ்
3-வது ஒருநாள்:  சுழல் பந்து வீச்சுக்கு இரையானது தென்னாப்பிரிக்கா; இந்தியா ஹாட்ரிக் வெற்றி

3-வது ஒருநாள்: சுழல் பந்து வீச்சுக்கு இரையானது தென்னாப்பிரிக்கா; இந்தியா ஹாட்ரிக் வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்கா உடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், விராட் கோலியின் அசத்தலான சதம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் தாக்குதலால் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அரை சதம் கடந்தனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் நேற்று (பிப்ரவரி 7, 2018) நடந்தது. இதில் 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆறு போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளதால், இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடைசி டி20: இந்தியா போராடி வெற்றி;  இலங்கை ‘வாஷ் அவுட்’

கடைசி டி20: இந்தியா போராடி வெற்றி; இலங்கை ‘வாஷ் அவுட்’

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்திலும் வென்று, இலங்கை அணியை இந்தியா 'வாஷ் அவுட்' செய்தது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (டிசம்பர் 24, 2017) நடந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில் இன்றைய வெற்றி, தோல்வி இந்திய அணியை பாதிக்காது. எனினும், இலங்கை அணியை, 'வாஷ் அவுட்' செய்யும் முனைப்பில் இந்தியா களமிறங்கியது. ஒரு வெற்றியாவது பெற்று விடமாட்டோமா என்ற எதிர்பார்ப்பில் இலங்கை அணியும் களம் கண்டது. இந்திய அணியில் பந்து வீச்சாளர்கள் சாஹல், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளி க்கப்பட்டு, சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். தமிழ
இந்தூர் டி20: ரோஹித் ஷர்மா அபார சதம்; இலங்கைக்கு தர்ம அடி;  தொடரை வென்றது இந்தியா!

இந்தூர் டி20: ரோஹித் ஷர்மா அபார சதம்; இலங்கைக்கு தர்ம அடி; தொடரை வென்றது இந்தியா!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இந்தூரில் இன்று (டிசம்பர் 22, 2017) நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்திய வீரர்கள் துவம்சம் செய்தனர். அபாரமாக வெளுத்து வாங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா, குறைந்த பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். அத்துடன் இந்திய அணி தொடரையும் வென்றது.  இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடந்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் விஸ்வ பெர்ணாண்டோ, சனாகா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சதீரா சமரவிக்ரமா, சதுரங்கா டி சில்வா சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு
முதல் டி-20 கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை!; சாஹல் அபாரம்!!

முதல் டி-20 கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை!; சாஹல் அபாரம்!!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் துல்லிய தாக்குதலால், அந்த அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வீழ்த்தியது. இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுடன் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி, ஒரிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில் இன்று (டிசம்பர் 20, 2017) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கியது. லோகேஷ் ராகுல் அரை சதம்: டாஸ் வென்ற இலங்கை அணி, பனிப்பொழிவு காரணமாக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கம் தந்தனர். ரோஹித் ஷர்மா 17 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் லோகேஷ் ராகுல் அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் அடிக்கும் இரண்டாவது அரை சதம் ஆகும். ராகுல் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பரபரப்பான ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா; தொடரையும் கைப்பற்றியது

பரபரப்பான ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா; தொடரையும் கைப்பற்றியது

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அத்துடன் 2 - 1 கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் மூன்று ட்வென்டி - 20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்து அணியும் வெற்றி பெற்று 1-1 கணக்கில் சமநிலையில் இருந்தது. இன்று (அக்டோபர் 29, 2017), கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடந்தது. இந்த தொடரை எந்த அணி வெல்லப்போகிறது என்பதை நிர்ணயிக்கும் போட்டி என்பதால், ரசிகர்களிடையே பெரும் ஆரவாரம் காணப்பட்டது. மைதானமும் நிரம்பி வழிந்தது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்க