கோகுல்ராஜ் கொலை வழக்கு: சரமாரி கேள்விகளால் அரசு தரப்பு சாட்சி திணறல்! #Day2 #Gokulraj
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கேட்ட சரமாரி கேள்விகளால் அரசுத்தரப்பு சாட்சி பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.
சடலமாக கோகுல்ராஜ்...
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி வழக்கம்போல் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. மறுநாளான 24.6.2015ம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்பட்டது.
காவல்துறையினர் விசாரணையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் பழகி வந்ததால், அவர்கள் காதலித்து வருவதாக எண்ணி கோகுல்ராஜை ஒரு கும்பல் திட்டமிட்டு ஆணவக...