Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: cartoonist Bala

ரஜினி அரசியல்; பின்னணியில் பாஜக?

ரஜினி அரசியல்; பின்னணியில் பாஜக?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவது குறித்த முடிவின் பின்னணியில் பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் இருப்பதாக பரபரப்பு யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆன்மிக அரசியல் என்றதுகூட பாஜகவைத்தான் மறைமுகமாக ரஜினிகாந்த் முன்னிலைப்படுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24, 2017) ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு மூலம் டிடிவி தினகரன்தான் அன்றைய நாளை பரபரப்பில் வைத்திருந்தார். இன்றைய ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31, 2017) நடிகர் ரஜினிகாந்துக்கானதாக ஆகியிருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என கடந்த 21 ஆண்டாக நிலவி வந்த எதிர்பார்ப்புக்கு ஒருவழியாக இன்று முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ''நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆன்மிக அரசியல்தான் எனது பாதை. உண்மை, உழைப்பு, உயர்வு அதுதான் என் கொள்கை. கடந்த ஓராண்டாக அரசியல் கெட்டுவிட்டது. இந்த சிஸ்டத்தை
அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்:  கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
நெல்லை தீக்குளிப்பு நிகழ்வை சித்தரிக்கும் விதமாக முதல்வர், நெல்லை ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோரை கேலிச்சித்திரமாக வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவல்துறையினர் இன்று (நவம்பர் 5, 2017) கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் தனது மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் கடந்த அக்டோபர் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமைக்கு ஒரு குடும்பமே பரிதாபமாக பலியானது குறித்து சென்னை கோவூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது லைன்ஸ் மீடியா இணையதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டு இருந்தார். அத்துடன் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தார்.