Monday, December 11மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: By-election

குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் ‘நேர்மையான’ திருட்டு!!

குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் ‘நேர்மையான’ திருட்டு!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் களம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று (பிப். 25, 2023) மாலையுடன் பரப்புரை ஓய்கிறது. பிப். 27ம் தேதி, வாக்குப்பதிவு நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், திமுக, அதிமுக இடையேதான் வழக்கம்போல் நேரடி போட்டி நிலவுகிறது.   மாற்று அரசியலை முன்னெடுக்கும் பாமக தலைவர் ராமதாஸ், நாம் தமிழர் சீமான் போன்றோர், இடைத்தேர்தலே அவசியமற்றது எனத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.   ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் களத்தில் முண்டா தட்டுவது என்னவோ திமுகதான். கடந்த 21 மாத திமுக ஆட்சிக்கு உரைகல்லாக இந்த இடைத்தேர்தலை ஆளும்தரப்பு கருதுகிறது. அதனால் ம
“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

அரசியல், இந்தியா, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய வருமானவரி சோதனையை இன்றைய (நவம்பர் 9, 2017) தினம் சந்தித்திருக்கிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் உறவுகளை குறி வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த சோதனைதான் அனைத்து ஊடகங்களிலும் 'பிக் பிரேக்கிங்' சேதி. சசிகலாவின் நேரடி உறவுகளான நடராஜன், திவாகரன், மகாதேவன், சுந்தரவதனம், டிடிவி தினகரன், விவேக் ஜெயராமன், ஜெயானந்த், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மருத்துவர் வெங்கடேஷ், மருத்துவர் சிவக்குமார் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் பிரதான சோதனைக் களங்களாகின. இவற்றுடன் ஜெயா டிவி, டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை, கிருஷ்ணபிரியாவின் என்ஜிஓ அலுவலகங்களும் தப்பவில்லை. மன்னார்குடி கும்பலின் ஆதரவாளர்களான பெங்களூர் புகழேந்தி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினரும் வழக்கறிருமான நாமக்கல் செந்தில், கோவை மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் உதவி
டிசம்பர் வரைக்கும்தான் எடப்பாடி ஆட்சி;  நேரம் குறித்த தினகரன்

டிசம்பர் வரைக்கும்தான் எடப்பாடி ஆட்சி; நேரம் குறித்த தினகரன்

தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
வரும் டிசம்பர் மாதத்திற்குள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விடுவோம் என்று டிடிவி தினகரன் கூறினார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக அம்மா அணி சார்பில் இன்று (அக். 15, 2017) நடந்தது. நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். பின்னர், ஊடகங்களைச் சந்தித்த அவர் கூறியது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதனை மறைத்தும், மறந்தும் விட்டு மேடை போட்டு எதை எதையோ பேசுகின்றனர். அரசு செலவில் எடப்பாடி பழனிசாமி கதை கூறிவருகிறார். இதனை பொது மக்கள் நம்ப தயாராக இல்லை. தற்போது கட்சியினர், தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் ஓபிஎஸ் யார் என்று தெரிந்து விட்டது. சட்டமன்ற கூட்ட
ஜெயலலிதா தொகுதியில் டிசம்பர் 31க்குள் இடைத்தேர்தல்; ஆணையம் அறிவிப்பு

ஜெயலலிதா தொகுதியில் டிசம்பர் 31க்குள் இடைத்தேர்தல்; ஆணையம் அறிவிப்பு

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ரத்து: அப்போது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகள் இருந்தன. இபிஎஸ் அணியின் சார்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி தரப்பில் மதுசூதனன், பிற கட்சி வேட்பாளர்கள் உள்பட 62 பேர் போட்டியிட்டனர். டிடிவி தினகரன் தரப்பில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக ஆயிரக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் கிளம்பின. அந்த புகாரின்பேரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. அந்த சோதனையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. உரிய நேரத்தில் தேர்தல் நட