Friday, April 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: BJP

எஸ்மா: மீண்டும் திரும்புகிறது 2003?

எஸ்மா: மீண்டும் திரும்புகிறது 2003?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை, எஸ்மா / டெஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ எனப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், அமைச்சுப்பணி ஊழியர்களின்றி முடங்கிக் கிடக்கின்றன. அனைத்து மாவட்டங்களிலும், திங்கள் கிழமைகளில் பல்வேறு பணிகளுக்காக அரசு அலுவலக...
மத்திய அமைச்சரவையில் அதிமுக?

மத்திய அமைச்சரவையில் அதிமுக?

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆபரேஷன் தமிழ்நாட்டின் அடுத்த நகர்வாக, அதிமுகவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் படலம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது அதிமுகவை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கால் பதிப்பதுதான் பாஜகவின் ஆகப்பெரிய சாதனையாக இருக்க முடியும். இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளின் கோட்டையாகப் பார்க்கப்படும் கேரளாவில்கூட பரவலாக காவி நிறம் தென்படத் தொடங்கிவிட்டது. கர்நாடகாவிலோ காங்கிரஸ் அல்லது பாஜக என்ற இரு துருவ அரசியல் இருந்து வருகிறது. ஆந்திராவில் காலூன்ற வசதியாக, அந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுவிட்டது. தென்னிந்தியாவில் பாஜகவினர் நுழைய முடியாத எஃகு கோட்டை என்றால் இன்னமும் அது, தமிழ்நாடு மட்டும்தான். இப்போது தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழ...
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே – திரை இசையில் வள்ளுவம் #தொடர்

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே – திரை இசையில் வள்ளுவம் #தொடர்

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
திரை இசைப்பாடல்களில் பொதிந்திருக்கும் குறள் இன்பத்தை வெளிக்கொணர்வதே இத்தொடரின் நோக்கம். இந்த பகுதியில் பெரும்பாலும் காதல் பாடல்களே இடம் பெற்று வந்தன. இந்த முறை அதில் சிறு மாற்றம். இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நேரம் இது. மாணவர்களுக்கு இந்தத் தொடரின் மூலம் சில செய்திகளைச் சொல்லலாம். இரண்டாவது காரணம், ஜூன் 24ம் தேதி இளங்கம்பன் கண்ணதாசன் பிறந்த தினம். நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். ''பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை'' என்ற பொய்யாமொழியன், செல்வத்தை ஒருபோதும் உடைமையாகச் சொன்னதில்லை. அது வரும்; போகும். நிலையற்றது. அவன், ஊக்கம் உடைமையைத்தான் உண்மையான உடைமை என்கிறான். அதனால்தானோ என்னவோ அய்யன் வள்ளுவன், ஊக்கமுடைமையை பொருட்பாலில் வைத்துப் பாடியிருக்கிறான். ஒருவனுடைய ஊக்கம் எப்படி இருக...