கமல்ஹாசனின் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது: சங்கர் அறிவிப்பு
கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் பெரும் வெற்றி பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.
கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக வெளிப்படையாகவே சொல்லி வருகிறார். தற்போது அரசியல் கட்சிக்கான பெயர், கொள்கை முடிவுகள் வகுக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட நேர்ந்தால், திரைத்துறையில் இருந்து விலகிவிடுவதாகவும் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து, பெரிய வரவேற்பை பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவரும், இயக்குநர் சங்கரும் முடிவு செய்துள்ளனர். தற்போது ரஜினியின் 2.0 பட வேலைகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் சங்கர், அடுத்து அஜித்குமார் அல்லது கமல்ஹாசன் ஆகியோரில் ஒருவரை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவின.
கமல்ஹாசனுடன் இணைவதாக இரு...