போட்டுக்கொடுத்த மேயர்… மாட்டிக்கொண்ட அமைச்சர்…!
திமுக கூட்டணியை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆளுங்கட்சி கவனம் செலுத்தி வருகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்திடம் டிக்கெட் கேட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதையடுத்து, விருப்ப மனு அளித்தவர்களிடம் தொகுதிவாரியாக நேர்காணல் நடந்து வருகிறது.
திமுக நேர்காணல் எப்படி நடக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்ள அண்ணா அறிவாலயம் வட்டாரத்தில் ஒரு விசிட் அடித்தோம்.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு, கட்சி நிர்வாகிகள் கூட்டம், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர்பான விளம்பர ஷூட்டிங் என பல்வேறு 'டைட்' ஷெட்யூல்களுக்கு இடையிலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படு சுறுசுறுப்பாக இயங்கி வருவதா...


