Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Ambani

போர் விமானம் கொள்முதலில்  35 ஆயிரம் கோடி ஊழல்?;  மோடி மீது அடுத்த அட்டாக்!

போர் விமானம் கொள்முதலில் 35 ஆயிரம் கோடி ஊழல்?; மோடி மீது அடுத்த அட்டாக்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்திய ராணுவத்திற்கு ரஃபேல் ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மூலம் ரூ.35 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புதிய குற்றச்சாட்டை காங்கிரஸ் கிளப்பி இருக்கிறது. இந்த புகாருக்காவது பிரதமர் மோடி பதில் அளிப்பாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. ஊழலை ஒழிப்பேன் என்ற முழக்கத்துடன் பிரதமர் அரியணையேறிய பாஜகவின் நரேந்திர மோடி, வல்லரசு கனவை நனவாக்குவதுதான் முதல் லட்சியம் என்றார். அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணமும், இந்தியாவுக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்றே அந்தப் பயணங்கள் குறித்த மதிப்பீட்டை மக்களிடம் பதிய வைத்து வருகிறது பாஜக. காவி கரங்களில் ஊழல் கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக, அறிவியல்பூர்வமான கொள்ளைகளில் ஈடுபட திட்டமிட்டு, அதற்கேற்ப சட்டத்தையும் இயற்றி வருவது கண்கூடு. உதாரணத்திற்கு, அரசியல் கட்சிகளுக்கு ரூ.20
நொறுங்கும் ஏழைகள்; அம்பானியின் சொத்து மட்டும் உயர்வது எப்படி?

நொறுங்கும் ஏழைகள்; அம்பானியின் சொத்து மட்டும் உயர்வது எப்படி?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடிப்பில் வெளியான 'சிவாஜி' படத்தில், ரஜினி அறிமுகம் ஆகும் காட்சி அது. விமான நிலையத்தில் இருந்து வெளியேறி, காரில் ஏறும்போது பக்கவாட்டு கண்ணாடியை தட்டியபடி ஒரு பெண் கையில் தட்டேந்தி நிற்பார். அப்போது ரஜினி சொல்வார், ''பணக்காரர் மேலும் பணக்காரர் ஆகிறார். ஏழைகள் மேலும் ஏழைகளாகிட்டே இருக்கிறார்கள் (Rich get Richer and Poor get Poorer)'' என ஆங்கிலத்தில் ஆதங்கத்துடன் கூறுவார். சமீபத்திய ஃபோர்ப்ஸ் இந்தியா (FORBES INDIA) பத்திரிகையின் அறிக்கையும் அந்த வசனத்தைதான் நினைவூட்டுகிறது. உலகளவில் பிரபலமான வணிக பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்திய பணக்காரர்களின் பட்டியலை இரு நாள்களுக்கு முன்பு வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்தியாவின் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 38 பில்லியன் டாலர்கள் (2.47 லட்சம் கோடிகள