Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: விவசாயிகள் எதிர்ப்பு

எங்களுக்கு குடும்பத்தோடு சமாதி கட்டிவிடுங்கள்!; எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மீண்டும் குமுறல்!!

எங்களுக்கு குடும்பத்தோடு சமாதி கட்டிவிடுங்கள்!; எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மீண்டும் குமுறல்!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்காக விவசாய நிலத்தை எடுத்துக்கொண்டு அரசு தருவதாகச் சொல்லும் வீட்டு மனைப்பட்டா நிலத்தில் விவசாயிகளுக்கு குடும்பத்துடன் சமாதி கட்டிவிடச் சொல்லுங்கள் என்று வருவாய்த்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினர்.   எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டா நிலத்தில், விவசாயிகளை குடும்பத்தோடு வைத்து சமாதி கட்டிவிடுங்கள் என்று அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் மீண்டும் குமுறலை வெளிப்படுத்தினர். சேலத்தை அடுத்த குள்ளம்பட்டி கிராமத்தில் நேற்று காலை இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள், சேலம் - சென்னை இடையில் அமையவுள்ள எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கினர்.   வாழப்பாடி
சேலம்: எட்டு வழிச்சாலைக்கு எதிராக மனித உரிமை கமிஷனில் புகார்!

சேலம்: எட்டு வழிச்சாலைக்கு எதிராக மனித உரிமை கமிஷனில் புகார்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் கடிதம் அளிக்கும் நூதன போராட்டத்தை ராமலிங்கபுரம், குப்பனூர் கிராம விவசாயிகள் கையிலெடுத்துள்ளனர்.   சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் தனியார் பட்டா நிலங்கள் 186 ஹெக்டேர் உள்பட 248 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. தனியார் நிலங்கள் பெரும்பாலும் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் என்பதாலும், சந்தை மதிப்பைக்காட்டிலும் அடிமாட்டு விலைக்கு அரசு இழப்பீடு வழங்குவதாலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எட்டு வழிச்சாலை அமையவுள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களைவிட சேலம் மாவட்ட மக்கள் தொடர்ந்து இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். நிலம் அளக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிடுதுவது, தற்கொலை போராட்டம் என நேரடியாக வ