Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வாக்காளர்கள்

சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 81.50 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக டிசம்பர் 27, 2019ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை (டிச. 30, 2019) வாக்குப்பதிவு நடந்தது.   சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில், முதல்கட்டமாக 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி தேர்தல் நடந்தது. அதில், 81.68 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி
சேலம்: எப்படி நடந்தது முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்?

சேலம்: எப்படி நடந்தது முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், டிசம்பர் 27ம் தேதி நடந்த முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு படையெடுத்து வந்தது, வாக்குப்பதிவு அதிகரிக்க முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டுடன் முடிந்த நிலையிலும், இட ஒதுக்கீடு, வார்டுகள் மறு வரையறை உள்ளிட்ட நீதிமன்ற வழக்குகளால், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது காலதாமதம் ஆனது. மூன்று ஆண்டுகள் பல்வேறு வழக்குகளைக் கடந்து, தற்போது இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.   முதல்கட்டமாக மாநிலம் மு-ழுவதும் 156 ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 2019ம் தேதி தேர்தல்
சேலம்: உள்ளாட்சி தேர்தலில் 17216 பேர் வேட்புமனு; இன்று பரிசீலனை!

சேலம்: உள்ளாட்சி தேர்தலில் 17216 பேர் வேட்புமனு; இன்று பரிசீலனை!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 17216 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீது இன்று (டிச. 17) பரிசீலனை நடக்கிறது. கடைசி நாளான நேற்று ஒரே நாளில், 8219 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.   தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ம் தேதியும் நடக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் இத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, கடந்த 9ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, கடைசி நாளான நேற்று (டிசம்பர் 16, 2019) மட்டும் 29 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 163 பேரும், 20 ஒன்றியங்களில் உள்ள 288 ஊராட
ஜெயலலிதா தொகுதியில் டிசம்பர் 31க்குள் இடைத்தேர்தல்; ஆணையம் அறிவிப்பு

ஜெயலலிதா தொகுதியில் டிசம்பர் 31க்குள் இடைத்தேர்தல்; ஆணையம் அறிவிப்பு

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ரத்து: அப்போது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகள் இருந்தன. இபிஎஸ் அணியின் சார்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி தரப்பில் மதுசூதனன், பிற கட்சி வேட்பாளர்கள் உள்பட 62 பேர் போட்டியிட்டனர். டிடிவி தினகரன் தரப்பில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக ஆயிரக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் கிளம்பின. அந்த புகாரின்பேரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. அந்த சோதனையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. உரிய நேரத்தில் தேர்தல் நட