Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: யோகி ஆதித்யநாத்.

ஊடகங்களை ஒடுக்க பாஜக திட்டம்!; தொடர் தோல்விகளால் விரக்தி!!

ஊடகங்களை ஒடுக்க பாஜக திட்டம்!; தொடர் தோல்விகளால் விரக்தி!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஆட்சி நிர்வாகத் தளத்தில் ஏற்பட்டுள்ள தொடர் தோல்விகள் காரணமாக, டிஜிட்டல் ஊடகங்களை ஒடுக்கும் முடிவில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இணைய ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத்தெரிகிறது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும்கூட பாஜக, 282 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்தது. எனினும், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தது. இந்து தேசியத்தை அமைக்கும் முகமாக ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே வரி சித்தாந்தங்களை நோக்கி நகர்ந்தது. பாஜக வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று இடதுசாரிகளும், காங்கிரஸூம் எச்சரித்தனவோ அதே வறட்சியான சித்தாந்தங்களை நோக்கி பாஜக நடைபோட்டது. விளைவு, கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த 11 இடைத்தேர்களில் பத்து மக்களவை தொகுதிகளை இழந்துள்ளது.
தாயின் சுவாசத்திற்காக ஆக்ஸிஜன் சிலிண்டர் சுமக்கும் மகன்; ஆம்புலன்ஸ் வராததால் அவதி

தாயின் சுவாசத்திற்காக ஆக்ஸிஜன் சிலிண்டர் சுமக்கும் மகன்; ஆம்புலன்ஸ் வராததால் அவதி

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்தியாவில் எந்த ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் என்றாலும், சந்தேகமே இல்லாமல் அத்தகைய நிகழ்வுகள் நடக்கும் இடம் உத்தரபிரதேச மாநிலம்தான் என்று சட்டென சொல்லி விடலாம். மாட்டிறைச்சி உண்போரை தெருவில் இழுத்துப்போட்டு அடித்துக் கொல்வது; பசுமாடுகளை ஏற்றிச்செல்லும்போது வாகன ஓட்டுநரை சாலையில் இழுத்து வந்து சாகடிப்பது; கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனைக்குச் சென்ற ஹிந்து பெண்ணை ஊர் முன்னிலையில் பெட்ரோல் ஊற்றி எரிப்பது; சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞரை உருட்டுக் கட்டையால் கதறக் கதற தாக்கிக் கொல்வது; ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 70க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியானது; ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க மறுத்ததால் தாயின் சடலத்தை துணியில் சுற்றி மகனே சுமந்து செல்வது... என உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் மாதத்திற்கு ஒருமுறையாவது நடக்கும். இப்போதும் அதேபோன்ற ஒர