Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மேகாலயா

மேகாலயா: ஜனநாயகம் என்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்று பொருள்!

மேகாலயா: ஜனநாயகம் என்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்று பொருள்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாஜகவின் அதிகாரப் பசி, ஜனநாயகத்தை தொடர்ந்து கேலிக்கூத்தாக்கி வருவது, தேர்தல் அரசியல் மீதான நம்பகத்தன்மையை வெகுசன மக்களிடையே நீர்த்துப் போகச் செய்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டன. திரிபுராவில் மட்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சி 35 தொகுதிகளில் வென்று இருந்தது. ஆனால் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் பாஜகவால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. நாகாலாந்து மாநிலத்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி 18 இடங்களிலும், அதனுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்றது. இக்கட்சிகளுக்கு ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு வழங்க, 32 எம்எல்ஏக்களுடன் தேசியவாத ஜனநாயக முற்ப
திரிபுராவில் ஆட்சியமைக்கிறது பாஜக;  நாகாலாந்து, மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை

திரிபுராவில் ஆட்சியமைக்கிறது பாஜக; நாகாலாந்து, மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
திரிபுரா மாநிலத்தில் நீடித்து வந்த கால் நூற்றாண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முடிவுரை எழுதிவிட்டு, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதன்படி, திரிபுராவில் கடந்த பிப்ரவரி 18ம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் தலா 59 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் இன்று (மார்ச் 3, 2018) எண்ணப்பட்டன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. திரி
21 மில்லியன் ‘தேவையற்ற குழந்தைகள்’!; பெண்களை வெறுக்கும் இந்திய சமூகம்

21 மில்லியன் ‘தேவையற்ற குழந்தைகள்’!; பெண்களை வெறுக்கும் இந்திய சமூகம்

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்தியாவில், 21ம் நூற்றாண்டிலும் ஆண் குழந்தைகளை விரும்பும் சமூகமே அதிகளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் நடந்த ஓர் ஆய்வு, இந்தியாவில் 21 மில்லியன் 'தேவையற்ற பெண் குழந்தைகள்' இருப்பதாக கூறுகிறது. உலகளவில் பாலின சமத்துவத்தில் ஐஸ்லாந்து நாடு முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 1.1.2018 முதல் அந்த நாட்டில், பெண் ஊழியர்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிக ஊதியம் கொடுப்பதைக்கூட தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது. அதுபோன்ற உயரிய சிந்தனைகளை எட்டிப்பிடிக்க, இந்தியாவிற்கு இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் ஆச்சர்யம் இல்லை. அண்மையில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு அப்படித்தான் சொல்ல வைக்கிறது. ஆனால், நாம்தான் மூச்சுக்கு முன்னூறு முறை பூமி முதல் நதிகள் வரை பெண்களின் பெயரால் அழைப்போம். அதுவே, ஆகப்பெரிய நகைமுரண். பாலின சமத்துவம் குறித்து நாம் என்னதான் டிவி, பத்திரி