Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பொதுப்பங்கு

கடும் எதிர்ப்புக்கு இடையே எல்ஐசி ஐபிஓ பெரும் வெற்றி! வெளியீட்டு அளவை விட 3 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன!!

கடும் எதிர்ப்புக்கு இடையே எல்ஐசி ஐபிஓ பெரும் வெற்றி! வெளியீட்டு அளவை விட 3 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடும் எதிர்ப்புக்கு இடையே, பங்குச்சந்தையில் களமிறங்கிய எல்ஐசியின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) பெரும் வெற்றி அடைந்துள்ளது. பொதுப்பங்கு வெளியீட்டு அளவைக் காட்டிலும் சுமார் மூன்று மடங்கு வரை கூடுதலாக பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.   இந்திய அரசு தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும் நிலையில், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்தது. இதற்கு ஊழியர்கள் சங்கங்கள், இடதுசாரிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், கொள்கை முடிவில் இருந்து இந்திய அரசு பின்வாங்கவில்லை. எல்ஐசி பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்ட இந்திய அரசு உத்தேசித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ), என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ சந்தைகளில் மே 4ம் தேதி தொடங்கியது.   ரஷ
ஷேர் மார்க்கெட்: பொதுப்பங்கு வெளியீட்டில் களம் இறங்கிய ஸ்டார் ஹெல்த்!

ஷேர் மார்க்கெட்: பொதுப்பங்கு வெளியீட்டில் களம் இறங்கிய ஸ்டார் ஹெல்த்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மருத்துவக் காப்பீட்டுத் துறையில் கணிசமான சந்தைப் பங்களிப்பை வைத்திருக்கும் ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம், நவ. 30ம் தேதி பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.   பங்குசந்தைகளில் ஒரு நிறுவனம் முதன்முதலில் பங்குகளை வெளியிட்டு, முதலீடுகளை திரட்டுவதைத்தான் பொதுப்பங்கு அதாவது, ஐபிஓ என்கிறார்கள். இதுபோன்ற பொதுப்பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு, குறைந்த விலையில் பங்குகள் கிடைப்பதுடன், பட்டியலிடப்படும் நாளன்று பெரும்பாலும் கணிசமான லாபமும் கிடைத்துவிடும். அதனால் முதலீட்டாளர்களிடையே எப்போதும் ஐபிஓக்களுக்கு வரவேற்பு இருக்கும்.   இந்நிலையில், ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவ. 30) ஐபிஓவை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் பங்குச்சந்தை தரகரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா இந்நிறுவனத்தின் ப
பேடிஎம் ஐபிஓ வெளியீடு! 18000 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டம்; முதல் நாளிலேயே அமர்க்களம்!

பேடிஎம் ஐபிஓ வெளியீடு! 18000 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டம்; முதல் நாளிலேயே அமர்க்களம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
முதலீட்டாளர்களிடையே பெரிதும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட பேடிஎம் பொதுப்பங்கு (ஐபிஓ) வெளியீடு திங்கள்கிழமை (நவ. 8) தொடங்கியது. டிஜிட்டல் பேமென்ட் மற்றும் நிதிச்சேவை வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பேடிஎம், வணிக விரிவாக்கத்திற்காக பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் 18300 கோடி ரூபாய் திரட்ட உத்தேசித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரும் பொதுப்பங்கு வெளியீடாக பேடிஎம் ஐபிஓ கருதப்படுகிறது. கடைசியாக, கடந்த 2010ம் ஆண்டு கோல் இந்தியா ஐபிஓ மூலம் 15475 கோடி ரூபாய் திரட்டப்பட்டதே பெரிய ஐபிஓ ஆக இருந்தது. மோர்கன் ஸ்டேன்லி இண்டியா, கோல்டுமேன் சாக்ஸ் (இண்டியா) செக்யூரிட்டீஸ், ஆக்சிஸ் கேப்பிடல், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஜேபி மோர்கன் இண்டியா, சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இண்டியா, ஹெச்டிஎப்சி
ஸ்டாக் மார்க்கெட்டில் இன்று பட்டியலிடப்படுகிறது சொமேட்டோ பங்குகள்! முதலீட்டாளர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு!!

ஸ்டாக் மார்க்கெட்டில் இன்று பட்டியலிடப்படுகிறது சொமேட்டோ பங்குகள்! முதலீட்டாளர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
ஆன்லைன் உணவு விநியோகத்தில் முன்னணியில் உள்ள சொமேட்டோ நிறுவனத்தின் பொதுப்பங்குகள், இந்திய பங்குச்சந்தைகளில் இன்று (ஜூலை 23) பட்டியலிடப்படுகின்றன. இந்நிறுவனம், வியாபார விரிவாக்கத்திற்காக பொதுப்பங்குகள் வெளியீடு மூலம் 9375 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்திருந்தது. இதையடுத்து, இந்திய பங்குச்சந்தைகளில் ஜூலை 14 - 16ம் தேதி வரை ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் முதன்முதலில் களமிறங்கிறது. ஒரு பங்கின் விலை 74 - 76 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. கொரோனா ஊரடங்கு காலத்திலும் கடந்த நிதி ஆண்டு கணிசமாக லாபம் ஈட்டி இருந்தது. எனினும், அந்நிறுவனத்துக்கு கடன் சுமையும் இருந்து வருகிறது. இதனால் பொதுப்பங்கு எந்தளவுக்கு வெற்றி பெறும் என்ற தடுமாற்றமான நிலை ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், எதிர்பாராத வகையில் ச
ரயில்டெல் ஐபிஓ நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது!

ரயில்டெல் ஐபிஓ நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஐபிஓ வெளியீடு வெற்றியடைந்துள்ளது. பொதுப்பங்குகள் வேண்டி சில்லரை முதலீட்டாளர்கள் தரப்பில் 42.39 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. வெள்ளிக்கிழமை (பிப். 26) இந்நிறுவனப் பங்குகள் இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது. ரயில்வே துறையின் ஓர் அங்கமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், ஒரு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வழங்குநர் ஆகும். இத்துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது.   இந்நிறுவனம், 819.24 கோடி ரூபாய் நிதி திரட்டும் நோக்கில் முதன்முதலாக பிப். 16ம் தேதி ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. மினிமம் லாட் சைஸ் 155 பங்குகள் ஆகும். ஒரு பங்கின் விலை 94 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டது.