Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: டிஎன்பிஎஸ்சி

எப்படி இருந்தது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு? தேர்வர்கள் சொல்வது என்ன?

எப்படி இருந்தது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு? தேர்வர்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ போட்டித்தேர்வு வினாத்தாள் ஓரளவு எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.   தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5529 பணியிடங்களை நிரப்புவதற்கான அரசுப்பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போட்டித்தேர்வை சனிக்கிழமை (மே 21) நடத்தியது. மாநிலம் முழுவதும், 4012 மையங்களில் நடந்த இத்தேர்வை, 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். சேலம் மாவட்டத்தில், மொத்தம் 161 மையங்களில், 63437 பேர் தேர்வு எழுதினர். மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பாலபாரதி தேர்வு மையத்தில் நேரில் ஆய்வு செய்தார். முறைகேடுகளை தடுக்க, மாவட்டம் முழுவதும் 12 பறக்கும் படைகளும், 55 கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த இரண்டு ஆண்டாக
1199 குரூப்-2 பணியிடங்களுக்கு ஆளெடுப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

1199 குரூப்-2 பணியிடங்களுக்கு ஆளெடுப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

சேலம், தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொகுதி-2 பிரிவின் கீழ் வரக்கூடிய 1199 பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று (ஆகஸ்ட் 10, 2018) வெளியிட்டுள்ளது.   அதிகபட்சமாக கூட்டுறவுத்துறையில் 599 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், வேளாண்மைத் துறையில் 118 மேற்பார்வையாளர் / இளநிலை கண்காணிப்பாளர் பணியிடங்களும், உள்ளாட்சித் தணிக்கைத்துறையில் 97 உதவி ஆய்வாளர் பணியிடங்களும், பால் வளத்துறையில் 48 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், தொழிலக கூட்டுறவு சங்கங்களில் 30 கூட்டுறவு அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.   பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி), முதன்மைத் தேர்வு (மெயின்), நேர்காணல் ஆகிய மூன்று படிநிலைகள் மூலம் இப்ப
டிஎன்பிஎஸ்சி பரிதாபங்கள்: மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க!

டிஎன்பிஎஸ்சி பரிதாபங்கள்: மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-4 போட்டித்தேர்வு வழக்கம்போல் பல்வேறு குளறுபடியான வினாக்களால், வேலை தேடும் இளைஞர்களின் சாபத்தை அள்ளிக்கட்டிக் கொண்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி ஆணையத் தலைவராக முன்னாள் டிஜிபி நட்ராஜ் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு புதிய முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் தலைவராக இருந்தபோது குரூப்-2 பிரிவில் இருந்த சில பணியிடங்களை குரூப்-1 தரத்திற்கு கொண்டு சென்றார். குரூப்-2 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியிடங்களை 'குரூப்-2 ஏ' என்றும், அப்பணியிடங்களை ஒருங்கிணைந்த சார்நிலை பணித்தொகுதியாகவும் மாற்றினார். அண்மையில், குரூப்-4 எழுத்தர் நிலையிலான தேர்வும், கிராம நிர்வாக அலுவலர் தேர்வும் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 11, 2018) நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தே
பத்தாவது படித்திருந்தால் போதும்!; 9000 அரசு பணியிடங்கள் காத்திருக்கு!!

பத்தாவது படித்திருந்தால் போதும்!; 9000 அரசு பணியிடங்கள் காத்திருக்கு!!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாடு அரசில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 9 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன் போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தமிழக அரசு குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) காலியிடங்களை நிரப்புவதற்கு தனித்தனியாக போட்டித்தேர்வு நடத்தி வந்தது. இனி, அந்தப்பணியிடங்கள் அனைத்திற்கும் 'ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-4' (சிசிஎஸ்இ குரூப்-4) என்ற பெயரில் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று அண்மையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசில் குரூப்-4 பிரிவில் காலியாக உள்ள 9351 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை இன்று (நவம்பர் 14, 2017) அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்டபடி ம