Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: டிஎன்ஏ

தடம் – விமர்சனம்! ‘ஓருரு இரட்டையர்களின் சடுகுடு ஆட்டம்!’

தடம் – விமர்சனம்! ‘ஓருரு இரட்டையர்களின் சடுகுடு ஆட்டம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'தடையறத்தாக்க', 'மீகாமன்' வரிசையில் இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இருந்து வந்திருக்கும் மற்றுமொரு சிறந்த படைப்பு, 'தடம்'. அண்மைக்காலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து இருக்கிறார், அருண்விஜய். அந்த பட்டியலில் அவரின் ஆகச்சிறந்த படங்களுள் 'தடம்' படத்திற்கு முக்கிய இடம் உண்டு. நடிகர்கள்: அருண்விஜய் தன்யா ஹோப் ஸ்மிருதி வித்யா பிரதீப் யோகிபாபு பெப்சி விஜயன் மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு: கோபிநாத்; இசை: அருண் ராஜ்; எடிட்டிங்: ஸ்ரீகாந்த் இயக்கம்: மகிழ் திருமேனி   கதையின் 'ஒன்லைன்': ஓருரு இரட்டையர்கள் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். அந்தக் கொலை வழக்கில் இருந்து சட்ட ரீதியாக விடுதலை செய்யப்படுகின்றனர். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து அவர்கள் எப்படி தப்பினார்கள் என
அடுத்தது குளோனிங் மனிதன்தான்!; ‘குரங்குகள் வந்தாச்சு’

அடுத்தது குளோனிங் மனிதன்தான்!; ‘குரங்குகள் வந்தாச்சு’

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
தொழில்நுட்ப யுகத்தில், சாத்தியமற்றவைகளை எல்லாம் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது விஞ்ஞான உலகம். இப்போது குளோனிங் (Cloning) குரங்குகள் வந்தாச்சு. அடுத்த சில ஆண்டுகளில் குளோனிங் மனித உருவாக்கமும் சாத்தியமே என்ற யூகங்கள் வலுவாக எழுந்துள்ளன. இயற்கையோடு இயைந்தும், அதை எதிர்த்தும் போராடுவதுதான் விஞ்ஞான உலகம். அடுத்த சந்ததியை உருவாக்க உடல் சேர்க்கையே தேவையில்லை என்பதை 20ம் நூற்றாண்டு சாத்தியமாக்கியிருந்தது. அதன் நீட்சி, குளோனிங் தொழில்நுட்பம். ஒருவரை அப்படியே நகலெடுப்பதுதான், குளோனிங். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, குளோனிங் மூலம் டாலி என்ற செம்மறி ஆடு, ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டபோது விஞ்ஞானத்தின் உச்சம் என்றும், மனித குலத்திற்கு ஆபத்து என்றும் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அறிவியாலாளர்கள் குளோனிங் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் அரிதிலும் அரிதான நோய்களைக்கூட ம