Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சில்லரை முதலீட்டாளர்கள்

ரயில்டெல் ஐபிஓ நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது!

ரயில்டெல் ஐபிஓ நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஐபிஓ வெளியீடு வெற்றியடைந்துள்ளது. பொதுப்பங்குகள் வேண்டி சில்லரை முதலீட்டாளர்கள் தரப்பில் 42.39 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. வெள்ளிக்கிழமை (பிப். 26) இந்நிறுவனப் பங்குகள் இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது. ரயில்வே துறையின் ஓர் அங்கமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், ஒரு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வழங்குநர் ஆகும். இத்துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது.   இந்நிறுவனம், 819.24 கோடி ரூபாய் நிதி திரட்டும் நோக்கில் முதன்முதலாக பிப். 16ம் தேதி ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. மினிமம் லாட் சைஸ் 155 பங்குகள் ஆகும். ஒரு பங்கின் விலை 94 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டது.  
பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!; திடீர் வீழ்ச்சி ஏன்?

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!; திடீர் வீழ்ச்சி ஏன்?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (பிப். 22) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வணிகத்தைத் தொடங்கின. பகல் 1.50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் அதிகபட்சமாக 1015 புள்ளிகள் (2.61 சதவீதம்) சரிந்து 49971 புள்ளிகளும், நிப்டி 251 புள்ளிகள் சரிந்து (1.61 சதவீதம்) 14741 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகின.   நிப்டி காலையில் 14999 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. அதிகபட்சமாக 15010 புள்ளிகளை தொட்டது. குறைந்தபட்சமாக 14740 புள்ளிகள் வரை சரிந்தது. காலையில் 50910 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 50986 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 49860 புள்ளிகள் வரையிலும் சென்றன. மருந்து தயாரிப்பு துறைகள், நிதிச்சேவை துறைகளின் பங்குகள் பெருமளவு வீழ்ச்சி கண்டதே சந்தையின் சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு சந்தைகளும் முதல் செஷனிலேயே கிட்டத்தட்ட 1