Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சினிமா விமர்சனம்

விக்ரம் – சினிமா விமர்சனம்! ”நல்லதைக்கூட முகமூடி போட்டுக்கிட்டுதான் செய்ய வேண்டியது இருக்கு!”

விக்ரம் – சினிமா விமர்சனம்! ”நல்லதைக்கூட முகமூடி போட்டுக்கிட்டுதான் செய்ய வேண்டியது இருக்கு!”

சினிமா, முக்கிய செய்திகள்
விக்ரம் - விமர்சனம் நடிகர்கள்: கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஸ்வாதிஸ்தா மற்றும் பலர். இசை: அனிருத் ஒளிப்பதிவு: ஹரிஷ் கங்காதரன் ஆக்ஷன்: அன்பறிவ் எடிட்டிங்: பிலோமின் ராஜ் தயாரிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ் இயக்கம்: லோகேஷ் கனகராஜ்   கதை என்ன?:   காவல்துறை அதிகாரியான தன் மகனை டிரக் மாபியா கும்பல் கொலை செய்து விடுகிறது. மகனை இழந்த, முன்னாள் ரா ஏஜன்ட் கமல்ஹாசன், அந்த கும்பலை கண்டுபிடித்து அழித்தாரா? போதைப்பொருள் இல்லாத உலகத்தை படைத்தாரா? என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை.   திரைமொழி:   படத்தின் துவக்கத்திலேயே, பத்தல... பத்தல... பாடலில் அதகளம் செய்கிறார் கமல். அடுத்த காட்சியிலேயே அவரை முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, கிரானைட் வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்து விடுகிறது. அவருடன் காளிதாஸ், ஹ
ரோசாப்பூ ரவிக்கைக்காரி – நந்தினியும் செம்பட்டையும் கலாச்சார மாற்றத்தின் முதல் பலியாடுகள்!

ரோசாப்பூ ரவிக்கைக்காரி – நந்தினியும் செம்பட்டையும் கலாச்சார மாற்றத்தின் முதல் பலியாடுகள்!

சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பழமையில் ஊறிப்போயிருக்கும் சமூகதளத்தில் புதிய கலாச்சார மாற்றத்திற்கான வாயில் கதவுகளை திறந்து வைத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்ற பெருமை, 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி'க்கு உண்டு. 1979, மே 18ல் வெளியானது. தேவராஜ் - மோகன் என்ற இரட்டை இயக்குநர்களின் அற்புத படைப்பு. ஏற்கனவே, அன்னக்கிளியில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள்தான். எனினும், இவர்களிடம் இருந்து ரோசாப்பூ ரவிக்கைக்காரி என உலகப்படங்களின் தரத்தில், இன்றளவும் 'கல்ட்' (Cult) வகைமையிலான படம் வரும் என்ற எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லாத காலக்கட்டம் அது. இந்தியா, சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் நிகழும் பீரியட் படம்தான் இந்த ரோ.ர. 41 ஆண்டுகளுக்குப் பிறகு ரோ.ர. பற்றி ஒரு மீளாய்வாகவே எழுதுகிறேன். சேலம் மாவட்டத்தின் வண்டிச்சோலை எனும் சிறிய மலைக்கிராமம்தான் ரோ.ர.வின் கதைக்களம். மண்ணின் மைந்தனாக இரு
ஜிப்ஸி – சினிமா விமர்சனம்! ”மனிதனாக வாழ மதம் அவசியமா?”

ஜிப்ஸி – சினிமா விமர்சனம்! ”மனிதனாக வாழ மதம் அவசியமா?”

சினிமா, முக்கிய செய்திகள்
'குக்கூ', 'ஜோக்கர்' படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்த ராஜூ முருகன் இயக்கத்தில், மார்ச் 6ம் தேதி வெளியாகி இருக்கிறது, 'ஜிப்ஸி'. தாய், தந்தையை இழந்த, நாடு முழுவதும் சுற்றி வரும் ஒரு நாடோடிக்கும், இஸ்லாமிய பழமைவாதங்களில் ஊறிப்போயிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குமான காதலையும், எதிர்பாராத மதக்கலவரத்தில் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட விளைவுகளையும் பேசுகிறது, ஜிப்ஸி. சபாஷ் ராஜூ முருகன்!   கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரத்தில், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடும் ஏதுமற்ற ஒரு சாமானியனின் பீதியடைந்த முகமும், அருகே கொலைவெறியுடன் கையில் வாளேந்தி நிற்கும் ஓர் இந்து பயங்கரவாதியின் படமும் அன்றைய காலக்கட்டத்தில் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்ற காட்சியை, சமகால பிரச்னைகளுடன் கோத்து, கதை சொன்ன விதத்தில் ராஜூமுருகனின் சமூகப்
சாதிய வர்க்கவாதிகளின் எலும்பை முறிக்கும் அசுரன்! சினிமா விமர்சனம்

சாதிய வர்க்கவாதிகளின் எலும்பை முறிக்கும் அசுரன்! சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுமைக்கும் வர்க்க முரண் என்பது, இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையிலான வேறுபாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய பெருநிலத்தைப் பொருத்தவரை வர்க்கப்பிரிவினை என்பதில் சாதிய பாகுபாடும் உள்ளடங்கும். அதிலும் தமிழ்நாடு போன்ற ஆதிகுடிகளின் மண்ணில், வர்க்கப்பிரிவினை என்பது கண்டிப்பாக சாதியத்தையும் இணைத்தே வந்திருக்கின்றன. இப்போதும் இருக்கின்றன. வல்லான் வகுத்ததே நீதி என்ற சூழலில், வலுத்தவர்களிடம் இருந்து எளியவர்கள் எப்படி எல்லாம் தப்பிப்பிழைக்க போராட வேண்டியதிருக்கிறது என்பதை குருதி தெறிக்க பேசி இருக்கிறது, அசுரன். இயக்குநர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் அக்.4ல் வெளியாகி இருக்கும் அசுரன் திரைப்படம், ஒடுக்கப்பட்ட மக்கள் இருத்தலுக்காக கைகொள்ளும் போராட்டங்களை விவரிக்கிறது. படத்தின் மூலக்கதை, பூமணி எழுதிய 'வெக்கை' நாவல்தான் என்பதாலோ என்னவோ படம் முடியும் வரை பார்வையாளர்களின் உடலுக்குள்ள
அதிகார வர்க்கத்தின் மீது பாய்ந்த ஒத்த செருப்பு! – சினிமா விமர்சனம்!

அதிகார வர்க்கத்தின் மீது பாய்ந்த ஒத்த செருப்பு! – சினிமா விமர்சனம்!

சினிமா, முக்கிய செய்திகள்
தான் செய்த கொலை குற்றங்களில் இருந்து, செய்யாத ஒரு கொலையைச் சொல்லி புத்திசாலித்தனமாக தன்னை காவல்துறையின் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ளும் ஒரு சாமானியனின் ஒப்புதல் வாக்குமூலம்தான், 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே. பார்த்திபன் பாணியில் சொல்ல வேண்டுமானால், ஒரு நீலப்படத்தில் நடிக்க சன்னி லியோன் போன்ற ஒரே ஒருவர் போதும். ஆனால், ஒத்த செருப்பு போன்ற ஒரு முழு நீளப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பது இந்தியாவில் முதல் முயற்சி.   அதுவும் பக்கத்து வீட்டுக்காரர் போன்ற தோற்றத்தில் இருக்கும் பார்த்திபனை மட்டுமே, பாப்கார்ன்கூட கொறிக்க விடாமல் திரையில் இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? உண்மையில், ரசிகர்களுக்கு எந்தவித சலிப்பும் ஏற்படாத வகையில் அவர்களை இருக்கையில் கட்டிப்போட்டு சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் பார்த்திபன். தமிழ
நீங்கள் யாரையாவது பழிவாங்கணுமா? சாஹோ படத்திற்கு டிக்கெட் வாங்கி கொடுங்க!

நீங்கள் யாரையாவது பழிவாங்கணுமா? சாஹோ படத்திற்கு டிக்கெட் வாங்கி கொடுங்க!

சினிமா, முக்கிய செய்திகள்
சர்வதேச நிழல் உலக தாதா ஒருவர் திடீரென்று எதிரிகளால் கொல்லப்படுகிறார். அவருக்குப் பிறகு நிழல் உலகை ஆளப்போவது யார்? என்பதுதான் சாஹோ படத்தின் ஒரு வரி கதை. ஒரு கமர்ஷியல் படத்திற்கு இந்தக் கதையே போதுமானதுதான். பாகுபலி, பாகுபலி-2 படங்கள் பெற்ற பெரு வெற்றி காரணமாக பிரபாஸ் மீது ரொம்பவே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதற்காக வலுவான கதையோ, திரைக்கதையோ இல்லாமல் வெறும் பிரம்மாண்டத்தை மட்டுமே கட்டி எழுப்பி படத்தைக் கட்டமைக்க முடியுமா? பிரபாஸ் இருந்தாலே போதும், போட்ட பணத்தை கல்லா கட்டிவிட முடியும் என நம்பி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுஜீத்.   கதைப்படி (கதை என்று ஒன்று இல்லை. ஆனாலும் 'ஒரு ஊர்ல...' என்று சொன்னால்தானே கதை வரும்? அதுபோலதான் 'கதைப்படி' என்பதும்), பிரபாஸ் அண்டர் கவர் ஆபரேஷனில் இருக்கும் போலீஸ் அதிகாரி. நமக்கு தெர
நேர்கொண்ட பார்வை – சினிமா விமர்சனம்! ‘ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா?’

நேர்கொண்ட பார்வை – சினிமா விமர்சனம்! ‘ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா?’

சினிமா, முக்கிய செய்திகள்
பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காலங்காலமாக நம் சமூகத்தில் கெட்டித்தட்டிப்போன பாலபாடங்களை நகல் எடுத்து எம்ஜிஆர் முதல் கமல், ரஜினி, விஜய் வரை தமிழின் அத்தனை மாஸ் ஹீரோக்களும் தங்கள் படங்களில் பெண்களுக்கு வகுப்பெடுத்து வந்த நிலையில், முதன்முதலாக பெண்ணை சக மனுஷியாகவும், அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்தாலே போதும் என்ற கருத்தை அஜித்குமார் என்ற மாஸ் ஹீரோ மூலமாக அழுத்தமாக பதிவு செய்திரு க்கிறது, 'நேர்கொண்ட பார்வை'. கடந்த 2016ம் ஆண்டு ஹிந்தியில் அமிதாபச்சன், டாப்ஸி நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின், அதிகாரப்பூர்வ மறு ஆக்கம்தான் 'நேர்கொண்ட பார்வை'. பெண்ணியம்தான் இப்படத்தின் பேசுபொருள். பெண்ணியம் என்றாலே, முண்டாசுக்கவிஞன் பாரதியை ஒதுக்கிவிட்டு நாம் அடுத்த அடி நகர முடியாதல்லவா? அதுதானோ என்னவோ, இப்படத்திற்கு 'நேர்கொண்ட பார்வை' என்ற தலைப்பைச் சூட்டியிர
தொரட்டி: சினிமா விமர்சனம்! ‘ஆட்டுக்கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலையும் காதலையும் பேசுகிறது!!’

தொரட்டி: சினிமா விமர்சனம்! ‘ஆட்டுக்கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலையும் காதலையும் பேசுகிறது!!’

சினிமா, முக்கிய செய்திகள்
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத ஒரு வர்க்கத்தினரின் வாழ்வியலும், அவர்களின் காதலையும் மண் மணத்துடன் சுமந்து வந்திருக்கிறது, 'தொரட்டி'.   கிராமங்களில் வழமையான சொல்வழக்கு ஒன்று உண்டு. நற்குடியில் பிறந்த ஒருவர் திடீரென்று தீய வழியில் சென்று சீரழிகையில், 'அவன் என்ன பண்ணுவான் பாவம்....சேருவரிசை சரியில்ல...' என்பார்கள். அப்படி கூடா நட்பால் கேடாய் முடிந்த இளைஞனை விரும்பி மணக்கும் அவனுடைய மனைவி, கணவனை திருத்த முயற்சிக்கிறாள். அவன் திருந்தினானா? எப்படியும் திருத்திவிடலாம் என நம்பி வந்த அவளுக்கு நேர்ந்தது என்ன? கணவனின் சேக்காலிகளுக்கு என்ன நடந்தது? என்பதை காதல், நட்பு, துரோகம், வன்மம் கலந்து, கிராமிய அழகியலுடன் பேசுகிறது, தொரட்டி. ராமநாதபுரம் மாவட்டம்தான் கதைக்களம். 1980களில் கதை நகர்கிறது. அறுவடை முடிந்த பிறகு விவசாய நிலத்தில் ஆட்டுக்கிடை போடும் பழக்கம், நெல்லை, ராமநாதப
ஜீவி: சினிமா விமர்சனம்!; ‘சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்?’

ஜீவி: சினிமா விமர்சனம்!; ‘சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்?’

சினிமா, முக்கிய செய்திகள்
தமிழ் சினிமா உலகில், இந்த ஆண்டின் அண்மைய வரவுகளில் 'சூப்பர் டீலக்ஸ்', 'தடம்' ஆகிய படங்களுக்குப் பிறகு, ஆகச்சிறந்த படைப்பாக ஜீவி படத்தைச் சொல்லலாம். புதுமுக இயக்குநர் வி.ஜே.கோபிநாத், கதை - திரைக்கதை - வசனகர்த்தா பாபு தமிழ் ஆகியோர் நம்பிக்கைக்குரிய வரவாக, அறிவார்த்தமாக ஜீவியில் பதிவு செய்திருக்கின்றனர். மிக வலுவான திரைக்கதை கட்டுமானத்துடன் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற '8 தோட்டாக்கள்' குழுவின், இரண்டாவது படைப்புதான் ஜீவி.   திரைக்கலைஞர்கள்:   நடிகர்கள்: வெற்றி கருணாகரன் மோனிகா சின்னகோட்ளா ரோகிணி, ரமா, 'மைம்' கோபி   இசை: சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு: பிரவீன்குமார் எடிட்டிங்: பிரவீன் கே.எல். கதை, வசனம்: பாபு தமிழ் திரைக்கதை: பாபு தமி-ழ், வி.ஜே.கோபிநாத் இயக்கம்: வி.ஜே.கோபிநாத்   கதை என்ன?:  
யுடர்ன் – சினிமா விமர்சனம்; ”குற்றத்தின் தண்டனை, மரணம்!”

யுடர்ன் – சினிமா விமர்சனம்; ”குற்றத்தின் தண்டனை, மரணம்!”

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழில் ஹாரர், திரில்லர் வகைமை படங்களுக்கென இதுவரை ஆகிவந்த மரபுகளை முற்றாக தகர்த்து வீசிவிட்டு, வித்தியாசமான திரைமொழியில் வெளிவந்திருக்கிறது யுடர்ன்.   நடிகர்கள்: சமந்தா அக்கினேனி, 'ஈரம்' ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா சாவ்லா, 'சித்திரம் பேசுதடி' நரேன், 'ஆடுகளம்' நரேன், சிறுமி ஆர்னா மற்றும் பலர்.   தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை: பூர்ணசந்திரா தேஜஸ்வி, ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி, எடிட்டிங்: சுரேஷ் ஆறுமுகம்   தயாரிப்பு: ஸ்ரீனிவாச சிந்தூரி மற்றும் ராம்பாபு பண்டாரு, இயக்கம்: பவன்குமார்   கதை என்ன?:   குறிப்பிட்ட ஒரு மேம்பாலத்தில் சாலையின் நடுவே இருக்கும் தடுப்புக் கற்களை அகற்றிவிட்டு யுடர்ன் எடுக்கும் வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். அவ்வாறு ஏன் நடக்கிறது? என்பதை, ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வ