Saturday, May 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: காவல்துறை.

காவல்நிலையங்களுக்கு தனி வாட்ஸ்அப் குழு! ‘சிறப்பான பணிகளை பதிவேற்றுங்கள்!!’

காவல்நிலையங்களுக்கு தனி வாட்ஸ்அப் குழு! ‘சிறப்பான பணிகளை பதிவேற்றுங்கள்!!’

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையமும் தங்களுக்கென தனி வாட்ஸ்அப் குழுவை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.   தமிழக காவல்துறையை புலனாய்வில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக ஒப்பிட்டு பேசப்பட்டு வந்தாலும், அண்மைக்காலமாக மக்களுடன் நெருங்கிச் செல்ல காவல்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.   ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களின் வாழ்நிலை, முக்கிய பிரமுகர்கள், அவர்களின் தொழில், முக்கிய தொடர்புகள் குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், மக்கள் எளிதில் காவல்துறை உதவியை நாடும் வகையில் அந்தந்த சரக காவலர் முதல் உயரதிகாரிகளின் செல்போன் எண்களை பொது இடங்களில் வெளியிட உத்தரவிடப்பட்டு உள்ளது.   பல மாநகரங்களில் பொதுமக்கள் நேரடியாக வாட்ஸ்அப் மூலம் புகார்களை பதிவு செய்யவும்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சுவாதியை அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி! சிபிசிஐடி போலீசார் உற்சாகம்!! #Gokulraj #day6

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சுவாதியை அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி! சிபிசிஐடி போலீசார் உற்சாகம்!! #Gokulraj #day6

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான கார்த்திக்ராஜா, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பது சுவாதியும், கோகுல்ராஜூம்தான் என்று நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியிருக்கிறார். இதனால் அரசுத்தரப்பினருக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.   பொறியியல் பட்டதாரி:   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சித்ரா. கணவர், பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். ஏழை கூலித் தொழிலாளியான சித்ராவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர், கலைச்செல்வன். இளைய மகன், கோகுல்ராஜ் (23).   திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்த கோகுல்ராஜ், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை நிறைவு செய்தார். ஆனாலும், அவ்வப்போது நண்பர்களை பார்க்க கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார். அப்படித்தான், 23.6.2015ம் தேதியன்றும் ஓமலூரில் இருந்து கல
போலீஸ் வேலையில் சேர ஆசையா?; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு!!

போலீஸ் வேலையில் சேர ஆசையா?; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு!!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 6140 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் இன்று (டிசம்பர் 28, 2017) வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலைக்காவலர் நிலையிலான 5538 (ஆண் 3877, பெண் 1661) பணியிடங்களும், சிறைத்துறையில் 365 (ஆண் 319, பெண் 46) பணியிடங்களும் காலியாக உள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 237 தீயணைப்போர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு, உடல்தகுதித்தேர்வு உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு சலுகைகள் இப்பணியிடங்களுக்கும் பொருந்தும். இப்பணியிடங்கள் அனைத்திற்கும் திருநங்கைகளும்
நாடி, நரம்பு, புத்தி என கொலைவெறி ஊறிக்கிடக்கும் தஷ்வந்த்!:  திடுக்கிடும் வாக்குமூலம்

நாடி, நரம்பு, புத்தி என கொலைவெறி ஊறிக்கிடக்கும் தஷ்வந்த்!: திடுக்கிடும் வாக்குமூலம்

குற்றம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை, பணத்திற்காக தாய் படுகொலை என அடுத்தடுத்த குற்றத்தில் ஈடுபட்டு வந்த தஷ்வந்த், பெற்ற தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை போரூரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த பிப்ரவரி மாதம், 7 வயதே ஆன ஹாஸினி என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்டாள். சந்தேகம் வராமல் இருக்க, சடலமும் எரிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் என்ற இளைஞர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், பெற்ற தாயென்றும் பாராமல் பணம் நகைக்காக தாய் சரளாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு மும்பைக்குக் தப்பி ஓடினார். சூதாட்ட பிரியரான தஷ்வந்த், மும்பையில் குதிரை பந்தயம், சீட்டாட்டம் என்று பொழுதைக் கழித்து வந்த நிலையில், தமிழக தனிப்படை காவல்துறையினரால்
தோல்விகளும் சுகமானவைதான்..! – தில்லைக்கரசி நடராஜன் எழுதும் தன்னம்பிக்கை தொடர்

தோல்விகளும் சுகமானவைதான்..! – தில்லைக்கரசி நடராஜன் எழுதும் தன்னம்பிக்கை தொடர்

சிறப்பு கட்டுரைகள், தன்னம்பிக்கை, மகளிர்
-தில்லை தர்பார்- பெண்கள் முன்னேற்றம் என்பது ஆண்களுக்கு எதிரான போர்க்கொடியா? இல்லையில்லை. பெண்கள் கல்வி, தொழில், பொருளாதாரம், அரசியல் போன்ற எல்லா விஷயங்களிலும் சுய முன்னேற்றம் பெற்று குடும்பத்தையும், சமுதாயத்தையும் மேம்படுத்துவதுதான் பெண்கள் முன்னேற்றம். எனதருமை தோழிகளே... தோற்றுப்போங்கள். ஆச்சரியமாக உள்ளதா? நீங்கள் ஒவ்வொரு முறையும் தோற்கும் போதெல்லாம் மனது வலிக்கும்; ஆனாலும், தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள், அடுத்தடுத்த புதிய முயற்சிகளில் ஈடுபட போதுமான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்.   ஒருவேளை, நீங்கள் தோற்காமலே போயிருந்தால் உங்கள் வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.   தோல்விகளும்கூட சுகமானவைதான். தோற்றுப்போய் அதிலிருந்து மீண்டு வெளிவரும்போது உங்களில் ஒரு புதிய மாற்ற