Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கல்வி உதவித்தொகை.

டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை!

டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
(தகவல்)   'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பதுதான் அவ்வை வாக்கு. பொருளாதார நெருக்கடிகள் கல்வி பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு எந்த விதத்திலும் தடைக்கல்லாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே, மத்திய அரசு உதவித்தொகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மத்திய அரசின் பல உதவித்தொகைத் திட்டங்கள் மாணவர்களுக்கு தெரிவதில்லை அல்லது கல்வி நிலையங்கள் அதுபற்றி பெரிதாக அக்கறை காட்டுவதில்லை.   அது என்ன திட்டம்? பிளஸ்-2 முடித்துவிட்டு, நடப்புக் கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்.   தகுதிகள் என்னென்ன?:   1. பிளஸ்-2வில் 80 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்   2. பிளஸ்-2வை பள்ளியில் சேர்ந்து பயின்றிருக்க வேண்டும். தனித்தேர்வராகவோ, தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலமோ படித்திர
பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
-தகவல்-   பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தமிழக அரசுத்தேர்வுகள் இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது.   பள்ளி மாணவர்களிடையே அறிவியல், சமூக அறிவியல் படிப்புகளின் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தேசிய திறனாய்வுத்தேர்வு (NTSE - National Talent Search Examination) நடத்தப்பட்டு, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 1963ம் ஆண்டு முதல் இத்திட்டம் அமலில் இருந்து வருகிறது. தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு (NCERT) இத்தேர்வை நடத்தி வருகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசு, தனியார், நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.   இரண்டு நிலைகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம்
சேலம்: பகலில் மாணவர்கள்; மாலையில் குழந்தை தொழிலாளர்கள்! சமூக பேரவலத்தின் நேரடி பதிவு

சேலம்: பகலில் மாணவர்கள்; மாலையில் குழந்தை தொழிலாளர்கள்! சமூக பேரவலத்தின் நேரடி பதிவு

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்புக்கட்டுரை -   பள்ளிக்கல்வித்துறையின் பாராமுகத்தால் ஒரே பள்ளியில் படித்து வரும் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்த 29 மாணவ, மாணவிகளின் கல்வி நலன் கேள்விக்குறியாகி உள்ளது. சேலத்தை அடுத்த வேடுகாத்தாம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 470க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வேடுகாத்தாம்பட்டி, பனங்காடு, ஆண்டிப்பட்டி, பெத்தானூர், குட்டக்காடு, சந்தைக்கரடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் இப்பள்ளியில் படிக்கின்றனர். சிவதாபுரம், வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி ஆகிய பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரம், பெரும்பாலும் வெள்ளிப்பட்டறைத் தொழிலை நம்பியே இருக்கிறது. இத்தொழிலுக்கு அடுத்தபடியாக அவர்களுக்குக் கைகொடுப்பது, கட்டட வேலை. வெள்ளிப்பட்டறை முதலாளிகளைத் தவிர, மற்றவர்கள் 200 ரூபாய் கூலிக்குச் செல்லும் அன்றாடங்காய்ச்சி வர்க்கத்தினர்தா