Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஊரடங்கு உத்தரவு

சேலம்: பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்! 200 மையங்களில் நடக்கிறது!

சேலம்: பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்! 200 மையங்களில் நடக்கிறது!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில், பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (புதன்கிழமை, மே 27) தொடங்குகிறது. கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமுள்ளதால், சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் மொத்தம் 200 மையங்களில் இப்பணிகள் நடக்கிறது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஜூன் 23ம் தேதி நிறைவு பெறுகின்றன.   தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. அதன்பிறகு, கொரோனா தொற்று அபாயத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் விடைத்தாள் திருத்தல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பணிகள் முடங்கின. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை இன்று தொடங்குகிறது.   விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இன்று முதன்மைத்
ஊரடங்கு: கடும் உளவியல் சிக்கலில் பெண்கள்!

ஊரடங்கு: கடும் உளவியல் சிக்கலில் பெண்கள்!

உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ், உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் எங்கிருந்து, எதிலிருந்து பரவியது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளும் ஆராய்ச்சி அளவிலேயே இருக்கின்றன.   இன்றைய நிலையில், 211 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். 2020 ஏப்ரல் 7ம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 12 லட்சத்து 14466 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 67 ஆயிரத்து 767 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. கொரோனா தாக்குதலில் இந்தியாவும் தப்பவில்லை. இங்கும் ஏப். 7ம் தேதி வரை 4281 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, கொரோனாவால்
கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!

கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழு நிறுவனங்கள் உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் அசல், வட்டி வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   கோரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இதற்கென பொது மக்களின் நன்மை கருதி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் படி, ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. இந்த உத்தரவுகளை அனைத்து மாவட்டங்களிலும் முறையாக நடைமுறைப்படுத்திட உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஆகிய