Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி பட ஷூட்டிங்கால் முடங்கிய சேலம் குகை; 108 ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் செல்வதில் சிக்கல்!

உதயநிதி பட ஷூட்டிங்கால் முடங்கிய சேலம் குகை; 108 ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் செல்வதில் சிக்கல்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் மாமன்னன் பட ஷூட்டிங்கால் சேலம் திருச்சி மெயின ரோட்டில் போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாமல் கடும் நெரிசல் ஏற்பட்டது. நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது "மாமன்னன்" என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். வடிவேலு, பகத் பாசில் ஆகியோரும் நடிக்கின்றனர். பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் இயக்குநர் மாரி செல்வராஜ், இந்தப் படத்தை இயக்குகிறார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கிறார்.   ''மாமன்னன்'' படத்துக்காக கடந்த இரு மாதத்திற்கும் மேலாக சேலம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பல இடங்களில் செட் அமைத்து முக்கிய காட்சிகளை படம் பிடித்து வருகின்றனர். கடந்த ம
ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சங்க இலக்கியங்களை, வெகுசன ரசிகர்களுக்கு ஏற்ப திரை இசைப் பாடல்களில் குழைத்துத் தருவது என்பது ஒரு நுட்பமான கலை. தமிழ்த் திரைப்படங்களில் 'இளங்கம்பன்' கண்ணதாசன் அதைச் சரிவர செய்தவர் என்பது என் அபிப்ராயம்.   மூத்த கவிஞர்கள் மருதகாசி, வாலி ஆகியோருக்குப் பிறகு வைரமுத்துவும் அவ்வப்போது இலக்கியங்களில் புரண்டு எழுவார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற தொகுப்புகளில் சங்க இலக்கியங்கள் வரிசை கட்டி நின்றாலும் குறுந்தொகை மீது திரைக்கவிஞர்களுக்கு எப்போதும் சற்று ஈர்ப்பு அதிகம். தவிர, கம்ப காவியத்தையும், பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் இருந்து திருக்குறளையும் திரை இசையில் வெகுவாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.   அண்மையில், யூடியூபில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. 'நண்பேன்டா (2015)' என்றொரு படம். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்திருந்தனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், 'ஊரெல்லாம் உன்னைக் கண்டு விய
இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

சினிமா, முக்கிய செய்திகள்
சென்னையில் குண்டுகளை வெடிக்கச் செய்து நாச வேலைகளில் ஈடுபடும் ஒரு பயங்கரவாதியிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன், அவரிடம் இருந்து தப்பித்தாரா? குண்டுவெடிப்பில் இருந்து மக்களை காப்பாற்றினாரா? என்பதுதான், 'இப்படை வெல்லும்' படத்தின் ஒன்லைன். நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா, எம்எஸ் பாஸ்கர், ரவி மரியா மற்றும் பலர். இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: ரிச்சர்டு டி நாதன்; எடிட்டிங்: பிரவீன்; தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்; இயக்கம்: கவுரவ் நாராயணன். சர்வதேச பயங்கரவாதியான சோட்டா (டேனியல் பாலாஜி), சென்னையில் சில இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, அமைதியை சீர்குலைக்க திட்டம் தீட்டுகிறார். அதற்காக அவர் உத்தரபிரதேச சிறையில் இருந்து தப்பித்து, சென்னை வந்து சேர்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நாயகன் மதுசூதனன் (உதயநிதி ஸ்டாலின்)