Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.

சேலம்: 8 வயது சிறுமியிடம் ஆசிரியர் பாலியல் வக்கிரம்!

சேலம்: 8 வயது சிறுமியிடம் ஆசிரியர் பாலியல் வக்கிரம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் தன்னிடம் படித்து வரும் எட்டு வயது சிறுமியிடம் பாலியல் வக்கிரத்துடன் நடந்து கொண்ட கணித ஆசிரியரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சாலையில் இழுத்துப்போட்டு செருப்பால் அடித்து துவைத்தனர். சேலம் மூன்று ரோடு அருகே ஸ்ரீவித்யா மந்திர் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சதீஸ் (24) கணிதப்பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.   இதே பள்ளியில் அரிசிபாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் 8 வயது மகள், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். இன்று (செப். 1, 2018) காலை மாணவி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள். ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை? என்று சிறுமியிடம் பெற்றோர் கேட்டதற்கு, பள்ளியில் உள்ள கணித ஆசிரியர் தன்னை கண்ட கண்ட இடத்தில் தொட்டு தொந்தரவு தருவதால், இனி பள்ளிக்குச் செல்ல மாட்டே
‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாநகரத்திலேயே போதிய பொதுக்கழிப்பறை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ரயில் தண்டவாளம், இருட்டு நேரத்தில் முள் புதரோரங்களில் 'அவசரத்துக்கு ஒதுங்கும்' அவல நிலை நீடிப்பதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) புகார் தெரிவித்துள்ளது. சேலம் நகராட்சி, 1994ம் ஆண்டில் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் ஐந்தாவது பெரிய மாநகரமாக இருந்து வருகிறது. ஆனாலும், அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமை பெறவில்லை. தனிநபர் வருவாய் உயர்விலும் மோசமான நிலையில் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் தனிநபர் கழிப்பறை திட்டம் குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில் 52 கோட்டங்களில் திறந்தவெள