Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தோழர் தா.பாண்டியன் மறைந்தார்! உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ஒலித்தவர்!!

தோழர் தா.பாண்டியன் மறைந்தார்! உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ஒலித்தவர்!!

அரசியல், மதுரை, முக்கிய செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான, தோழர் தா.பாண்டியன் (88) உடல்நலக் குறைவால், வெள்ளிக்கிழமை (பிப். 26) இயற்கை எய்தினார்.   இந்திய கம்யூ., கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான தா.பாண்டியன், கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். பிப். 24ம் தேதி அவருடைய உடல்நலம் மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.   எனினும், அவருடைய உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிப். 25ம் தேதி மாலையில் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. தீவிர சிகச்சை அளித்தும் பலன் அளிக்காத நிலையில், வெள்ளிக்கிழமை (பிப். 26) காலை 10.05 மணியளவில் அவர் உயிரிழந்தார்.   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப
சேலம் கலெக்டருடன் நூலகத்துறை குஸ்தி! அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி!

சேலம் கலெக்டருடன் நூலகத்துறை குஸ்தி! அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்துக்கு இலவசமாக கொடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிப்பதால், நூலகத்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.   சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகே, மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. மாநகரின் மையப்பகுதியில் அசோகா மரம், புளிய மரம், பனை மரம், கொய்யா, மரமல்லி, பாதாம், வாழை மரங்கள் சூழ காற்றோட்டமான சூழ்நிலையில் இந்த நூலகம் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்நூலகம் செயல்படுகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வு, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கென பிரத்யேக நூல்கள் தருவிக்கப்பட்டது, பெண்களுக்கென தனி வாசிப்புப்பிரிவு என தொடங்கப்பட்டதால் இளைஞர்க
இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!

இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!

ஈரோடு, குற்றம், சேலம், தமிழ்நாடு, திருப்பூர், நாமக்கல், முக்கிய செய்திகள்
  முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற பெண்களில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது ஒருபுறம் இருக்க, சேலம் வின்ஸ்டார் சிவகுமார் மீது புகார் அளிக்க நாள்தோறும் குவியும் முதலீட்டாளர்களால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.   தற்கொலை முயற்சி சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு ஐந்து மகள்கள். இரண்டு மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. மற்ற மூன்று மகள்களான மேனகா (33), ரேவதி (28), கலைமகள் (26) ஆகியோர் கடந்த 28.8.2018ம் தேதி திடீரென்று குருணை மருந்தை நீரில் கலக்கிக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.   அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேனகா, கலைமகள் ஆகியோர் உடல்நலம் மோசமானதால், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு