Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: அதிருப்தி

எகிறியது காஸ் சிலிண்டர் விலை! பட்ஜெட்டில் துண்டு!!

எகிறியது காஸ் சிலிண்டர் விலை! பட்ஜெட்டில் துண்டு!!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தசரா, தீபாவளி என பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும் நிலையில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் வகையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் 916.50 ரூபாயாக உயர்ந்தது.   வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, உற்பத்தி, உள்நாட்டில் சிலிண்டர்களுக்கான தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களின் சிண்டிகேட் கமிட்டி இதன் விலையை நிர்ணயம் செய்து வருகிறது.   வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 320 ரூபாய் வரை மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி விடுகிறது. அதனால், முழு தொகையை காஸ் முகவர்களிடம் செலுத்தி, சிலிண்டரை பெற்று வருகின்றனர்.   கடந்த செப்டம்ப
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: சுவாதியின் தாயாரும் பல்டி! அரசுத்தரப்பு அதிருப்தி!! #Gokulraj #Day6

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: சுவாதியின் தாயாரும் பல்டி! அரசுத்தரப்பு அதிருப்தி!! #Gokulraj #Day6

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், அரசுத்தரப்பு முக்கிய சாட்சியான சுவாதியைப் போலவே, அவருடைய தாயார் செல்வியும், பிறழ் சாட்சியம் அளித்ததால் அரசுத்தரப்பினர் அதிருப்தி அடைந்தனர்.   தலை துண்டிக்கப்பட்ட நிலையில்..: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை நிறைவு செய்திருந்தார்.   தன்னுடன் வகுப்பில் ஒன்றாக படித்து வந்த, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் சுவாதியுடன் நெருங்கிப் பழகி வந்தார் கோகுல்ராஜ். கடந்த 23.6.2015ம் தேதி வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற கோகுல்ராஜ், மறுநாள் 24.6.2015ம் தேதியன்று மாலையில் நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண
ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''எனக்குப் பின்னாலும் அதிமுக என்ற இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்கள் நலனுக்காகவே செயல்படும்,'' என்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இப்படி அவர் சட்டப்பேரவையிலேயே முழங்கினார். எந்த இயக்கம் மக்கள் நலனுக்காக செயல்படும் என்று சொன்னாரோ, அந்த இயக்கம்தான் சில காலம் கூவத்தூர் விடுதியிலும், புதுச்சேரி விடுதியிலும், கல்லறையிலும் முடங்கிக் கிடந்தது. அடுத்த தேர்தல் வரையிலாவது அந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்குமா என்பதே கேள்விக்குறியான நிலையில் இருக்கிறது. அதிமுகவை மீட்டெடுக்க ஜெயலலிதா, ஏசு கிறிஸ்து போல மீண்டும் உயிர்த்தெழுந்துதான் வர வேண்டும். அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஜெயலலிதா இருக்கும்வரை அவர் முன்பாக எப்படி கூனிக்குறுகி நின்றார்களோ அதே அடிமை மனோபாவத்தை சசிகலாவிடமும் காட்டி வந்தார்கள். ஆனால், பாஜக என்ற புதிய கூட்டாளி கிடைத்த பின்னர் அவர்களின் போக்கு அடியோடு மாறி