பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi
உலகிலேயே பழமையான மொழியாக தமிழ் மொழி இருப்பதால் இந்தியாவே பெருமை கொள்கிறது என்று திடீரென்று தமிழின் மீது பாசமழை பொழிந்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. இதுதான் சமூக ஊடகங்களில் அண்மைய விவாதங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நரேந்திர மோடி, வானொலியில் 'மனதில் இருந்து பேசுகிறேன்' (மன் கீ பாத்) உரையாற்றி வருகிறார். கடந்த 25.8.2018ம் தேதி நடந்த ஓர் உரையாடலில்தான் தமிழை வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.
இப்படி அவர் உயர்தனிச் செம்மொழியாம் தமிழைப் புகழ்வது முதல் முறையல்ல. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் டெல்லி டால்கோட்ராவில் நடந்த ஒரு விவாதத்தின்போதும்கூட, 'சமஸ்கிருதத்தைவிட அழகான தமிழ்மொழியை கற்காமல் விட்டது வருத்தம் அளிக்கிறது,' என்று கூறியிருக்கிறார்.
மேடைகளில் தமிழில் சில வாக...