Thursday, July 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஜனநாயகம்

மேகாலயா: ஜனநாயகம் என்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்று பொருள்!

மேகாலயா: ஜனநாயகம் என்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்று பொருள்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாஜகவின் அதிகாரப் பசி, ஜனநாயகத்தை தொடர்ந்து கேலிக்கூத்தாக்கி வருவது, தேர்தல் அரசியல் மீதான நம்பகத்தன்மையை வெகுசன மக்களிடையே நீர்த்துப் போகச் செய்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டன. திரிபுராவில் மட்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சி 35 தொகுதிகளில் வென்று இருந்தது. ஆனால் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் பாஜகவால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. நாகாலாந்து மாநிலத்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி 18 இடங்களிலும், அதனுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்றது. இக்கட்சிகளுக்கு ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு வழங்க, 32 எம்எல்ஏக்களுடன் தேசியவாத ஜனநாயக முற்ப
ஊடகங்களை பேச விடுங்கய்யா….!: உச்சநீதிமன்றம் உத்தரவு

ஊடகங்களை பேச விடுங்கய்யா….!: உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியா, முக்கிய செய்திகள்
ஊழல் முறைகேடு பற்றிய செய்தியில் சிறு சிறு தவறுகள் அல்லது அதை வெளியிடுவதில் அதீத ஆர்வம் இருப்பதை எல்லாம் அவதூறாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 9, 2018) கருத்து தெரிவித்துள்ளது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மீதான தாக்குதல் என்பது இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் வியாபித்து இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்குழு ஆய்வின்படி, 1992 முதல் கடந்த 2017ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 1252 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. பத்திரிகையாளனின் பேனா முள் தலை சாய்ந்திருக்கும் வரை ஆட்சியாளர்களோ, அதிகார வர்க்கமோ கண்டுகொள்வதில்லை. அதே பேனா முள் அவர்களை நோக்கி நீளும் ஆயுதமாக மாறும்போதுதான் ஊடகத்தின் மீதோ அல்லது அதை எழுதியவர் மீதோ தாக்குதல் தொடுக்க தொடங்கி விடுகின்றனர். ஆளும் வர்க்கம், அவதூறு வழக்கு என்ற பெயரில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு முடக்கும் வேலைக
இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது

இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது

அரசியல், இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்தியாவில் ஜனநாயக ஆட்சி மீது திருப்தி இருந்தாலும், ராணுவ ஆட்சி வந்தால்தான் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அதிர்ச்சிகரமான எண்ணங்களை இந்தியர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 'பியூ ரிசர்ச்', 38 நாடுகளில் 41955 பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை இந்த ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது. இதில், இந்தியர்களின் மனவோட்டம் பற்றிய சில அதிர்ச்சிகரமான, அதேநேரம் ஆச்சர்யகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில், கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை சராசரியாக 6.9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்து வருவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 5ல் நான்கு பேர், அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இருப்பினும் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என்றும் பெரும்பான்மையோர் கருதுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஆதார்