Saturday, February 8மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: குடியுரிமை திருத்தச் சட்டம்

பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? திமுக பரப்புரை கூட்டத்தில் ஆனந்த் சீனிவாசன் தகவல்!

பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? திமுக பரப்புரை கூட்டத்தில் ஆனந்த் சீனிவாசன் தகவல்!

அரசியல், சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
  பெரும் முதலாளிகளுக்கு பாஜக அரசு 1.54 லட்சம் கோடிகளுக்கு வரிச்சலுகை அளித்ததால்தான், பெட்ரோல், டீசல் மீது 20 சதவீதம் செஸ் வரி விதிக்கப்பட்டதாகவும், முதலாளிகளின் நலன் கருதியே மத்திய அரசு எரிபொருள் விலையை குறைக்கவில்லை என்றும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறினார்.   ஓமலூர் சட்டப்பேரவை தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, ஓமலூர் செட்டிப்பட்டியில் முஸ்லிம் மற்றும் கிறித்தவர்கள் ஒருங்கிணைந்து திங்களன்று இரவு (மார்ச் 22) சிறப்பு பரப்புரை கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்ட ஏற்பாடுகளை திமுக சிறுபான்மை பிரிவு நிர்வாகி லியாகத் அலி செய்திருந்தார்.   காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்...
நிச்சயமாக மோடி ஒரு பாசிசவாதிதான்! ஜாவேத் அக்தர் அதிரடி தாக்கு!!

நிச்சயமாக மோடி ஒரு பாசிசவாதிதான்! ஜாவேத் அக்தர் அதிரடி தாக்கு!!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
கலை, இலக்கியத் துறைகளில் இயங்கி வரும் படைப்பாளிகள் தொடக்கத்தில் இருந்தே நடுவண் பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக சாடி வருகின்றனர். பாலிவுட்டில் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் காட்டும் ஜாவித் ஆக்தர் மற்றும் அவருடைய சகாவும், பிரபல இயக்குநருமான மகேஷ் பட் ஆகியோர், மோடியை குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டுத் தாக்கி வருகின்றனர்.   இந்நிலையில், அவர்கள் இருவரும் அல் ஜஸீரா செய்தி சேனலுக்கு வியாழனன்று (பிப். 13) அளித்த நேர்காணலில், மோடி மீது மீண்டும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஜாவேத் அக்தர், 'சந்தேகமே இல்லாமல் மோடி ஒரு பாசிசவாதிதான்' என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். அந்த டிவி சானலின் நெறியாளர் ஜாவேத் ஆக்தரிடம், ''மோடி ஒரு பாசிசவாதி என்று ஜாவேத் கருதுகிறாரா?,'' என...