Friday, March 13மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சேலம்

சேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம்! ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன?

சேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம்! ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''கட்சியின் வளர்ச்சிக்காக நான் சர்வாதிகாரியாகவும் மாறுவேன். தவறு செய்தவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவார்கள்,'' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் கொஞ்சம் காட்டமாகவே சொன்னார். கலைஞர் பாணியிலான அரசியலில் இருந்து சற்றே விலகி, ஜெ., மாடல் அரசியலுக்கு தயாராகி விட்டார் என்பதை, அப்போதே உடன்பிறப்புகள் உணர்ந்திருப்பார்கள். பொதுக்குழுவில் கர்ஜித்தது, இப்போது அடுத்தடுத்து நடந்து வரும் களையெடுப்பு நடவடிக்கைகள் கழக கண்மணிகளை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்குத்து வேலைகளில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் கட்டம் கட்டப்பட்டு வருகின்றனர்.   முதல்கட்டமாக, சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றிய செயலாளர் ஏ.டி.பாலுவை கடந்த ...
சேலம்: சூரியூர் கிராமம் எங்கே? 28 ஆண்டாக தொடரும் சர்ச்சை!

சேலம்: சூரியூர் கிராமம் எங்கே? 28 ஆண்டாக தொடரும் சர்ச்சை!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, இரண்டு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த சூரியூர் பள்ளக்காடு கிராமம் வருவாய்த்துறை ஆவணங்களில் இருந்து திடீரென்று தொலைந்து போனதாக சொல்லப்பட, 28 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தைத் தேடும் பணிகளில் வனக்கிராம மக்கள் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்டது சூரியூர் பள்ளக்காடு எனும் வனக்கிராமம். ஜல்லுத்துமலை, ஜருகுமலை ஆகிய இரு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த வனக்கிராமத்தில் 77 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருவதுடன், மலையடிவாரத்தில் மலர், மஞ்சள், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களும் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட, காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், வனப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற...
சேலம்: போதை ஆசிரியர் பணியிடை நீக்கம்; பள்ளியில் குறட்டை விட்டு தூக்கம்!

சேலம்: போதை ஆசிரியர் பணியிடை நீக்கம்; பள்ளியில் குறட்டை விட்டு தூக்கம்!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சங்ககிரி அருகே, அரசுப்பள்ளியில் குடிபோதையில் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.   அரசுப்பள்ளிகளில் தரமற்ற கற்பித்தல் முறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் ஏற்கனவே மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், ஒழுக்கக்கேடான ஆசிரியர்களால் மேலும் சீர்குலைந்து வருகின்றன. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும் மொத்தமே 20க்கும் குறைவான குழந்தைகளே படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இருதயராஜ் என்பவர் தலைமை ஆசிரியராகவும், அறிவழகன் என்பவர் இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.   மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆச...
வாக்குச்சாவடிகளில் வதைபடும் ஆசிரியர்கள்! மீறப்படும் மனித உரிமைகள்!!

வாக்குச்சாவடிகளில் வதைபடும் ஆசிரியர்கள்! மீறப்படும் மனித உரிமைகள்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு போதிய கழிப்பறைகள், தண்ணீர், உணவு வசதிகள் செய்து தராமல் ஒவ்வொருமுறையும் தங்களை அரசும், தேர்தல் ஆணையமும் கிள்ளுக்கீரையாக நடத்துவதாக கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. தேர்தல் பணிகளை முடித்துவிட்டுச் செல்லும் ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் வாக்களிப்பதோடு ஒரு வாக்காளனின் ஜனநாயக கடமை முடிந்து விடுகிறது. ஆனால், தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணி அளப்பரியது. இத்தேர்தலில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகிய பணிகளில் அரசு ஊழியர்கள், அரசு, நி...
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை இரண்டாம் முறையாக கைப்பற்றியது பாமக!

சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை இரண்டாம் முறையாக கைப்பற்றியது பாமக!

அரசியல், சேலம், தமிழ்நாடு
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவியை பாமக இரண்டாவது முறையாக கைப்பற்றியது. அக்கட்சியின் வேட்பாளர் ரேவதி, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் ராஜேந்திரன், துணைத்தலைவராக வெற்றி பெற்றார். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சிக்குழுக்களின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் தேதி (சனிக்கிழமை) நடந்தது.   சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 29 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், அதிமுக 18 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான பாமக 4, தேமுதிக 1 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. எஞ்சியுள்ள 6 இடங்களையும் திமுக கைப்பற்றி இருந்தது. மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவிக்கு போதிய பெரும்பான்மையை அதிமுக தனித்தே பெற்றிருக்கிறது. என்றாலும், ஒன்றிய...
சேலம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆளுங்கட்சியே தலைவர் பதவியை கைப்பற்றியது!

சேலம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆளுங்கட்சியே தலைவர் பதவியை கைப்பற்றியது!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு சனிக்கிழமை (ஜன. 11) மறைமுகத் தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் ஒன்றியத்தில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலும், கொளத்தூர் ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கான தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.   தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட ஒன்றியங்கள் தவிர, மற்ற ஒன்றியங்களில் அனைத்திலும் தலைவர் பதவியை ஆளுங்கட்சியே கைப்பற்றியது. சில இடங்களில் பாமகவுக்கும், ஒரே ஒரு ஒன்றியத்தில் தேமுதிகவுக்கும் துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளது, ஆளுங்கட்சி. மூன்று ஒன்றியங்களில், துணைத்தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக தலைவர் துணைத்தலைவர் பதவிகளைக் கைப்பற்றியவர்கள் விவரம்:   1. ஆத்தூர் ஒன்றியம்: தலைவர்: லிங்கம்மாள் (அதிமுக) துணைத்தலைவர்: கன்ன...
மறைமுக தேர்தலை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு!

மறைமுக தேர்தலை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாளை (11.1.2020) நடைபெற இருக்கும் ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடவடிக்கைகளை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜன. 10,2020) உத்தரவிட்டுள்ளது.   சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி புவனேஸ்வரி (47) திமுக பிரமுகர். அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உடையாப்பட்டி கிராம ஊராட்சி 14வது வார்டு உறுப்பினராக திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர், உயர்நீதிமன்றத்தில் கடந்த 8ம் தேதி, மாநில தேர்தல் ஆணையம், சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, சேலம் மாநகர காவல்துறை ஆணையர், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எதிராக ஒரு ர...
எட்டு வழிச்சாலையை எதிர்த்து போராடிய விவசாயிகள் சட்ட விரோத கும்பலா? 4 பிரிவுகளில் புதிய வழக்கு!

எட்டு வழிச்சாலையை எதிர்த்து போராடிய விவசாயிகள் சட்ட விரோத கும்பலா? 4 பிரிவுகளில் புதிய வழக்கு!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எட்டுவழிச்சாலை என்ற பெயரில் விளைநிலங்களையும், மலை வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுக்கும் அரசின் சதியை எதிர்த்து, சொந்த மண்ணுக்காகப் போராடி வரும் அப்பாவி விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமியின் அரசு, சட்ட விரோத கும்பலைச் சேர்ந்தவர்களாக சித்தரித்து நான்கு பிரிவுகளில் வழக்குப் போட்டிருப்பது அவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை கையில் எடுத்தது முதல் ஆளும் எடப்பாடி அரசுக்கு ஏழரை தொடங்கிவிட்டது. அப்போதுமுதல் தூக்கத்தை தொலைத்து நிற்கும் இந்த அரசு, விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி போலீசாரின் அடக்குமுறைகளைக் கையாண்டு நிலங்களை அளந்து முட்டுக்கல் போட்டது.   இந்த திட்டம் அமைய உள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐ...
ஒரு சுயேச்சையின் விலை 50 லட்சம்! அதிமுக, திமுக குதிரை பேரம்!!

ஒரு சுயேச்சையின் விலை 50 லட்சம்! அதிமுக, திமுக குதிரை பேரம்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கு பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற, அவர்களிடம் ஆளும் அதிமுகவும், திமுகவும் குதிரை பேரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் கடைசியாக 2011ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு 2016ல் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல வழக்குகளைக் கடந்து, ஒருவழியாக கடந்த டிசம்பர் 27, 2019 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. அதாவது, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடந்துள்ளது. அதுவும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள், சென்னை நீங்கலாக, 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது.   இந்த உள்ளாட்சித் தேர்தலில், மாநில அளவில் திமுக அதிக இடங்களை அறுவடை செய்திருக்கிறது. அதேநேரம், எடப்பாடி ...
மக்களவையில் ‘வாஷ் அவுட்’; உள்ளாட்சி தேர்தலில் ‘நாட் அவுட்’ எடப்பாடி! சறுக்கிய திமுக!!

மக்களவையில் ‘வாஷ் அவுட்’; உள்ளாட்சி தேர்தலில் ‘நாட் அவுட்’ எடப்பாடி! சறுக்கிய திமுக!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த மக்களவை தேர்தலின்போது சொந்த மண்ணில் பதினோரு சட்டமன்றத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அண்மைய உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிக்குழுக்களை ஒட்டுமொத்தமாக வாரி சுருட்டினார். தமிழக அளவில் அதிக இடங்களில் திமுக முன்னிலை பெற்றிருந்தாலும், சேலம் மாவட்டத்தில் அக்கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.   தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து, எஞ்சிய 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. முதல்கட்டமாக கடந்த டிசம்பர் 27ம் தேதியும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30ம் தேதியும் தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் ஜன. 2ம் தேதி எண்ணப்பட்டன. நள்ளிரவைக் கடந்தும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை ஜன. 3ம் தேதி பகல் 11 மணியளவில் நிறைவடைந்...