Friday, June 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

தமிழ்நாடு

தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணியே தீரணுமா?#விழிப்புணர்வு

தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணியே தீரணுமா?#விழிப்புணர்வு

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்ற கோரிக்கையுடன் வாட்ஸ் அப்பில் தகவல் வந்தால் போதும். என்ன ஏது என்று கூட முழுவதும் படித்துப் பார்ப்பதில்லை. உடனடியாக அடுத்தடுத்த வாட்ஸ் அப் குழுக்களுக்கு அதை பகிர்ந்துவிட்டுத்தான் மறுவேலை. தமிழன் என்ற உணர்வைக் காட்டிக்கொள்ள அதுவே ஆகச்சிறந்த மற்றும் எளிமையான வழிமுறையாகப் பழகிவிட்டோம். நீங்கள் மட்டுமல்ல. அப்படிச் செய்து வந்தவர்களில் நானும் ஒருவன். பிறகு அப்படி செய்வதில்லை. வெகுசன வாட்ஸ் அப் பயனர்கள், பகிர்வதன் மூலமே தமிழர் என்ற உணர்வில் உச்சி குளிர்ந்து கிடக்கும் சக தோழர்களுக்காக இந்தக் கட்டுரை. கடந்த பதினைந்து நாள்களாக வாட்ஸ் அப்பில், ''தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்படப் போகிற விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?'' என்ற தலைப்பிலான ஒரு பதிவு உலா வருகிறது. அந்தப்...
தையா? சித்திரையா?: தமிழ்ப் புத்தாண்டிற்கு தர்க்க ரீதியிலான விளக்கம்!

தையா? சித்திரையா?: தமிழ்ப் புத்தாண்டிற்கு தர்க்க ரீதியிலான விளக்கம்!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காலங்காலமாக சித்திரை முதல் நாளில், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடி பழக்கப்பட்டு விட்ட தமிழர்களிடம், திடீரென்று அன்றைய நாளில் புத்தாண்டு இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும்?. வெகுசன மக்களிடம் அதிர்ச்சியும், குழப்பங்களும், எதிர்மறை விமர்சனங்களும் எழுமல்லவா? அத்தனையும் எழுந்தன முந்தைய திமுக ஆட்சியின் மீது.   புரையோடிப் போன நம்பிக்கை:   கடந்த 2008ல் ஆட்சியில் இருந்த திமுக, 'நித்திரையில் இருக்கும் தமிழா உனக்கு சித்திரை அல்ல புத்தாண்டு' என்று புரட்சிக்கவியின் வரிகளை மேற்கோள் காட்டி, 'தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு' என்று ஆணையிட்டது. சரியோ தவறோ... புரையோடிப் போன ஒரு நம்பிக்கையை, அரசாணை வாயிலாக தடுத்து அணை போட்டு விட முடியுமா?. இது ஹர்ஷவர்த்தனர் காலம் இல்லை.     இந்த அரசாணைக்கு முன்பே, திரு.வி.க., தைதான் ஆண்டின் தொடக்கம் என்றார். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலி...
#ஓடிப்போ மோடி!: உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்#GoBackModi

#ஓடிப்போ மோடி!: உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்#GoBackModi

அரசியல், இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் நடத்தும் கருப்புக்கொடி போராட்டங்கள், ஆளும்தரப்பு மற்றும் பாஜக வட்டாரத்தில் கடும் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் உருவாக்கப்பட்ட #ஓடிப்போமோடி என்ற ஹேஷ்டேக் உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது. நாடு முழுவதும் மோடி மீது எழுந்துள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இந்த ட்விட்டர் ட்ரெண்டிங் அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் போக்குக் காட்டி வருகிறது நடுவண் பாஜக அரசு. இதற்கான 6 வார கால அவகாசம் முடிவுற்ற கடைசி நாளில், இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 'ஸ்கீம்' என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் தெரியவில்லை எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்திய அரசு. எதிர்வரும் கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துத்தான் திட்டமிட்ட...
சேலம் கூட்டுறவு தேர்தல்: அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கோல்மால் செய்தது அம்பலம்!

சேலம் கூட்டுறவு தேர்தல்: அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கோல்மால் செய்தது அம்பலம்!

ஈரோடு, சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்யாதவர்களை எல்லாம் நிர்வாகிகளாக நியமிக்க சதி செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. சேலம் பள்ளப்பட்டியில் எஸ்.111, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், கடந்த 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த வீட்டுவசதி சங்க பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் அங்கத்தினர்களாக உள்ளனர். இதன் உறுப்பினர்களிடம் இருந்து நிரந்தர இட்டு வைப்புகளை பெறுவதும், அவர்களுக்கு கடனுதவிகளை வழங்குவதும் இந்த சங்கத்தின் பணிகளாகும். கூட்டுறவு தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சிகளே அனைத்துப் பதவிகளையும் சட்ட விரோதமாக கைப்பற்றுவதுதான் தமிழ்நாட்டில் காலங்க...
காவிரி விவகாரம்: கர்நாடகா பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்

காவிரி விவகாரம்: கர்நாடகா பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்

அரசியல், இந்தியா, ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு நடுவண் அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பாஜகவை தவிர ஆளும் அதிமுக கட்சி முதல் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடையடைப்பு, முற்றுகை, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 7ம் தேதி முதல் காவிரி உரிமை மீட்பு நடைப்பயணம் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கும்போதும் சிலர் கருப்புக்கொடி காட்டியும், காலணிகளை மைதானத்திற்குள் வீசியும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக, போட்டிக்குத் தடை விதிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, செல்வமணி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலைய...
பிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்?: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்! விழிப்புணர்வு தொடர் #1

பிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்?: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்! விழிப்புணர்வு தொடர் #1

இந்தியா, கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2க்குப் பிறகு பட்டமேற்படிப்பில் எதை தேர்வு செய்வது? என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கான குறுந்தொடர் இது. கோர் ஏரியா என்று சொல்லக்கூடிய முதன்மைப் பாடங்களைத் தவிர்த்த பிற வாய்ப்புள்ள பாடப்பிரிவுகள் குறித்து இந்த தொடரில் பார்க்கலாம். பொறியியல் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்கும் மிகப்பெரும் இடைவெளி ஏற்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாக இருந்தது. பிளஸ்-2வில் வணிகவியல் பாடப்பிரிவை எடுத்த மாணவர்கள் பெரும்பாலும் பட்டப்படிப்பில் பி.காம்., பி.பி.எம்., பி.பி.ஏ., அல்லது பி.ஏ., பொருளாதாரம், கூட்டுறவு, வரலாறு இப்படி தெரிவு செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர். நானும் நண்பர் ஒருவரும் சில மாதங்களுக்கு முன்பு, ஈழ அகதி முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்குவது தொடர்பான தகவல் சேகரிப்புக்குச் சென்றிரு ந்த...
தமிழகம்: அணையா நெருப்பு!:  ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

தமிழகம்: அணையா நெருப்பு!: ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தவறான நீதி வழங்கிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு, காவிரி விவகாரத்தில் பாஜகவின் அநீதிக்கு எதிராகவும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.     இந்திய அளவில் மிகப்பெரும் போராட்டக் களமாக, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக ஈழ இறுதி யுத்த நாள்களில் தொடங்கிய போராட்டம் வெப்பம் குறையாமல் தொடர்கிறது. ஈழத்தமிழர்கள், கூடங்குளம், டாஸ்மாக், நெடுவாசல், விவசாயிகள் தற்கொலை, நியூட்ரினோ, காவிரி என அடுத்தடுத்து உஷ்ணம் கிளம்பிக் கொண்டே இருக்கிறது.   இதற்கான பொறி, கண்ணகி விதைத்தது. செங்கோல் முறைமையில் இருந்து வழுவிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு அணையாமல் தணலாக விசும்பிக் கொண்டே இருக்கிறது.   எங்கெல்லாம் எப்போதெல்லாம் நீதி வழுவுகிறதோ அப்போதெல்லாம் தணல் கனிந்து பெரும் ஜூவா...
வராக்கடன்: 4 ஆண்டுகளில் 2.72 லட்சம் கோடி தள்ளுபடி!;  ஏழைகளை மட்டும் வஞ்சிக்கும் அரசு

வராக்கடன்: 4 ஆண்டுகளில் 2.72 லட்சம் கோடி தள்ளுபடி!; ஏழைகளை மட்டும் வஞ்சிக்கும் அரசு

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த நான்கு ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளில் பெரு முதலாளிகள் வாங்கியிருந்த கடனில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 558 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஓர் ஏழை விவசாயி வாங்கியிருந்த டிராக்டர் கடனை வசூலிக்க அடியாள்களை அனுப்பும் வங்கி நிர்வாகங்கள், சர்வ வல்லமை படைத்த பெரு முதலாளிகளிடம் கைக்கட்டி நின்று சேவகம் செய்கிறது. பொய்த்துப் போன வானத்தால், கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்கும் விவசாயிகளை அடித்தே கொல்கின்றனர் வங்கியாளர்களும், காவல்துறையினரும். கடனை பெற்றுவிட்டு, அதையும் திருப்பிச் செலுத்தாமல் போக்குக் காட்டிவரும் பெரும் பணமுதலைகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்கு வழியனுப்பி வைக்கிறது இந்திய அரசு. கல்விக்கடன் கேட்டாலோ, முத்ரா திட்டத்தில் சில லட்சங்களை தொழில் தொடங்க கடன் கேட்டுச் செல்லும் சாமானியர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு வதைக்கும் வங்கிய...
விடுதலை புலிகள் பெயரில் கோடிக்கணக்கில் வசூல்!; சீமானின் முகத்திரையை கிழித்த வைகோ!!

விடுதலை புலிகள் பெயரில் கோடிக்கணக்கில் வசூல்!; சீமானின் முகத்திரையை கிழித்த வைகோ!!

அரசியல், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று கூறி உலக நாடுகளிடம் கோடிக்கணக்கில் வசூலிப்பதாகவும், அவர் பிரபாகரனுடன் இருப்பதுபோல் கிராஃபிக்ஸில் புகைப்படம் உருவாக்கிக் கொண்டதாகவும் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் குறித்து மதிமுக தலைவர் வைகோ இன்று (ஏப்ரல் 4, 2018) கடுமையாக விமர்சித்துள்ளார். சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம், மதிமுக தலைவர் வைகோவை ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து கேலிச்சித்திரங்களை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக வைகோவை தெலுங்கு நாயக்கர் என்று சாதி பெயரைச் சொல்லி சீமான் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், நியூட்ரினோ திட்டத்தைக் கண்டித்து நடைப்பயணம் மேற்கொண்டுள்ள வைகோ, பயணத்தின் இடையே இன்று (ஏப்ரல் 4, 2018) ஊடகத்தினரைச் சந்தித்தார். அப்போது சீமான் கட்சியினர் வைகோவை விமர்சித்து வருவது குறித்து அவரிடம் வினா எழுப்பப்...
காவிரி விவகாரம்: கொலை வாளினை எடடா!

காவிரி விவகாரம்: கொலை வாளினை எடடா!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து மற்றுமொரு மெரீனா புரட்சிக்கு தமிழக இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். துவக்க நிலையிலேயே கைது நடவடிக்கை மூலம் கடுமை காட்டும் தமிழக அரசை முற்றாக வீட்டுக்கு அனுப்பும் புதிய அத்தியாயத்தை இந்தப் போராட்டம் முன்னெடுக்கும் எனத்தெரிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான முழு காலக்கெடுவையும் தின்று தீர்த்த நடுவண் பாஜக அரசு, தமிழக நலனுக்கு எதிராக மிகத்தந்திரமான நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. சட்ட ரீதியாக தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரையும் கிடைக்க விடாதபடி, பாஜகவும் காங்கிரஸ் கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. மக்கள் நலன் பாராத காட்டுமிராண்டித்தன போக்கிற்கு வாக்கு அரசியல் மட்டுமே காரணம். கர்நாடகாவில் விரைவில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தியே பாஜக, இத்தகைய மாற்றாந்தாய் மனப்போக்கி...