Sunday, January 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

மற்றவை

ஸ்ரீதேவி: உதிர்ந்தது செந்தூரப்பூ….!; ”கந்தக மண்ணில் பிறந்த கனவுக்கன்னி”

ஸ்ரீதேவி: உதிர்ந்தது செந்தூரப்பூ….!; ”கந்தக மண்ணில் பிறந்த கனவுக்கன்னி”

இந்தியா, சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், விருதுநகர்
ஸ்ரீதேவி: 13-08-1963 - 24-02-2018 விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்த அய்யப்பன் - ராஜேஸ்வரி தம்பதி, தங்கள் மகள், எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளையடிப்பாள் என ஒருபோதும் யோசித்திருக்க மாட்டார்கள். அந்த தம்பதியின் மகள், ஸ்ரீதேவி.   பட்டாசு தொழிற்சாலைகள் நிறைந்த சிவகாசி ஒரு கந்தக பூமி. அந்த மண்ணில் இருந்து ஒரு கனவுக்கன்னி, ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இந்திய சினிமாவை ஆட்சி செய்திருக்கிறார் என்பதும்கூட நமக்கான அடையாளம்தான். அவர் மரித்துப்போனார் என்பதைக் கூட நம்ப முடியாத வகையில் கோடிக்கணக்கான மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். பால் மனம் மாறாத வயதிலேயே ஸ்ரீதேவி வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார். நான்கு வயதிலேயே, 'துணைவன்' படத்தில் முருகன் வேடம். எல்லா...
ஓபிசி வங்கியில் ரூ.390 கோடி மோசடி; நகை வியாபாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

ஓபிசி வங்கியில் ரூ.390 கோடி மோசடி; நகை வியாபாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
டெல்லியில் உள்ள ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 390 கோடி ரூபாய் கடன் பெற்று, தலைமறைவாகிவிட்ட நகை வியாபாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீரவ் மோடி என்ற வைர நகை வியாபாரி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.11400 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. புகார் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இதன் பரபரப்பு அடங்குவதற்குள் ரோட்டோமேக் பேனா நிறுவனத் தலைவர் விக்ரம் கோத்தாரி, ஆறு பொதுத்துறை வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.800 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த மெகா மோசடி வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த மற்றொரு நகை வியாபாரி. டெல...
திறக்கப்பட்டது ஜெயலலிதா சிலையா? அல்லது காந்திமதி சிலையா?; நெட்டிஸன்கள் கிண்டல்

திறக்கப்பட்டது ஜெயலலிதா சிலையா? அல்லது காந்திமதி சிலையா?; நெட்டிஸன்கள் கிண்டல்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அவருடைய முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. சிலை, ஜெயலலிதா உருவத்தோடு பொருந்திப் போகாமல் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஆளும் அதிமுகவினர் விமர்சையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அவருடைய பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24, 2018), சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதாவின் 7 அடி உயரமுள்ள முழு உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. அங்கு ஏற்கனவே உள்ள எம்ஜிஆர் சிலை அருகிலேயே ஜெயலலிதாவின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர். ''இந்தியாவிலேயே கட்டுக்கோப்புடன் கட்சி நடத்திய ஒரே தலைவர் அம்மா அவர்கள்தான்'' என்று முதல்வர் இபிஎஸ் புகழாரம் சூட்டினார். ''ஆட்சி நடத்து...
கையடக்க கணினி… ‘கியூஆர் கோடு’ புத்தகம்!;  நவீனமாகிறது அரசுப்பள்ளிகள்!!

கையடக்க கணினி… ‘கியூஆர் கோடு’ புத்தகம்!; நவீனமாகிறது அரசுப்பள்ளிகள்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சி-ற-ப்-பு-க்- க-ட்-டு-ரை- அரசுப்பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கல்வி வந்த பிறகுதான் கணினியை தொட்டுப் பயன்படுத்தவே முடியும் என்றிருந்தது ஒரு காலம்; இன்றைக்கு, அரசுப்பள்ளியில் பயிலும் 5 வயது குழந்தைகூட கையடக்கக் கணினியில் (டேப்லெட்) பாடம் கற்கும் உன்னத நிலையை நிதர்சனமாக்கியிருக்கிறது அனைவருக்கும் கல்வித்திட்டம். அரசுத் தொடக்கப்பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வரும் செயல்வழிக்கற்றலின் அடுத்தக்கட்ட நகர்வாகவே இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டை நான் கருதுகிறேன். அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் மாவட்டத் திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளரான தேவிகா, குழந்தைகள் கற்றல், கற்பித்தல் முறைகளில் இயல்பாகவே ஆர்வம் காட்டுபவர். புதிதாக குழந்தைநேய கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகச் சொன்னவர், அதுகுறித்து ஆசிரியர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவல் சொன்னார். மா...
கொடூரன் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை:  மக்களின் மனசாட்சி சொல்வது என்ன?

கொடூரன் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை: மக்களின் மனசாட்சி சொல்வது என்ன?

குற்றம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆறு வயது சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்புணர்வு செய்ததோடு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த கொடூரன் தஷ்வந்த் வழக்கு ஒரு வழியாக இன்று (பிப்ரவரி 19, 2018) முடிவுக்கு வந்திருக்கிறது. சிறுமியை பறிகொடுத்த பெற்றோருக்கு மகளின் கருகிய சடலமே கிடைத்தது. முழுதாகக்கூட கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் செய்துவிட்டு 24 வயதான தஷ்வந்த்தால் ஒரு சராசரி மனிதன் போலவே எப்போதும்போல எந்தவித குற்ற உணர்வும் இல்லாமலேயே நடந்து கொள்ள முடிந்திருக்கிறது. ஊரே சிறுமியை காணாமல் தேடும்போது, தான் மட்டும் அதுபற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தால் எப்படி என அப்போது அவன் யோசித்திருக்கக் கூடும். அதனால்தான் அவனே அனகாபுத்தூர் பகுதியில் சிறுமியின் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் அளித்து, நல்ல பிள்ளை பெயர் எடுக்க முடிவு செய்திருந்திருக்கிறான். ஆனால், அதுவே அவனுக்கு தூக்குத் தண்டனைய...
சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை!; 46 ஆண்டுகள் சிறை!!

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை!; 46 ஆண்டுகள் சிறை!!

குற்றம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த வழக்கில் கொடூரன் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 19, திங்கள் கிழமை) மாலை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அவனுக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி: சென்னை குன்றத்தூர் முகலிவாக்கத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பாபு. சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இவர்களுடைய மகள் ஹாசினி (6). அதே குடியிருப்பைச் சேர்ந்தவர் சேகர் - சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த் (24). பொறியியல் பட்டதாரி. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் தஷ்வந்த். அவள் வலியால் துடித்து கூச்சலிட்டாள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துவிட்டால் என்ன ச...
ரூ.800 கோடி மோசடி: ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் கைது

ரூ.800 கோடி மோசடி: ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் கைது

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11400 மோடி வழக்கின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், அதேபோன்ற மற்றொரு மோசடி வழக்கில் ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரியை சிபிஐ அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 19, 2018) கைது செய்துள்ளனர். பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.11400 கோடி மோசடி செய்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, சொத்துக்களை முடக்கியுள்ள நிலையில் நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், பிரபல பேனா நிறுவனமான ரோட்டோமேக் நிறுவனத் தலைவரான விக்ரம் கோத்தாரியும் நீரவ் மோடி போலவே வங்கிகளின் கடன் பெற்று மோசடி செய்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், கான்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ரோட்டோமேக் நிறுவனம். அந்த நிறவனத் தல...
காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி!

காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 16ம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இது தொடர்பாக யாரும் மேல்முறையீடு செய்ய இயலாது என்பதால், இப்போதைக்கு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் பெரிய அளவில் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை. அதற்காக உச்ச நீதிமன்றம் நடுநிலையான தீர்ப்பை வழங்கி விட்டதாக நாம் கருதிவிட முடியாது. காவிரி நீர் பங்கீட்டில் பெரிய அளவில் ஆதாயம் அடைவது கர்நாடகமும், தமிழகமும்தான். கேரளாவும், புதுச்சேரியும் சொற்ப அளவில் ஆதாயம் பெறக்கூடிய இதர மாநிலங்கள். காவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 1991ம் ஆண்டு அளித்த இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் வழங்க வேண்டும் என்று சொல்லி இருந்தது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப...
11400 கோடி ரூபாய் வங்கி கொள்ளை மோடிக்கு தெரிந்தே நடந்ததா? அதிர்ச்சி தகவல்கள்

11400 கோடி ரூபாய் வங்கி கொள்ளை மோடிக்கு தெரிந்தே நடந்ததா? அதிர்ச்சி தகவல்கள்

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 11400 கோடி ரூபாய் மோசடி செய்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட டாவோஸ் மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் பாஜக மேலிடத்தின் ஆசியுடன் இந்த முறைகேடு நடந்திருக்கலாம் என்ற அய்யத்தை காங்கிரஸ் எழுப்பி இருக்கிறது. யார் இந்த நீரவ் மோடி?: குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் நீரவ் மோடி (46). 'ஃபயர் ஸ்டார் டைமண்ட்' என்ற பெயரில் கச்சா வைரங்களை கொள்முதல் செய்து, அதை ஆபரணங்களாக வடிவமைத்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருவதுதான் அவருடைய தொழில். இந்தியாவில் டெல்லி, மும்பை, சூரத் ஆகிய இடங்களில் அவருக்கு பங்களாக்கள், நகைக்கடைகள் உள்ளன. தவிர, லண்டன், சிங்கப்பூர், நியூயார்க், லாஸ் வேகாஸ், ஹவாய் தீவுகள், பெய்ஜிங் ஆகிய இடங்களிலும் கடைகள் உள்ளன. பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணங்களிலேயே நேரத்தை செலவிடுபவர் நீரவ் மோடி. பால...