Sunday, January 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

மற்றவை

பல்கலை, கல்லூரிகளில் இனி ‘நொறுக்க’, ‘கொறிக்க’ முடியாது! #JunkFood #UGC

பல்கலை, கல்லூரிகளில் இனி ‘நொறுக்க’, ‘கொறிக்க’ முடியாது! #JunkFood #UGC

இந்தியா, கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  இந்தியாவில் இளம் தலைமுறையினர் அதிகளவில் உடல்பருமனால் அவதிப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் வளாகத்திலும் இனி நொறுக்குத்தீனிகள் (Junk Food) விற்கக்கூடாது என்று பல்கலை மானியக்குழு (யுஜிசி) அதிரடியாக தடை விதித்து உள்ளது.   இந்தியா எதிர்கொண்டுள்ள உடல்நலம் சார்ந்த முக்கிய பிரச்னைகளுள் ஒன்று, உடல்பருமன் (Obesity). 1975ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் ஒரு மில்லியன் பேருக்கு உடல்பருமன் பிரச்னை இருந்தது. ஆனால், 2016ம் ஆண்டு நிலவரப்படி 30 மில்லியன் இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல்பருமனால் அவதிப்படுவதாக கூறுகிறது ஓர் ஆய்வு. அடுத்த ஏழு ஆண்டுகளில், அதாவது 2025ல் இப்பிரச்னைக்கு 70 மில்லியன் பேர் இலக்காகக் கூடும் என்றும் எச்சரிக்கிறது அந்த மருத்துவ ஆய்வு. பாட்டிக்கு இருந்த அதே பிரச்னை பேத்திக்கும் இருக்கலாம். அந்த வகையில் இது...
40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகளவில் சாலை விபத்தில் பலியாகின்றனர்!

40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகளவில் சாலை விபத்தில் பலியாகின்றனர்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு செய்தி -   சாலை விபத்துகளில் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகளவில் பலியாகின்றனர் என்பது போக்குவரத்துத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.   தமிழகத்தில் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ஒருபுறம் கவனம் செலுத்தப்பட்டு வந்தாலும், வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்து வருவது போக்குவரத்துத்துறைக்கு கடும் சவாலாக விளங்குகிறது. சாலை விபத்துகளில், இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுவது பெரும் சவாலாக உள்ளது. இதையடுத்து, சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் போக்குவரத்துத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு ஆய்வுகளில் இறங்கியுள்ளனர்.   கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 16157 பேர் பலியாகியுள்ளனர். தொடர் விழிப...
எட்டு வழிச்சாலைக்கு எதிராக ஒரு பிரம்மாஸ்திரம்!;  நாளை கிராம சபைக்கூட்டம்… மறந்துடாதீங்க!!

எட்டு வழிச்சாலைக்கு எதிராக ஒரு பிரம்மாஸ்திரம்!; நாளை கிராம சபைக்கூட்டம்… மறந்துடாதீங்க!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தகவல், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடும் விவசாயிகள் நாளை, (ஆகஸ்ட் 15, 2018) நடைபெற உள்ள கிராம சபைக்கூட்டத்தில் அதற்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதன் மூலம் திட்டத்தை முடக்கி வைக்க முடியும் என்கிறார்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்.   கிராம மக்களுக்கு இருக்கும் உச்சபட்ச அதிகாரத்தை நிருவுவதற்கான ஒரே இடம் கிராம சபைக்கூட்டம் எனலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, ஓராண்டில் ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய நான்கு நாள்களில் கண்டிப்பாக கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இவை தவிர, தேவைக்கேற்ப சிறப்பு கிராம சபைக்கூட்டமும் நடத்திக்கொள்ள முடியும். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 12618 கிராம ஊராட்சிகளிலும் நாளை (ஆகஸ்ட் 15) கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் பல ஊராட்சிகளில் கிர...
போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

கல்வி, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
-சிறப்பு செய்தி-   சுங்குவார் சத்திரத்தில் சுக்கு காபி விற்ற அனுபவம் இருந்தாலே போதும், வணிகவியல் துறை பேராசிரியர் ஆகிவிடலாம் என்பதை நிரூபித்து இருக்கிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். பீடிகை போடாமல் நேராக விஷயத்துக்கு வருவோம்.   பெரியார் பல்கலையில் கடந்த 2015-2016ம் ஆண்டின் வரவு, செலவினங்கள் தணிக்கை செய்யப்பட்டது. உள்ளாட்சித் தணிக்கை ஆய்வாளர் ரவி தலைமையிலான குழுவினர், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை தணிக்கைப் பணிகளை நடத்தி முடித்தனர்.   தணிக்கை நடத்திய காலக்கட்டம் வரை கடந்த 20 ஆண்டுகளில் பெரியார் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் கிட்டத்தட்ட ரூ.47 கோடிக்கு உரிய செலவின ஆவணங்களை தணிக்கைக்கு உட்படுத்தவில்லை என்பது, தணிக்கை அறிக்கையின் ஹைலைட் பாயிண்ட்.   அந்த அறிக்கையில், மேலும் பல முறைகேடுகள் சுட்டிக்காட்டப...
1199 குரூப்-2 பணியிடங்களுக்கு ஆளெடுப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

1199 குரூப்-2 பணியிடங்களுக்கு ஆளெடுப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

சேலம், தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொகுதி-2 பிரிவின் கீழ் வரக்கூடிய 1199 பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று (ஆகஸ்ட் 10, 2018) வெளியிட்டுள்ளது.   அதிகபட்சமாக கூட்டுறவுத்துறையில் 599 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், வேளாண்மைத் துறையில் 118 மேற்பார்வையாளர் / இளநிலை கண்காணிப்பாளர் பணியிடங்களும், உள்ளாட்சித் தணிக்கைத்துறையில் 97 உதவி ஆய்வாளர் பணியிடங்களும், பால் வளத்துறையில் 48 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், தொழிலக கூட்டுறவு சங்கங்களில் 30 கூட்டுறவு அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.   பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி), முதன்மைத் தேர்வு (மெயின்), நேர்காணல் ஆகிய மூன்று படிநிலைகள் மூலம் இப்ப...
”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  - சிறப்பு நேர்காணல் -   சேலம் அருகே எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களிடம் நேரில் கருத்து கேட்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, ஜூலை 18ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்ததில், 'இந்த கைதே சட்ட விரோதமானது,' என்று கண்டித்த சேலம் மாவட்ட நீதிமன்றம், மறுநாள் மாலையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூலை 20ம் தேதி காலையில், சேலம் மத்திய சிறையில் இருந்து சீமான் வெளியே வந்தார்.   அன்று இரவு, சேலத்தில் சீமான் தங்கியிருந்த ஹோட்டலில் அவரை சந்தித்தோம். நாம் சென்ற நோக்கம் குறித்து, ஹோட்டல் லாபியில் உள்ள இன்டர்காம் மூலம் தகவல் தெரிவித்தோம்.   அவருடைய வழக்கறிஞரின் ஆலோசனையின்பேரில் நம்மை சந்தித்தார் சீமான். நேர்காணலின் துவக்கம் முதல் இறுதிவரை கொஞ்சமும் அவரிடம் எனர்ஜி குறையவில்லை. வார்த்தைகள் ஒவ்வ...
நிலத்தை பறித்துக்கொண்டால் நாங்கள் எங்கே போவோம்?; நிலமற்ற கூலிகள் குமுறல்!!

நிலத்தை பறித்துக்கொண்டால் நாங்கள் எங்கே போவோம்?; நிலமற்ற கூலிகள் குமுறல்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
எட்டு வழிச்சாலை என்றதுமே, நிலத்தை பறிகொடுத்து நேரடியாக பாதிக்கப்படும் நிலத்தின் உரிமையாளர்களான விவசாயிகளைப் பற்றி மட்டுமே பேசும் நாம், அதிகம் கவனப்படுத்தப்படாத மற்றொரு பெருங்கூட்டமும் இதனால் பாதிக்கப்படுகிறது என்பதை மறந்தே போனோம்.   காலங்காலமாக நில உடைமையாளர்களிடம் கூலி வேலை செய்யும் விவசாய தொழிலாளர்கள் என்ற பெரும் சமூகமே இந்த எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். 2009களில் உலகமே பொருளாதார மந்தநிலையால் சுருண்டு கிடந்தபோது, இந்திய பொருளாதாரம் கம்பீரமாக நின்றது. அதற்கு சாமானியனின் சேமிப்பும், கிராமப் பொருளாதாரமும் முக்கிய காரணிகளாக இருந்தன.   அத்தகைய வலிமையான கிராமப் பொருளாதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டதில், நிலமற்ற கூலித்தொழிலாளர்களின் உழைப்பு அளப்பரியது. எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளருக்கு, வழிகாட்டி மதிப்பில் இருந்து இரண்டரை...
சேலத்தில் சாராய சாம்ராஜ்யம்தான் நடக்குது!; போலீஸ் கமிஷனர் டென்ஷன்

சேலத்தில் சாராய சாம்ராஜ்யம்தான் நடக்குது!; போலீஸ் கமிஷனர் டென்ஷன்

சேலம், திண்ணை, முக்கிய செய்திகள்
  ''சேலத்தில் ராம ராஜ்ஜியம் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சந்துக்கடைகள் மூலமாக மது விற்பனை நடப்பதாக மக்களிடம் இருந்து புகார்களை பார்க்கும்போது என் நம்பிக்கை பொய்த்துவிட்டது. குற்றங்களை தடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மீது கடுமையான ஆக்ஷன் எடுக்கப்படும்,'' என்று சேலம் போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.   சேலம் மாநகரில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து கடந்த பத்து நாள்களாக போலீசார் ரவுடிகளை கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த பரபர ஆக்ஷனில் கடந்த 9ம் தேதி 37 ரவுடிகள் உள்பட 57 பேரும், 12ம் தேதி 39 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் ஜவஹர், அறிவு என்கிற அறிவழகன், மணியனூர் வைத்தி, கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சுலைமான், ஜான், டெனிப...
எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்…  மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!

எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்… மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!

சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சென்னை - சேலம் இடையிலான எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆகியோரை கேலி, கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில்  வெளியிடப்பட்டுள்ள மீம்ஸ்கள் ரொம்பவே வைரல் ஆகி வருகின்றனர்.   சென்னை - சேலம் இடையே எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டம், 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது. இதற்காக 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில், 90 சதவீத நிலம், விளை நிலங்கள் ஆகும்.     இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதில் இருந்தே விவசாயிகள், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, விவசாயிகள் தானாகவே முன்வ...