சேலம் கலெக்டருடன் நூலகத்துறை குஸ்தி! அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி!
சேலம் மாவட்ட மைய
நூலகத்திற்குச் சொந்தமான
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள
இடத்தை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நிறுவனத்துக்கு இலவசமாக
கொடுக்க மாவட்ட நிர்வாகம்
முயற்சிப்பதால், நூலகத்துறை
அதிகாரிகள் கடும் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகே, மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. மாநகரின் மையப்பகுதியில் அசோகா மரம், புளிய மரம், பனை மரம், கொய்யா, மரமல்லி, பாதாம், வாழை மரங்கள் சூழ காற்றோட்டமான சூழ்நிலையில் இந்த நூலகம் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்நூலகம் செயல்படுகிறது.
சிவில் சர்வீசஸ் தேர்வு, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கென பிரத்யேக நூல்கள் தருவிக்கப்பட்டது, பெண்களுக்கென தனி வாசிப்புப்பிரிவு என தொடங்கப்பட்டதால் இளைஞர்க...









