Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மருத்துவம்

ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க…

ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க…

அலோபதி, சேலம், மருத்துவம்
மருத்துவமனைகளில் அதிகளவில் நடக்கும் அறுவை சிகிச்சைகளில் ஒன்று, குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சை. பெண்களைவிட அதிகளவில் ஆண்களே ஹெர்னியா பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? தீர்வுகள் குறித்து விளக்குகிறார், சேலம் டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை மருத்துவர் வையாளி ராமு.   குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன?: பலரும் கருதுவதுபோல் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியா, ஒரு நோய் அல்ல. அது, உடல் பகுதியில் ஏற்படும் ஒரு பழுது. அவ்வளவுதான். வயிற்றுப்பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக்கொண்டு இறங்கி விடும். இதைத்தான், 'ஹெர்னியா', அதாவது 'குடல் இறக்கம்' என்கிறோம்.   அறிகுறிகள்?   வயிறு வ
20 ரூபாய்க்கு வைத்தியம்…! “ஏழைகளை நோக்கி நகரும் களஞ்சியம்”

20 ரூபாய்க்கு வைத்தியம்…! “ஏழைகளை நோக்கி நகரும் களஞ்சியம்”

மருத்துவம்
எப்பேர்பட்ட செல்வந்தர்களும் இடரி விழும் தருணம், எதிர்பாராத மருத்துவச் செலவுகளின்போது மட்டுமே. நடுத்தர, கீழ்நடுத்தர மக்களின் நிலையோ இன்னும் மோசம். மருத்துவர், அந்த ஸ்கேன் எடு; எக்ஸ் ரே எடு; சளி டெஸ்ட், சிறுநீர் டெஸ்ட் என டெஸ்டுக்கு மேல் டெஸ்ட் வைப்பார். மருத்துவர் கட்டணம், சிகிச்சை செலவு என்பதெல்லாம் இல்லாமல் பரிசோதனைக் கட்டணமே பாதி சேமிப்பை கரைத்து விடும். இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க, குறிப்பாக ஏழை மக்களுக்காகவே உதவ காத்திருக்கிறது, சேலம் சுகம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. களஞ்சியம் மகளிர் குழுவின் ஓர் அங்கமான இம்மருத்துவமனை, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிர் சாலையில் இயங்குகிறது. முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. "சேலம் மாவட்டத்தில் களஞ்சியம் குழுக்களில் முப்பது ஆயிரம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். குழுவில் உள்ள எல்லோரும் கூலி வேலைக்குச் செல்லும் அன்றாடங்காய்ச்
மிரட்டும் ஹீமோபிலியா…! “பெண்களையும் தாக்கும்” #Hemophilia

மிரட்டும் ஹீமோபிலியா…! “பெண்களையும் தாக்கும்” #Hemophilia

தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்
'ஏப்ரல்-17 உலக ஹீமோஃபிலியா தினம்'   உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தால், ரத்தம் வெளிக்காற்றுடன் தொடர்பு கொண்ட சில நொடிகளிலேயே உறைய ஆரம்பித்து விடும். இது, நாம் உயிர் வாழ்வதற்காக இயற்கை நமக்களித்த கொடை.   ரத்தம் உறையாமை ஆனால், ஹீமோபிலியா (HEMOPHILIA) (ரத்தம் உறையாமை) குறைபாடு உள்ளவர்களுக்கு இங்குதான் சிக்கலே. இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தம் உறையாது. நீண்ட நேரம் ரத்தப்போக்கு நீடிக்கும். அதனால் உயிரிழப்புகூட நிகழக்கூடும்.   ரத்தம் உறைவதற்கு ஒரு வகையான புரதச்சத்து தேவை. இந்த புரதம், ரத்தத்தில் உள்ள 13 வகையான காரணிகளில் உள்ளன. அதை மருத்துவர்கள், பேக்டர் (Factor) 1 முதல் பேக்டர் 13 வரை வகைப்படுத்துகின்றனர்.   எக்ஸ் (X) குரோமோசோம் இந்த பேக்டர்கள் 'எக்ஸ்' (X) குரோமோசோம்களில் உள்ளன. அதனால்தான், 'எக்ஸ்' குரோமோசோம் பாதிக்கப்படும்போது, ரத்தம் உறைய
‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்!

‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்!

அரசியல், அலோபதி, இந்தியா, உலகம், கல்வி, தமிழ்நாடு, தொழில்நுட்பம், மருத்துவம், முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் வட மாநிலங்களுக்கு காட்டிய சலுகையை, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஓரவஞ்சனையுடன் செயல்பட்டுள்ளதாக நடுவண் பா.ஜ.க., அரசு மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.  “ஒரே தேசம், ஒரே தேர்வு” என்பது நீட் தேர்வு முறைக்கு சொல்லப்பட்ட வியாக்கியானம். பீற்றிக் கொள்ளப்பட்ட “ஒரே தேர்வு” என்பது நடைமுறையில் உள்ள மற்ற தேர்வுகளை ஒழிக்கவில்லை; என்பது ஒருபுறம் இருக்கட்டும். மேற்படி தேர்வுக்கு மாணவர்கள் தங்களைத் தயாரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஏற்றத் தாழ்வாகவே இருக்கின்றது. வசதி படைத்த மாணவர்கள், பல லட்சங்கள் செலவு செய்து சி.பி.எஸ்.இ. பாட திட்டம் கொண்ட ஐந்து நட்சத்திர பள்ளிகளில் படிப்பதோடு, மேலும் சில லட்சங்கள் செலவு செய்து நீட் தேர்வுகளுக்கும் தங்களைத் தயாரித்துக் கொண்டனர். இவர்களோடு, மாநில அரசுகளின் பாட திட்டங்களில் பயின்ற ஏழை மாணவ
அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்

அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்

அலோபதி, பெண்கள் நலம், மகளிர், மருத்துவம், முக்கிய செய்திகள்
ஆண்களோ, பெண்களோ தங்கள் முகத்தை அழகு படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இந்த உளவியலைப் புரிந்து கொண்டதால்தான் பல நுகர்பொருள் நிறுவனங்கள், அழகு சாதன பொருட்களை சந்தையில் அள்ளிக் கொட்டி வருகின்றன. இந்தியாவில் மட்டும் அழகு சாதனப் பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது. ஆண்டுதோறும் 20 விழுக்காடு விற்பனை கூடியும் வருகிறது. ஆனால் சந்தையில் விற்கப்படும் சோப் முதல் முகத்திற்குப் போடும் கிரீம் வரை எதுவும் நம் முகத்திற்கு நிரந்தர அழகை தராது; மாறாக வேறு சில பக்க விளைவுகளை மட்டுமே உண்டாக்கும் என எச்சரிக்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை தோல் நோய் மருத்துவர் மேஜர்.கனகராஜ். "அந்தப் பெண்ணிற்கு சுமார் 22 வயது இருக்கும். விடிந்தால் திருமண நிச்சயதார்த்தம். அந்த நிலையில் அந்தப்பெண், ஏதோ ஒரு அழகு ந
வெண்குஷ்டம் உள்ளவரும் மனிதரே…! “ஒதுக்குதல் வேண்டாம்” – மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ்

வெண்குஷ்டம் உள்ளவரும் மனிதரே…! “ஒதுக்குதல் வேண்டாம்” – மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ்

அலோபதி, சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு, தோல். ஒருவருக்கு இயல்பான தோலின் நிறம் என்பது மரபியல் சார்ந்தே அமைகின்றன. அதேநேரம் தோல் நோய்கள் ஏற்பட்டால், அவை மனதையும் உளவியல் ரீதியாக தாக்குகின்றன. குறிப்பாக, தோல் நோய்களால் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தோலில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, வெண்குஷ்டம் (Vitiligo). உலகளவில் 1 சதவீதம் பேருக்கு வெண்குஷ்டம் பிரச்னை உள்ளதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. வெண்குஷ்டம் ஏன் ஏற்படுகிறது, கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக சொல்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப் கேர் மருத்துவமனை' தோல் சிகிச்சை மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ். இனி அவர்... ஒருவருடைய தோலில் வெண்குஷ்டம் உருவாவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மரபணுக்கள் குறைபாடு அல்லது தோலுக்கு நிறம் தரக்கூடிய 'மெலனின்'
சிறுதானிய தின்பண்டங்கள் – அசத்தும் சேலம் இளைஞர்

சிறுதானிய தின்பண்டங்கள் – அசத்தும் சேலம் இளைஞர்

மருத்துவம்
வணிகமயமான இன்றைய உலகில் தொழில் தர்மம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில், பாரம்பரிய சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் 100 சதவீத வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கிறார், பிரபாகரன். சேலம் உடையாப்பட்டி செல்வநகரை சேர்ந்த பிரபாகரன், அடிப்படையில் எம்.இ., கணினி பொறியியல் பட்டதாரி. கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரிய விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இயற்கை விவசாயத்தின் நீட்சியாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனிவரகு, கம்பு, மூங்கில் அரிசி உள்ளிட்ட சிறுதானியங்களை விற்பனை செய்வதோடு, அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட தின்பண்டங்களாகவும் தயாரித்து விற்பனை செய்கிறார். அரிசியில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு வகைகளையும் சிறுதானியங்களிலும் செய்ய முடியும். மட்டுமின்றி, குழந்தைகள், பெரியவர்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களையும் சிறுதானியங்களில் தயாரிக்கலாம். தினை, சாமை, வரகு மாவின