பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்
பிரபலம் அடைந்தவர்
நடிகை ரைஸா வில்சன்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு
அவருக்கு தமிழத்திரையுலகில்
அடுத்தடுத்து பட வாய்ப்புகள்
கிடைத்தன.
பியார் பிரேமா காதல்,
தனுசு ராசி நேயர்களே,
வேலை இல்லா பட்டதாரி-2
உள்ளிட்ட படங்களில்
அவர் நடித்திருந்தார்.
தற்போது
எப்ஐஆர், தி சேஸ்,
ஹேஷ்டேக் லவ்,
காதலிக்க யாருமில்லை
உள்ளிட்ட படங்களில்
நடித்து வருகிறார்.
ரைஸா வில்சன்,
அடிப்படையில் ஒரு
மாடல் அழகியும் ஆவார்.
அதனால் எப்போதும்
தன்னை பொதுவெளியில்
வசீகரமாக காட்டிக்கொள்ள
ரொம்பவே மெனக்கெட்டு
வருவார்.
அண்மையில்,
ஃபேஷியல் செய்து
கொள்வதற்காக சென்னையில்
உள்ள பிரபலமான
அழகுநிலையத்திற்குச்
சென்றிருந்தார்.
பேஷியல் முடிந்து வீட்டுக்கு
வந்த பிறகு, அவருடைய
முகத்தில் சில மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளதை உணர்ந்தார்.
அடுத்த ஓரிரு மணி நேரத்தில்
முகமே வீங்கிப் போனது.
அதிர்ச்சி அடைந்த ரைஸா
இதுபற்றி இன்ஸ்டாகிராம்
பக்கத்தில், ”எளிமையான
ஃபேஷியல் சிகிச்சைக்காக
சென்னையில் உள்ள ஒரு
அழகுக்கலை மையத்திற்குச்
சென்றிருந்தேன். அங்குள்ள
அழகுக்கலை மருத்துவர்
பைரவி செந்தில் என்பவர்,
வேறு சில புதிய செயல்முறைகளை
எடுத்துக்கொள்ளும்படி
வற்புறுத்தினார்.
அவர் மீது இருந்த நம்பிக்கையால் நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன்.
அதன்பிறகுதான்
என்னுடைய முகம் இந்த
நிலைமைக்கு வந்தது.
கண்ணுக்குக் கீழ் அதிகமாக
வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இப்போது அந்த அழகுக்கலை
நிபுணரை தொடர்பு
கொண்டால், அவருடைய
உதவியாளர்கள்தான்
பேசுகிறார்கள். அவர் வெளியூர்
சென்று விட்டதாகச் சொல்லி
என்னை திட்டமிட்டு
தவிர்க்கின்றனர்,” என்று
வருத்தத்துடன் பதிவிட்டு
இருந்தார்.
இதற்கிடையே,
வீங்கிப்போன முகத்தை
சரி செய்வதற்காக ரைஸா
வெளிநாடு செல்ல
திட்டமிட்டிருப்பதாக
ஒரு தகவல் பரவியது.
இதற்கும் ரைஸா விளக்கம் அளித்துள்ளார். ”முக அழகுக்காக வெளிநாடு செல்லும் திட்டம் ஏதுமில்லை. இங்குள்ள தோல் மருத்துவர்களுடன் அலோசனை பெற்று வருகிறேன். அதிலேயே பழைய நிலைக்கு திரும்புவேன் என நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டபோது கூட
ரைஸா, தன்னுடைய
ஒப்பனைக்காகவே அதிக
நேரத்தை செலவிட்டு
வந்ததையும் ரசிகர்கள்
அவருடைய ட்விட்டர்
பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அவருக்கு இப்படியொரு
நிலையை ஏற்படுத்திய
தோல் சிகிச்சை மருத்துவர்
பைரவி செந்திலுக்கு
எதிராக ரைஸாவின்
ரசிகர்கள் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.