Friday, March 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

சேலத்தின் ஜோதிட கிராமம்…!

சேலத்தின் ஜோதிட கிராமம்…!

சேலம், முக்கிய செய்திகள், ராசிபலன்
''குலத்தொழிலை மறக்காத இளம் தலைமுறையினர்'' சேலத்திற்கென்று இருக்கும் சில தனித்த அடையாளங்களில், வீராணம் கிராமத்திற்கும் இடம் உண்டு. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது வீராணம். இந்த ஊரில், சுமார் 25 குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக ஒரே பொருளை விற்கும் கடைகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இருந்தாலே தொழில் போட்டி வந்து விடும் அல்லது வியாபாரம் படுத்து விடும். ஆனால் இங்குள்ள ஜோதிடர்களுக்கு அப்படி அல்ல. வீராணத்தில் அடுத்தடுத்து 'ஜோதிட நிலையம்' பெயர் பலகை இருப்பதைக் காண முடியும். வள்ளுவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல தலைமுறை களாக ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஒரே குடும்ப வகையறாவைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு வசிக்கின்றனர்.  சமீப காலங்களாக வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலரும் இப்பகுதிய...
கிரிக்கெட்: தவான் அபார சதம்; இந்தியா வெற்றி

கிரிக்கெட்: தவான் அபார சதம்; இந்தியா வெற்றி

முக்கிய செய்திகள், விளையாட்டு
தம்புல்லா: இலங்கை தம்புல்லாவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்தியது. ஷிகர் தவான் அபாரமாக ஆடி 132 ரன்களை குவித்தார். கோஹ்லி அரைசதம் அடித்தார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் . இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 74 ரன்கள் சேர்த்தது. 14-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா 44 பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு டிக்வெல்லா உடன் குசால் மெண்டிஸ்...
ரேஷன் மானியம் ரத்து: பட்டினிச் சாவை உருவாக்கும்!

ரேஷன் மானியம் ரத்து: பட்டினிச் சாவை உருவாக்கும்!

இந்தியா, முக்கிய செய்திகள்
ரேஷன் மானியம் ரத்து குறித்த அறிவிப்பு, சாமானிய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.இந்திய அரசாங்கம் என்பது, சாமானிய மக்கள் நலன் நாடும் அரசு என்ற எண்ணவோட்டத்தில் இருந்து விலகிச்சென்று, கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு மட்டுமே இனி சேவகம் செய்யும் என்ற நிலைக்கு தன்னை உருமாற்றிக் கொண்டு வருகிறது. ரேஷன் கடைகளில் மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய குடிமைப் பொருட்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்பதுதான் தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான ஷரத்து. இதற்காகத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடுமையாக இந்த சட்டத்தை எதிர்த்து வந்தார். அதற்கு மக்கள் நலன் மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. ஏனெனில், தமிழகத்தில் ரேஷன் அரிசி அரசியலும் ஒன்று இருக்கிறது. தமிழகத்தைப் பின்பற்றி மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட ஏனைய மாநில...
நடிகர் தனுஷ் வலையில் ரஜினி?

நடிகர் தனுஷ் வலையில் ரஜினி?

சினிமா, முக்கிய செய்திகள்
திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் தொடர்ந்து மூத்த இயக்குநர்களிடம் மட்டுமே பணியாற்றி வந்த 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், 'கபாலி' படம் மூலமாக இளம் இயக்குநர்களின் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். கடந்த 1999-ல் வெளியான 'படையப்பா', பெரிய அளவில் பேசப்பட்டதைத் தொடர்ந்து, 'முத்து', 'லிங்கா' வரை ரஜினியின் ஆஸ்தான இயக்குநராக, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இடம் பெற்றிருந்தார். அதற்கு முன்பு, ரஜினி - தீபிகா படுகோன் நடிப்பில் 'ராணா' படத்தை இயக்கும் வாய்ப்பையும் கே.எஸ்.ரவிக்குமாரே பெற்றிருந்தார். ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' அனிமேஷன் படத்தில்கூட, திரைக்கதை உள்ளிட்ட பணிகளை கே.எஸ்.ரவிக்குமாரே ஏற்றிருந்தார். 'சிவாஜி', 'எந்திரன்' என பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் உடனும், 'சந்திரமுகி', 'குசேலன்' என இயக்குநர் பி.வாசுவுடனும் பணியாற்றி வந்தார் ரஜினி. இப்போது, இயக...
சேலம் வாலிபர் மீது தாக்குதல்; பணம், நகை பறிப்பு

சேலம் வாலிபர் மீது தாக்குதல்; பணம், நகை பறிப்பு

சேலம், முக்கிய செய்திகள்
சேலம்: சேலம் வாலிபரை சரமாரியாக தாக்கி, பணம், நகைகளை பறித்துச்சென்றதாக அரசு ஊழியர் மீது புகார் எழுந்துள்ளது. சேலம் ஆண்டாள் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் ராகேஷ் (37) (படம்). டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தில் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனம், விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சியும், பண்ணை அமைத்துக் கொடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு ஏற்காடு முளுவி பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இவருடைய தோட்டத்தில், கடந்த ஜூலை 23ம் தேதி தனியார் நிறுவனம் சார்பில் 245 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைக்கப்பட்டன. இதன்மூலம் சேகரமாகும் தேனில் ஒரு பகுதியை நிலத்திற்குச் சொந்தமானவருக்கு வழங்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில நா...
டெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் பலி: தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்?

டெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் பலி: தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகத்திற்கு இணையாக, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால், டெங்கு மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், அரசு தரப்போ, டெங்கு மரணங்களை ஒட்டுமொத்தமாக மறைக்கும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறது. எப்படி பரவுகிறது?: 'ஏடிஸ்' என்ற ஒரு வகை பெண் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் டெங்கு வைரஸ் உடலில் நுழைவதால், டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதில் டெங்கு 1, 2, 3, 4 என்று நான்கு வகைகள் உள்ளன. 3 மற்றும் 4ம் வகை டெங்கு காய்ச்சல் கொடூரமானது என்கிறது மருத்துவத்துறை. ஏடிஸ் வகை கொசுக்கள் பகலில் கடிக்கக் கூடியது. தேங்கியுள்ள சுத்தமான நீர் ஆதாரங்களில் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. மரணத்தை ஏற்படுத்தும்: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் உடல் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்கள் (பிளேட்டிலெட்) எண்ணிக்கை வேகமாக குறையும். சராசரியாக ஒருவரது ரத்த...
ஓராயிரம் வளர்மதிகள் வருவார்கள்!

ஓராயிரம் வளர்மதிகள் வருவார்கள்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களை நேசிக்கும் யார் ஒருவரும் ஒரு கட்டத்தில், ஆளும் வர்க்கத்தை எதிர்க்கத் துணிந்தவர்களாக மாறி விடுவதுதான் காலம் போட்டுக்கொடுத்திருக்கும் பாதை. தன் குடும்பம், குழந்தைகள் என்று வட்டத்திற்குள்ளேயே வாழ்வோருக்கு இது பொருந்தாது. மாறாக, மக்களைப் பற்றிய சிந்தனை யாரிடம் மேலோங்கி இருக்கிறதோ அவர்களே சாமானியர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கி விடுகின்றனர். சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளத்தானூரைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி , பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். 'இயற்கை பாதுகாப்புக்குழு' அமைப்பின் பொறுப்பாளராக இயங்கி வந்த வளர்மதி, கடந்த மாதம் ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு மகளிர் கல்லூரி அருகே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். அரசுக்கு எதிராக மாணவிகளை தூண்டியதாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர். உளவுப்பிரிவு காவல் துறையினர...
கல்விப்புரட்சி செய்யும் ஓசூர் இளைஞர்கள்…!

கல்விப்புரட்சி செய்யும் ஓசூர் இளைஞர்கள்…!

கல்வி, கிருஷ்ணகிரி, சேவை, முக்கிய செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் குக்கிராமங்களில் ஒன்று, பூதொட்டிக்கொட்டாய். இந்த ஊரைச்சேர்ந்த சங்கீதா, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 470 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றாள். அடுத்தடுத்து மேல்நிலை வகுப்பு, கல்லூரிக்குச் செல்ல வேண்டியவள், நேராகச்சென்ற இடம் எது தெரியுமா? வயல்வெளி. ஆமாம். தினசரி 60 ரூபாய் கூலிக்கு களைப்பறிக்கச் சென்று வந்தாள். தோழிகள் புத்தகப்பையைச் சுமந்து செல்ல, இவளோ மதிய உணவுக்கான தூக்குச்சட்டியையும், களைக்கொத்தையும் சுமந்து சென்றாள்.   கடும் பொருளாதார நெருக்கடி சங்கீதாவை கூலி வேலைக்குச்செல்லவே நிர்ப்பந்தித்தது. இனி புத்தக வாசனையே கிடைக்காது என்றிருந்த நிலையில், 'ஓசூர் வித்யூ கல்வி, சமூக அறக்கட்டளை'யின் கண்களில் படுகிறாள். அந்த நாள், தன் கனவுகளை நனவாக்கும் என்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதன்பிறகு அவள் வாழ்வு...
கனல் கக்கும் கதிராமங்கலம்! அலட்சிய அரசாங்கம்; கதறும் மக்கள்

கனல் கக்கும் கதிராமங்கலம்! அலட்சிய அரசாங்கம்; கதறும் மக்கள்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கதிராமங்கலத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக எண்ணெய் துரப்பண பணிகள் நடந்து வரும் நிலையில், சமீப காலமாய் என்னதான் ஆச்சு அந்த ஊர் மக்களுக்கு? திடீரென்று அவர்கள் வெகுண்டெழக் காரணம் என்னவாக இருக்க முடியும்? இதுதான் இப்போதைக்கு எல்லோருடைய மனதிலும் எழும் மிகப்பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை தேடும் பயணமாக நாமும் அந்த கிராமத்திற்கு பயணப்பட்டோம். கதிராமங்கலத்திற்கு 2 கி.மீ. தொலைவிலேயே 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். சந்தேகத்திற்கிடமானவர்கள் யாரும் ஊருக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்கான ஏற்பாடு இது என்றார்கள். காவல்துறையினர் இப்படி என்றால், அந்த கிராம மக்கள் ரொம்பவே உஷாராக இருந்தார்கள். நம்மை முழுவதும் விசாரித்து, நாம் காவல்துறையின் உளவாளிகளோ அல்லது சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்களோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே ஊருக்குள் மக்கள் போராடும் இடத்...
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் எங்கே படிக்க வேண்டும்?: தமிழக அரசு பதில் மனு

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் எங்கே படிக்க வேண்டும்?: தமிழக அரசு பதில் மனு

கல்வி, முக்கிய செய்திகள்
சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புவது அவர்களது உரிமை என்றும் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை ஏன் அரசுப் பள்ளியில் சேர்க்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கான பதில் மனுவை இன்று (18/08/17) தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்குமாறு ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. அரசு ஆசிரியர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அவர்களது குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்க்க முடியும். உயர்நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான். எனினும், அரசுப் ...