Thursday, July 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

இந்தியா, சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக். 18, 2017) 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'மெர்சல்'. நடிப்பு: விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா, 'யோகி' பாபு. இசை: ஏ.ஆர்.ரஹ்மான்; ஒளிப்பதிவு: விஷ்ணு; தயாரிப்பு; ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ்; இயக்கம்: அட்லீ. படத்தின் துவக்கத்தில் சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, போட் கிளப் ஆகிய இடங்களில் மருத்துவத்துறை தொடர்பான ஆட்கள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் கடத்திக் கொல்லப்படுகின்றனர். இதற்கிடைய பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் விஜய், அங்கு ஒரு மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த அரங்கிலும் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதைத் தொடர்ந்து சத்யராஜ், இந்த கொலைகளுக்குக் காரணம் விஜய்தான் என்ற சந்தேகத்தின்பேரில் அவரை கைது செய்கிறார். உண்மையில் இ...
இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது

இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது

அரசியல், இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்தியாவில் ஜனநாயக ஆட்சி மீது திருப்தி இருந்தாலும், ராணுவ ஆட்சி வந்தால்தான் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அதிர்ச்சிகரமான எண்ணங்களை இந்தியர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 'பியூ ரிசர்ச்', 38 நாடுகளில் 41955 பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை இந்த ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது. இதில், இந்தியர்களின் மனவோட்டம் பற்றிய சில அதிர்ச்சிகரமான, அதேநேரம் ஆச்சர்யகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில், கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை சராசரியாக 6.9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்து வருவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 5ல் நான்கு பேர், அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இருப்பினும் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என்றும் பெரும்பான்மையோர் கருதுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஆதார் ...
ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
துண்டு பிரசுரத்தில் டிடிவி தினகரன் படம் அச்சிட்டப்பட்டதற்கே தேச விரோத வழக்கு பாயுமெனில், அந்த பிரசுரத்தில் அச்சிடப்பட்டிருந்த எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரும் தேச விரோதிகளா? என நமது எம்ஜிஆர் நாளேடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஈடு இணையற்ற தலைவர்களா இல்லையா என்பது விவாதத்திற்கு உரியது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களை சந்திக்குக் கொண்டு வருவதில் இருதரப்புமே சளைத்தவர்கள் அல்ல என்பதைத்தான் அவர்களின் அரசியல் விமர்சனங்கள் உணர்த்துகிறது. தேரை இழுத்து தெருவில் விடுவது என்பார்களே, அப்படி. சேலத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியது தொடர்பாக டிவிடி தினகரன் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் 36 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்ப...
‘மெர்சல்’ பட சிக்கல் தீர்ந்தது!

‘மெர்சல்’ பட சிக்கல் தீர்ந்தது!

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் நிலவி வந்த சிக்கல் இன்று (அக். 16, 2017) சுமூகமாக முடிவுக்கு வந்ததை அடுத்து, திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக, சுமார் ரூ.135 கோடி பொருட்செலவில் தயாராகி இருக்கிறது 'மெர்சல்'. இதில் நடிகர் விஜய் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடித்திருக்கிறார். அதில், மேஜிக் கலைஞராக ஒரு வேடம் ஏற்று நடித்திருக்கிறார். இதற்காக அவர் தொழில்முறை மேஜிக் நிபுணர்களிடம் பயிற்சி பெற்று, படத்திலும் அவரே சுயமாக சில மேஜிக்குகளை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தீபாவளியன்று (அக். 18) உலகம் முழுவதும் 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில், படத்தில் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த விலங்குகள் ந...
ஓ.பன்னீர்செல்வத்தை  கதற விடும்  மீம் கிரியேட்டர்கள்!

ஓ.பன்னீர்செல்வத்தை கதற விடும் மீம் கிரியேட்டர்கள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பக்கத்தில் 'அம்மா ஆட்சி' என்று ஒரு பதிவுதான் பதிவிட்டார். மீம் கிரியேட்டர்கள் அவரை நொந்து நூடுல்ஸ் ஆக்கி, அழ வைக்கும் அளவுக்கு கேலி, கிண்டல் என கருத்துகளை பதிவிட்டுள்ளனர். டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்&ஆப் போன்ற சமூக வலைத்தளங்களே இப்போது சாமானிய மக்களின் நேரடி மேடையாகி விடுகிறது. கையில் ஒரு மொபைல் ஃபோன் இருந்தால்போதும், எதிரில் நிற்பவர் யாரென்றெல்லாம் பார்ப்பதில்லை. உடனுக்குடன் கருத்துகளை வரவேற்றோ, பகடி செய்தோ, அல்லது தர்ம அடியோ கொடுக்கும் விதமாக பதிலடி கொடுத்து விடுகின்றனர். அது அமெரிக்க அதிபர் டிரம்ப்பாக இருந்தாலும் சரி. பிரதமர் மோடியோ அல்லது தமிழக முதல்வரோ யாராக இருந்தாலும் இணையவாசிகளுக்கு ஒரே அளவுகோல்தான். அதேநேரம் நல்லதை வரவேற்கவும் தயங்குவதில்லை. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (அக். 14, 2017), '...
டிசம்பர் வரைக்கும்தான் எடப்பாடி ஆட்சி;  நேரம் குறித்த தினகரன்

டிசம்பர் வரைக்கும்தான் எடப்பாடி ஆட்சி; நேரம் குறித்த தினகரன்

தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
வரும் டிசம்பர் மாதத்திற்குள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விடுவோம் என்று டிடிவி தினகரன் கூறினார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக அம்மா அணி சார்பில் இன்று (அக். 15, 2017) நடந்தது. நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். பின்னர், ஊடகங்களைச் சந்தித்த அவர் கூறியது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதனை மறைத்தும், மறந்தும் விட்டு மேடை போட்டு எதை எதையோ பேசுகின்றனர். அரசு செலவில் எடப்பாடி பழனிசாமி கதை கூறிவருகிறார். இதனை பொது மக்கள் நம்ப தயாராக இல்லை. தற்போது கட்சியினர், தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் ஓபிஎஸ் யார் என்று தெரிந்து விட்டது. சட்டமன்ற கூட்ட...
நடிகர் விஜய் முதல்வருடன் திடீர் சந்திப்பு ஏன்?

நடிகர் விஜய் முதல்வருடன் திடீர் சந்திப்பு ஏன்?

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அவருடைய இல்லத்தில், நடிகர் விஜய் இன்று (அக். 15, 2017) திடீரென்று சந்தித்தார். விஜய் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'மெர்சல்' படம், வரும் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப்படத்திற்கு யு / ஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. இருப்பினும், விலங்குகள் நலவாரியத்தின் தடையில்லா சான்றிதழ் கிடைப்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. எப்படியும் படத்தை தீபாவளியன்று வெளிக்கொண்டு வந்தால்தான் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியும். ஒருபுறம், நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்து, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்றும், அவ்வாறு வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காட்டமாகவே அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு, தியேட்டர் அதிபர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெ...
ஹீரோ அவதாரம் எடுத்த ‘மொட்டை’ ராஜேந்திரன்!

ஹீரோ அவதாரம் எடுத்த ‘மொட்டை’ ராஜேந்திரன்!

சினிமா, முக்கிய செய்திகள்
இயக்குநர் பாலா ஆக்கத்தில் வெளியான 'நான் கடவுள்' படத்தில் மாற்றுத்திறனாளிகளை வைத்து பிச்சை எடுக்கும் கொடூர வில்லனாக நடித்தவர், 'மொட்டை' ராஜேந்திரன். ஆரம்பத்தில் சண்டைக்கலைஞராக இருந்து வந்த அவர், 'நான் கடவுள்' படத்திற்குப் பிறகு முழு நேர நடிகரானார். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திற்குப் பின்னர் அவருக்கு தொடர்ந்து காமெடி வேடங்களும் கிடைத்து வருகின்றன. இன்றைக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். சந்தானம், முழுநேர கதாநாயகன் அவதாரம் எடுத்துவிட்ட நிலையில், இப்போது மொட்டை ராஜேந்திரனுக்கும் நாயகன் ஆசை எட்டிப்பார்த்துள்ளது. எல்எஸ்கே மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் 'மோகனா' என்ற படத்தில் மொட்டை ராஜேந்திரன்தான் கதாநாயகன். அவருக்கு ஜோடியாக மலையாள வரவான கல்யாணி நாயர் நடிக்கிறார். இருவரும் திருமணம் முடிந்து தேனிலவுக்காக செல்லும் இடத்தில் ஒ...
பட்டினியில்லா நாடுகளில் இந்தியாவுக்கு 100வது இடம்: இதுதான் புதிய இந்தியாவா?

பட்டினியில்லா நாடுகளில் இந்தியாவுக்கு 100வது இடம்: இதுதான் புதிய இந்தியாவா?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பட்டினியில்லா நாடுகளில் இந்தியாவுக்கு 100வது இடம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு திட்ட அறிவிப்பின்போதும் பிரதமர் நரேந்திர மோடி, புதிய இந்தியா பிறந்துவிட்டதாகக் கூறுவதும், ஆய்வு முடிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இருப்பதைக் காண முடிகிறது. உலக உணவுக்கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் பட்டினியில்லா நாட்டை உருவாக்குதல், ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையகமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு, ஆண்டுதோறும் உலகளவில் ஊட்டச்சத்து, குழந்தைகள் நலம், பட்டினி குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் உலகம் முழுவதும் 119 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. புள்ளிகள் அடிப்படையில் நாடுகளின் தகுதி பட்டியலை வரிசைப்படுத்துகிறது. அந்த ஆய்வில், பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 100வது இடமே கிடைத்துள்ளது. இந்தியா, வெறு...
மூன்றாவது டுவென்டி-20 ரத்து; இந்தியா – ஆஸி. ஏமாற்றம்!

மூன்றாவது டுவென்டி-20 ரத்து; இந்தியா – ஆஸி. ஏமாற்றம்!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஹைதராபாத்தில் இன்று (அக்டோபர் 13, 2017) நடக்க இருந்த மூன்றாவது மற்றும் இறுதி டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி, மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்திருந்தது. அடுத்து, மூன்று 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது. முதல் இரண்டு டுவென்டி-20 போட்டியில் இந்தியாவும், ஆஸி அணியும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன. மூன்றாவது மற்றும் இறுதி டுவென்டி-20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்க இருந்தது. அங்கு கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இன்று மழை இல்லை. எனினும், மைதானம் ஈரப்பதத்துடன் இருந்தது. இரவு 7 மணிக்கும், பிறகு 7.45 மணிக்கும் மைதான ஈரப்பதம் சோதிக்கப்பட்டது. ஆடுகளம் போட்டி நடத்துவதற்கு உகந்ததாக இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து, ...