Thursday, October 30மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

இலங்கை அகதி மீது போலீசார் சுற்றிவளைத்து லத்தி சார்ஜ்! மருத்துவமனையில் அனுமதி!!

இலங்கை அகதி மீது போலீசார் சுற்றிவளைத்து லத்தி சார்ஜ்! மருத்துவமனையில் அனுமதி!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆத்தூர் அருகே, இலங்கை அகதியை காவல்துறையினர் சுற்றிவளைத்து ஃபைபர் லத்தியால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாகியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. நூறுக்கும் மேற்பட்ட அகதிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அகதிகள் முகாம்கள் அனைத்தும் கியூ பிரிவு காவல்துறையினர் கண்காணிப்பில் உள்ளதால், வெளியாட்கள் யாரும் தங்க முடியாது.   இந்நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக நாகியம்பட்டி முகாமில் வசிக்கும் ஜான் என்பவரின் வீட்டில் தங்கி உள்ளனர். அவர்கள் தங்கியிருப்பது தொடர்பாக முகாமைச் சேர்ந்தி சிமியோன் (68) என்பவருக்கும், சுபாஷ்கரன் (58) என்பவருக்கும் நேற்று முன்தினம் (அக்டோபர் 9, 2018) தகராறு ஏற்பட்டது. நேற்றும் அவர்க...
நக்கீரன் கோபால் கைது பின்னணியில் அறுவடை யாருக்கு? #NakkheeranGopal

நக்கீரன் கோபால் கைது பின்னணியில் அறுவடை யாருக்கு? #NakkheeranGopal

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  புலனாய்வு இதழ்களில் தனக்கென தனித்த அடையாளத்துடன், எத்தனையோ நெருக்கடிகளுக்கு இடையிலும் இன்றுவரை பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது நக்கீரன். இந்த இதழின் ஆசிரியர் கோபால், நேற்றைய (அக்டோபர் 9, 2018) தினம் கைது செய்யப்பட்ட நிமிடம் முதல் ஒட்டுமொத்த ஊடகங்களிலும் தலைப்பு செய்தி ஆனார்.   சின்னதாக ஒரு விசாரணை புனே செல்வதற்காக நக்கீரன் கோபால், தனது நண்பரான சித்த மருத்துவர் ஒருவர், மற்றும் நக்கீரன் இணையதள ஆசிரியர் வசந்த் ஆகியோருடன் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார். சிறுநீர் கழிப்பதற்காக 'வாஷ் ரூம்' சென்ற கோபாலிடம் நெருங்கிய போலீசார், உயரதிகாரியின் பெயரைச்சொல்லி 'சின்னதாக ஒரு விசாரணை' என அழைக்கின்றனர்.   அப்படியே அவரை அணைத்துக் கூட்டிச்செல்லும்போது, அவரிடம் இருந்த செல்போனை பறிக்க போலீசார் முயன்றபோதே, தன்னை கைது செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் க...
நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்? சாதிய ஒடுக்குமுறையை துகிலுரியும் பரியேறும் பெருமாள்! #PariyerumPerumal

நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்? சாதிய ஒடுக்குமுறையை துகிலுரியும் பரியேறும் பெருமாள்! #PariyerumPerumal

சினிமா, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ் சினிமாக்களில் இதுநாள் வரை ஆகிவந்த காட்சி மொழியையும், நாயகத்தனத்தை தூக்கிப்பிடித்தலையும் சுக்கல் சுக்கலாக்கி, புதிய தடத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது, பரியேறும் பெருமாள். தமிழ் ரசிகனின் ரசனையையும் பல படிகள் உயர்த்தி இருக்கிறது. இனி, பரியேறும் பெருமாளுக்கு முன், பரியேறும் பெருமாளுக்குப் பின் என்று தமிழ் சினிமாக்களை காலவரிசைப்படுத்தலாம்.   மய்யக் கதாபாத்திரம்   நம்முடன் தெரு முனை கடையில் தேநீர் அருந்தும் சராசரி இளைஞனைத்தான் கதிர் பிரதிபலிக்கிறார். அவர்தான் பரியேறும் பெருமாள். கதை நாயகன். மய்யக் கதாபாத்திரம் அவருக்கானது என்றாலும், படத்தில் வரும் வேறு சில துணை பாத்திரங்களே இந்தக் கதைக்கு அடர்த்தியைக் கூட்டியிருக்கின்றன.   இரண்டே காட்சியில் வந்தாலும் திரை பார்வையாளர்களை அச்சச்சோ... அவரை விட்டுடுங்கடா என சொல்ல வைத்திருக்கும் பரிய...
தெருவிளக்கு இல்லாததால் ஊரை விட்டு ஓடும் கிராம மக்கள்! சேலம் அருகே அவலம்!!

தெருவிளக்கு இல்லாததால் ஊரை விட்டு ஓடும் கிராம மக்கள்! சேலம் அருகே அவலம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, இரண்டு ஆண்டுக்கும் மேலாக தெருவிளக்கு வசதி இல்லாததால் ஒரு கிராமமே வெளிச்சத்தை நோக்கி நகரப்பகுதிக்கு படையெடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.   குள்ளம்பட்டி கிராமம் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது குள்ளம்பட்டி குக்கிராமம். நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் விவசாயக்கூலிகளும், கட்டடத் தொழிலாளர்களும் வசிக்கின்றனர்.   சேலம் மாநகரில் பல இடங்களில், பல நேரங்களில் காலை 10 மணி ஆனாலும் அணைக்கப்படாமல் காட்சி அளிக்கும் தெருவிளக்குகள் இருக்கும் நிலையில், குள்ளம்பட்டி கிராமமோ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி இருளில் மூழ்கிக் கிடக்கிறது.   தெருவிளக்கு வசதி செய்து தரும்படி அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அந்த கிராம மக்கள் படையெடுக்காத நாளில்லை என்றுதான் சொல்ல வேண்டும்...
சேலம்: எடுபடாத கிராம சபைக்கூட்டம்! விவசாயிகள் அதிருப்தி!! #GramaSabha

சேலம்: எடுபடாத கிராம சபைக்கூட்டம்! விவசாயிகள் அதிருப்தி!! #GramaSabha

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டத்தில் கண்துடைப்பாக கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படுவது அம்பலமாகி உள்ளது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.   கிராம சபைக்கூட்டம்   இந்தியா 70 சதவீதம் கிராமங்களையும், விவசாயத்தை பிரதானத் தொழிலாகவும் கொண்ட நாடு. நகர்ப்புறத்தில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் கிராமப்புறங்களிலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுக்கு நான்கு முறை கட்டாயமாக ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசபைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது சட்டமாகக் கொண்டு வரப்பட்டது.   அதன்படி நாடு முழுவதும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு தினங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.   385 கிராமங்களில்...   தமிழகம் முழுவதும் கடந்த அதன்படி அக்டோபர் 2, 2018)ம் தேதியன்று 12618 கிராமங்களிலும் இக்கூட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத...
கோகுல்ராஜ் வழக்கு: எதிர்தரப்பு கிடுக்கிப்பிடி; அரசுத்தரப்பு சாட்சிகள் திணறல்! #Gokulraj #day7

கோகுல்ராஜ் வழக்கு: எதிர்தரப்பு கிடுக்கிப்பிடி; அரசுத்தரப்பு சாட்சிகள் திணறல்! #Gokulraj #day7

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞரின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் அரசுத்தரப்பு சாட்சிகள் சாட்சியம் அளிக்கும்போது தடுமாறினர். சில சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதியன்று மாலை நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.   ஆணவக்கொலை: திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் கோகுல்ராஜ் நெருங்கிப் பழகி வந்தார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம் காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல் அவரை ஆணவக்க...
எகிறியது காஸ் சிலிண்டர் விலை! பட்ஜெட்டில் துண்டு!!

எகிறியது காஸ் சிலிண்டர் விலை! பட்ஜெட்டில் துண்டு!!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தசரா, தீபாவளி என பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும் நிலையில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் வகையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் 916.50 ரூபாயாக உயர்ந்தது.   வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, உற்பத்தி, உள்நாட்டில் சிலிண்டர்களுக்கான தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களின் சிண்டிகேட் கமிட்டி இதன் விலையை நிர்ணயம் செய்து வருகிறது.   வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 320 ரூபாய் வரை மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி விடுகிறது. அதனால், முழு தொகையை காஸ் முகவர்களிடம் செலுத்தி, சிலிண்டரை பெற்று வருகின்றனர்.   கடந்த செப்டம்ப...
தடம் புரண்டார் சுவாதி…! வழக்கு போட்ட சிபிசிஐடி!! #Day7 #Gokulraj

தடம் புரண்டார் சுவாதி…! வழக்கு போட்ட சிபிசிஐடி!! #Day7 #Gokulraj

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், அரசுத்தரப்பின் முக்கிய சாட்சியாக கருதப்பட்டு வந்த சுவாதி, திடீரென்று பிறழ் சாட்சியமாக மாறியதால் அதிருப்தி அடைந்த சிபிசிஐடி போலீசார், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அக்டோபர் 1, 2018ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளனர்.   பொறியியல் பட்டதாரி   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில், கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.இ., படிப்பை நிறைவு செய்திருந்தார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவர், கோகுல்ராஜுடன் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்து வந்தார். அதனால் இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. 23.6.2015ம் ...
சிண்டிகேட் கூட்டம்: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த பெரியார் பல்கலை! #PeriyarUniversity

சிண்டிகேட் கூட்டம்: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த பெரியார் பல்கலை! #PeriyarUniversity

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  உதவி பேராசிரியர் பணி நியமனங்களில் விதிமீறல், போலி அனுபவச் சான்றிதழ்கள், கல்வித்தகுதிகள் குறித்து தணிக்கை அறிக்கையில் ஆட்சேபனைகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த விவரங்களை பெரியார் பல்கலை நிர்வாகம் உயர்கல்வித்துறை செயலருக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 101வது சிண்டிகேட் குழு கூட்டம்   சேலம் பெரியார் பல்கலையில் 101வது சிண்டிகேட் குழு கூட்டம் ஆட்சிக்குழு அரங்கத்தில் நேற்று (செப். 29, 2018) நடந்தது. உயர்கல்வித்துறை செயலராக அண்மையில் நியமிக்கப்பட்டு உள்ள மங்கத்ராம் ஷர்மா, நேற்றைய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.   இதற்காகவே அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு காலை 11.15 மணியளவில் வந்து சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் பல்கலைக்கு அழைத்து வரப்பட்டார். இதனால் வழக்கத்தைவிட சற்...
பெரியார் பல்கலை: பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது சிண்டிகேட் குழு! #PeriyarUniversity

பெரியார் பல்கலை: பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது சிண்டிகேட் குழு! #PeriyarUniversity

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
ஆசிரியர் பணி நியமனங்களில் முறைகேடு, தகுதியற்றவர்களுக்கு பதவி உயர்வு, பல கோடி ரூபாய்க்கு தணிக்கை தடைகள் என பல்வேறு சர்ச்சைகள், பரபரப்புகளுக்கு நடுவே பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று (செப். 29, 2018) கூடுகிறது சிண்டிகேட் குழு. அலிபாபா குகை   சேலம் பெரியார் பல்கலை தொடங்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணி நியமனங்களில் அரசியல் தலையீடு இருந்து வருகிறது. முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் காலத்தில், கல்விக்கூடமான பெரியார் பல்கலை கிட்டத்தட்ட அலிபாபா குகைபோல் பரிணாம வளர்ச்சி அடைந்தது எனலாம்.   காரணம், அவர் பதவி வகித்தபோது ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வசூலித்துக்கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினார். அதுகுறித்த புகார்கள் மீது தமிழக உயர்கல்வித்துறையும், ஊழல் தடுப்புத்துறையும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்குள் பலருடைய ஆயுளும் முடிந்துவிடும்.  ...