Saturday, March 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

பட்ஜெட் 2021-2022: விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்!

பட்ஜெட் 2021-2022: விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்!

இந்தியா, முக்கிய செய்திகள்
நடப்பு ஆண்டில் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என்றும், விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். நடப்பு 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். முன்னதாக அவர், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை அவருடைய மாளிகையில் சந்தித்துப் பேசினார்.   நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் முதன்முறையாக காகிதம் இல்லா பட்ஜெட் அறிக்கையை நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். இதன்மூலம் 140 கோடி ரூபாய் மிச்சம...
பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

இந்தியா, முக்கிய செய்திகள்
பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய பட்ஜெட் அறிக்கையின்போது நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.   கொரோனா பெருந்தொற்றால் ஒட்டுமொத்த துறைகளும் கிட்டத்தட்ட ஓராண்டாக பெரும் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், மத்திய அரசின் நடப்பு 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், திங்கள் கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதி நிலை அறிக்கை இது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே, பெரும்பாலும் தனியார்மயம் ஊக்குவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேப பங்கு விலக்கல் குறித்த அறிவிப்பும் வெளியானது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை பங்குகளை ஐபிஓ எனப்படும் ஆரம்பநிலை பங்கு விற்ப...
பசு மாட்டு சாணி கதிரியக்கத்தை தடுக்குமா?

பசு மாட்டு சாணி கதிரியக்கத்தை தடுக்குமா?

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
உலகெங்கும் மாட்டு சாணம் பல்வேறு வகையில் பயன் தருகிறது. இந்தியா உட்பட பல்வேறு பகுதிகளில் மாட்டு சாணியை வைத்து உருவாக்கப்படும் வரட்டி, சமையல் செய்ய எரிபொருளாகப் பயன்படுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டிலும் பயன்படுத்தி வந்துள்ளோம்.   மண் தரை, மண் சுவர் போன்றவற்றின் மீது மாட்டு சாணம் பூசும்போது பிணைப்பு பொருளாக மாறி மணல் துகள்கள் ஒன்றுடன் ஒன்று பிணையப் பயன்படுகிறது. காலம் காலமாக, உலகெங்கும், விவசாயிகள் மாட்டு சாணம் உட்பட கால்நடை கழிவுகளை எரு உரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாட்டு சாணம் அதுவும் குறிப்பாக நாட்டு பசுவின் சாணம் கதிரியக்கத்தை 60 சதம் தடுத்து விடுகிறது என ஆய்வு கூறுவதாக பத்திரிகை செய்திகள் வருகின்றன. அதன் பின்னணியில் உள்ள ஆய்வு என்ன? அந்த ஆய்வு எப்படி நடத்தப்பட்டது? என்பது குறித்து அறிவியலார்கள் எழு...
கடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்! யார்க்கர் நாயகன் நடராஜன் நம்பிக்கை!!

கடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்! யார்க்கர் நாயகன் நடராஜன் நம்பிக்கை!!

சேலம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கடினமாக உழைத்தால் அதற்கான பலன் ஒருநாள் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம் என்றார் 'யார்க்கர் நாயகன்' என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சேலம் நடராஜன். சேலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அண்மையில் சேலம் வந்தார். சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் அவருக்கு உள்ளூர் கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு அவரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர வைத்து, செண்டை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். அவரிடம் ஊடகத்தினர் பேட்டி எடுக்க முயன்றபோது, பிசிசிஐயின் கட்டுப்பாடுகள் காரணமாக செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டார்.   இந்நிலையில், அவர் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) திடீரென்று ச...
நீலகிரி: காட்டு யானையை உயிருடன் எரித்து கொன்ற ‘பகுத்தறிவு மிருகங்கள்’ கைது!

நீலகிரி: காட்டு யானையை உயிருடன் எரித்து கொன்ற ‘பகுத்தறிவு மிருகங்கள்’ கைது!

நீலகிரி, முக்கிய செய்திகள்
நீலகிரி அருகே, உணவு தேடி ரிசார்ட் பகுதிக்குள் நுழைந்த வாயில்லா ஜீவனான காட்டு யானையை விடுதி ஊழியர்கள் இருவர் எரியும் துணியை வீசி, உயிருடன் எரித்துக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மனித தன்மையற்ற இந்தச்செயலை இயற்கை ஆர்வலர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.   நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தனியார் ரிசார்ட் பகுதிக்குள் சில நாள்களுக்கு முன்பு, உணவும் தண்ணீரும் தேடி சுமார் 50 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. தற்போது ரிசார்ட்டுகள் நிறைந்து காணப்படும் மசினகுடி ஒரு காலத்தில் யானைகள் வந்து செல்லும் வலசையாக இருந்துள்ளது. பின்னர், வணிக நோக்கில் அங்கு பலர் விடுதிகளையும், குடியிருப்புகளையும் கட்டியதால் அடிக்கடி யானைகள் உணவு தேடி ஊருக்குள் நுழைவதும், அவற்றை மனிதர்கள் சேர்ந்து விரட்டி அடிப்பதும் தொடர்கிற...
ஐஆர்எப்சி ஐபிஓ நாளை வெளியீடு; 178 கோடி பங்குகள் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடிவு!

ஐஆர்எப்சி ஐபிஓ நாளை வெளியீடு; 178 கோடி பங்குகள் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடிவு!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ஐஆர்எப்சி (IRFC) நிறுவனத்தின் ஐபிஓ (IPO), நாளை (ஜன. 18, 2021) பங்குச்சந்தைகளில் வெளியிடப்படுகிறது. பொதுத்துறைக்குச் சொந்தமான, வங்கி அல்லாத நிதிச்சேவை நிறுவனம் ஐபிஓ வெளியிடுவதும், இதுதான் வரலாற்றில் முதன்முறை.   ஐஆர்எப்சி:   இந்திய ரயில்வே நிதி கழகம் எனப்படும் இண்டியன் ரயில்வே பைனான்சியல் கார்ப்பரேஷன் (ஐஆர்எப்சி), ரயில்வே துறையின் விரிவாக்கத்திற்குத் தேவையான மூலதனத்தை திரட்டிக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.   ஐபிஓ வெளியீட்டின் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. ஐபிஓவில் ஒரு பங்கின் விலை 25 - 26 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்படும்.   178.2 கோடி பங்குகள்:   ஐஆர்எப்சி நிறுவனத்தின் 1...
மக்களுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய ‘வாழும் அதிசயம்’ காளியண்ணன்!

மக்களுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய ‘வாழும் அதிசயம்’ காளியண்ணன்!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
பொதுவாழ்விலும், சொந்த வாழ்க்கையிலும் சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் அருகிவிட்ட இக்காலத்திலும், தன்னுடைய ஜமீன் சொத்துகளை மக்களுக்காக வாரி வழங்கியதுடன், வாழ்நாளெல்லாம் மக்களுக்காகவே அர்ப்பணித்து பயன்மரமாய் பழுத்திருக்கிறார், டி.எம்.காளியண்ணன். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சிஹெச்பி காலனியில் வசிக்கிறார், டி.எம்.காளியண்ணன் (101). மனைவி, பார்வதி (90). ஜன. 10ம் தேதி, அவருடைய 101வது பிறந்த நாளை குடும்பத்தினர், சுற்றமும் நட்பும் சூழ கோலாகலமாக கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இரண்டு மகன்கள்; மூன்று மகள்கள்; 16 பேரன் பேத்திகள்; 8 கொள்ளுப்பேரன் பேத்திகள் என ஆலமரமாய் விழுதுவிட்டிருக்கிறார்.   முதுபெரும் சுதந்திரப்போராட்டத் தியாகி, பழுத்த காங்கிரஸ்காரர், மஹாத்மா காந்தி, கர்ம வீரர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பெரியவர் பக்தவச்சல...
திமுக கிராம சபை: அழையா விருந்தாளியான வீரபாண்டி ராஜா; கண்டுகொள்ளாத மா.செ.,!

திமுக கிராம சபை: அழையா விருந்தாளியான வீரபாண்டி ராஜா; கண்டுகொள்ளாத மா.செ.,!

அரசியல், முக்கிய செய்திகள்
சேலம் அருகே நடந்த திமுக மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்த வீரபாண்டி ராஜாவால், அவருக்கு எதிர்தரப்பினர் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு உருவானது. விரைவில் வர உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக வகுத்துள்ள பரப்புரை வியூகங்கள் மக்களிடம் வெகுவாக கவனம் பெற்றுள்ளன. அந்த வகையில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக அக்கட்சியினர் நேரடியாக மக்களை சந்தித்து, இப்பொழுதே அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறைகளையும், ஆளுங்கட்சியின் அவலங்களையும் கேட்டு வருகின்றனர். இதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.   கட்சி அளவில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வெற்றி பெற்றிருக்கும் அதேநேரம், கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசல்களும் வெட்டவெளிச்சமாகத் தவறவில்லை. சேலம் கிழக்கு மாவட்ட திமுகவைப் பொருத்தவரை அயோத்தியாப்பட்டணம் மிக ம...
அதிகரிக்கும் மலட்டுத்தன்மை; கேள்விக்குறியாகும் குழந்தை பாக்கியம்! ஷாக் ரிப்போர்ட்…!!

அதிகரிக்கும் மலட்டுத்தன்மை; கேள்விக்குறியாகும் குழந்தை பாக்கியம்! ஷாக் ரிப்போர்ட்…!!

அலோபதி, சிறப்பு கட்டுரைகள், மருத்துவம், முக்கிய செய்திகள்
ஜூலை 25, 1978. இந்த நாள், உலக வரலாற்றை புரட்டிப்போட்டதுடன், மருத்துவ உலகில் அதீத மகிழ்ச்சியையும், மதவாதிகளிடையே அதிர்ச்சியையும் ஒருசேர அதிகரித்த நாள். ஆம். அன்றுதான், இங்கிலாந்தில் உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தையான லூயிஸ் ஜாய் பிரவுன் பிறந்த தினம். ''சொத்து சுகம் எவ்வளவு இருந்தாலும் துள்ளி விளையாட ஒரு குழந்தை இல்லையே'' என ஏங்குவோர் பலர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு வரப்பிரசாதமாய் கிடைத்ததுதான் செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்பம். மருத்துவ உலகினர் இதை மகத்தான பரிசளிப்பு என்றாலும், ஆணும், பெண்ணும் இணை சேராமலே குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இயற்கைக்கு முரணானது என்ற பேச்சும் எழாமல் இல்லை. ஆனாலும், உலகமயமாக்கலால் மாறி வரும் கலாசாரம், உணவுப்பழக்கம், மது, புகைப்பழக்கம், வாழ்வியல் முறை போன்றவைகளால் ஆண், பெண்களிடையே மலட்டுத்தன்ம...
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு! சிசிடிவி காட்சிகள் ஆவணமாக பதிவு செய்யப்பட்டதால் திடீர் திருப்பம்!!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு! சிசிடிவி காட்சிகள் ஆவணமாக பதிவு செய்யப்பட்டதால் திடீர் திருப்பம்!!

குற்றம், சேலம், நாமக்கல், முக்கிய செய்திகள்
சேலம் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது முக்கிய ஆவணமாக சேர்க்கப்பட்டதாலும், சிசிடிவி கேமரா டெக்னீஷியன் அளித்த சாட்சியத்தாலும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரும், கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி என்ற மாணவியும் நெருங்கி பழகி வந்தனர். சுவாதி, கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.   கடந்த 23.6.2015ம் தேதியன்று, வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிச்சென்றவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் த...