Friday, March 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

சேலத்தில் கோர விபத்து; காஸ் சிலிண்டர் வெடித்ததில் 4 வீடுகள் இடிந்தன; 5 பேர் பலி!

சேலத்தில் கோர விபத்து; காஸ் சிலிண்டர் வெடித்ததில் 4 வீடுகள் இடிந்தன; 5 பேர் பலி!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், சமையல் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் அடுத்தடுத்து நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கவிட்டல் 3வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடராஜன் (62). இவருக்கு தன் வீடு அருகே சொந்தமாக மூன்று வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கோபி, கணேசன், முருகன் ஆகியோர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இதில், கோபியுடன் அவருடைய மாமியார் ராஜலட்சுமி, உறவினர் எல்லம்மாள் ஆகியோரும், கணேசன் வீட்டில் தாயார் அம்சவேணி, மனைவி லட்சுமி, மகன்கள் ஷாம், சுதர்சன் ஆகியோரும், முருகன் வீட்டில் மனைவி உஷாராணி, மகன் கார்த்திக்ராம், மகள் பூஜாஸ்ரீ ஆகியோரும் வசித்து வருகின்றனர். இவர்களுடைய வீட்டிற்கு அருகிலேயே சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த பத்மநாபன் (48), தனது ...
சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தை! நிப்டி 17503; சென்செக்ஸ் 58664 புள்ளிகளில் நிறைவு!!

சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தை! நிப்டி 17503; சென்செக்ஸ் 58664 புள்ளிகளில் நிறைவு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த நான்கு நாள்களாக சரிவு கண்டிருந்த இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை (நவ. 23) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. ஐடி, உலோகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் பங்குகளை விற்க ஆரம்பித்தது உள்ளிட்ட காரணங்களால் கடந்த நான்கு நாள்களாக இந்தியப் பங்குச்சந்தைகளில் நிலையற்றத் தன்மை காணப்பட்டது. வாரத்தின் முதல் நாளான திங்களன்றும் (நவ. 22) இந்திய பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் லேசான சரிவுடன் தொடங்கியது. சிறிது நேரத்தில் சந்தைகள் மெதுவாக ஏற்றம் காணத் தொடங்கின. வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 198.44 புள்ளிகள் (0.34%) அதிகரித்து, 58664.33 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 86.80 புள்ளிகள் (0.50%) அதிகரித்து, 17503.30 ப...
5 ஆண்டுகளை நிறைவு செய்த பணமதிப்பிழப்பு எனும் பேரழிவு! பிரதமரும் முட்டாள் குரங்கும்!

5 ஆண்டுகளை நிறைவு செய்த பணமதிப்பிழப்பு எனும் பேரழிவு! பிரதமரும் முட்டாள் குரங்கும்!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
அதற்கு முன்பு இந்தியா கண்டிராத ஒரு மாபெரும் பேரிடரை நாடு அன்று இரவு சந்தித்தது. அந்த நாள், நவ. 8, 2016. திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி, தொலைக்காட்சிகளில் தோன்றி, இரவு 8 மணி முதல் நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்கள் இனி செல்லாது என்று அதிரடியாக ஒரு குண்டை தூக்கிப் போட்டார். அதை டீமானிடைசேஷன் என்றார் பிரதமர். அதாவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையாம். இப்படியொரு அஸ்திரத்தை ஏவிய பிறகு, தான் ஏன் அவ்வாறான முடிவுக்கு வந்தேன் என்பதற்கு மூன்று காரணங்களையும் சொன்னார். பணமதிப்பிழப்பின் மூலம் நாட்டில் உள்ள அத்தனை கருப்புப் பணத்தையும் ஒழித்துக் கட்டுவது; கள்ளப்பணத்தை அழிப்பது; டிஜிட்டல் பேமன்ட் எனப்படும் பணமில்லா நடவடிக்கையை வளர்த்தெடுப்பது என காரணங்களை பட்டியலிட்டார், பிரதமர் மோடி. இந்த அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நான்கு மணி நேரத்தில், அதுவரை புழக்கத்தில...
பேடிஎம் ஐபிஓ வெளியீடு! 18000 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டம்; முதல் நாளிலேயே அமர்க்களம்!

பேடிஎம் ஐபிஓ வெளியீடு! 18000 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டம்; முதல் நாளிலேயே அமர்க்களம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
முதலீட்டாளர்களிடையே பெரிதும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட பேடிஎம் பொதுப்பங்கு (ஐபிஓ) வெளியீடு திங்கள்கிழமை (நவ. 8) தொடங்கியது. டிஜிட்டல் பேமென்ட் மற்றும் நிதிச்சேவை வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பேடிஎம், வணிக விரிவாக்கத்திற்காக பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் 18300 கோடி ரூபாய் திரட்ட உத்தேசித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரும் பொதுப்பங்கு வெளியீடாக பேடிஎம் ஐபிஓ கருதப்படுகிறது. கடைசியாக, கடந்த 2010ம் ஆண்டு கோல் இந்தியா ஐபிஓ மூலம் 15475 கோடி ரூபாய் திரட்டப்பட்டதே பெரிய ஐபிஓ ஆக இருந்தது. மோர்கன் ஸ்டேன்லி இண்டியா, கோல்டுமேன் சாக்ஸ் (இண்டியா) செக்யூரிட்டீஸ், ஆக்சிஸ் கேப்பிடல், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஜேபி மோர்கன் இண்டியா, சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இண்டியா, ஹெச்டிஎப்சி வங...
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது! எம்பிபிஎஸ்., மாணவர் சேர்க்கை விரைவில் ஆரம்பம்!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது! எம்பிபிஎஸ்., மாணவர் சேர்க்கை விரைவில் ஆரம்பம்!

இந்தியா, தகவல், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு, கடந்த செப். 12ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இத்தேர்வை, இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் பேர் எழுதினர். இதன் தற்காலிக விடைகள் (ஆன்சர் கீ), அக். 15ம் தேதி வெளியிடப்பட்டது. இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.   வழக்கமாக நீட் தேர்வு நடத்தப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் முடிவுகள் வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு, நாக்பூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள், நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. &nb...
இளநிலை துணை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

இளநிலை துணை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட இளநிலை துணை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட நேரடி மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி அத்துறையைச் சார்ந்த ஏராளமான தொழில்சார் துணை மருத்துவப் படிப்புகளும் இருக்கின்றன. சான்றாக, பிஎஸ்சி செவிலியர், ரேடியோதெரபிஸ்ட், இமேஜிங் டெக்னீஷியன் உள்ளிட்ட படிப்புகளைச் சொல்லலாம். எந்த விதமான நுழைவுத்தேர்வுகளுமின்றி, முற்றிலும் பிளஸ்2 மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே இதுபோன்ற துணை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில், இளநிலை பிரிவில் துணை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் நடப்பு 2021 - 2022ம் ...
ஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர்! தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை!

ஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர்! தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
  ஆசிரியர் பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கில் பட்டியல் போட்டு வசூல் வேட்டை நடத்திய பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், வழக்கில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சியில் ஐக்கியமாகிவிட்ட முன்னாள் அமைச்சர்களிடம் தஞ்சம் அடைந்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.   சேலத்தை அடுத்த கருப்பூரில், கடந்த 24 ஆண்டுகளாக பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலையுடன், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 113 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன.   இப்பல்கலையின் துணைவேந்தராக கடந்த 2014 முதல் 2017 வரை சுவாமிநாதன் என்பவர் பணியாற்றி வந்தார். ஆராய்ச்சியாளர்களையும், பெரும் கல்வியாளர்களையும் உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகம், அவருடைய பணிக்காலத்தில்தான் ஊழல் வேட்டைக்களமாக மாறிப்போனதாக கூறுகிறார்கள் ...
ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த் காலமானார்!

ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த் காலமானார்!

சினிமா, முக்கிய செய்திகள்
19.3.1940 - 12.10.2021   பழம்பெரும் நடிகரும், ஜெயலலிதாவுக்கு முதன்முதலில் கதாநாயகனாகவும் நடித்த ஸ்ரீகாந்த் (81), செவ்வாய்க்கிழமை (அக். 12) சென்னையில் காலமானார். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார். பிரபல இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை (1965) படத்தில் ஸ்ரீகாந்த், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் அறிமுகமானார்கள். அந்தப் படத்தில் ஜெயலலிதாவுக்கு கதாநாயகனாக நடித்திருந்தார், ஸ்ரீகாந்த்.   அதன்பிறகு கே.பாலச்சந்தர் இயக்கிய பாமா விஜயம், பூவா தலையா, எதிர் நீச்சல் உள்ளிட்ட பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். குறிப்பாக, எதிர் நீச்சல் படத்தில் கிட்டு என்ற பாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.   தமிழில் ...
5 லட்சம் ரூபாய்க்கு அரசு வேலை!; ஆசை வலை விரித்து மோசடி செய்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் கைது!!

5 லட்சம் ரூபாய்க்கு அரசு வேலை!; ஆசை வலை விரித்து மோசடி செய்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் கைது!!

குற்றம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ் வளர்ச்சித்துறையில், வேலை வாங்கிக் கொடுப்பதாக ஆசை வலை விரித்து, காவலரின் மனைவியிடமே 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த அரசுப்பள்ளி பெண் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.   சென்னை புது வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரேணியல். காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனிதா கார்மெல் (43). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில் மூலம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.   அப்போது, அதே ரயிலில் பயணம் செய்த திருப்பாச்சூரைச் சேர்ந்த அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர் மேகலா (59) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது மேகலா, ''அரசுத் துறைகளில் பல உயர் அதிகாரிகளுடன் எனக்கு நெருக்கமான நட்பு உள்ளது. யாருக்காவது அரசு வேலை வேண்டுமானால் சொல்லுங்கள். இப்போது கூட தமிழ் வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடம் இருக்கிறது. யாராவது வ...
இதிலேயுமா கோல்மால்? வாக்காளர்களுக்கு கிழிந்த புடவை, இரும்பு கொலுசு விநியோகம்! வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் கலாட்டா! திமுக அப்செட்!!

இதிலேயுமா கோல்மால்? வாக்காளர்களுக்கு கிழிந்த புடவை, இரும்பு கொலுசு விநியோகம்! வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் கலாட்டா! திமுக அப்செட்!!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
வெண்ணந்தூரில் நாளை நடக்க உள்ள மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ரொக்கம், வேட்டி, சேலை என வாரி இறைத்த திமுக, இறுதிக்கட்டத்தில் வெள்ளி கொலுசு என்ற பெயரில் இரும்பு கம்பியால் ஆன கொலுசுகளை கொடுத்தது, வாக்காளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் சனிக்கிழமை (அக். 9) நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடக்கிறது. 107 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆறாவது வார்டில் மொத்தம் 54 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். வெண்ணந்தூர் ஒன்றியம் நீண்ட காலமாகவே அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கூட திமுகவுக்கு அதிமுகவைக் காட்டிலும் 1700 வாக்குகள் குறைவாகவே கிடைத்துள்ளன.   தே...