Friday, March 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Blog

அமமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க திட்டம்?

அமமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க திட்டம்?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் டி.டி.வி.தினகரனின் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் போட்டியிடுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பொருத்தவரை, இந்த தொகுதியை சிந்தாமல் சிதறாமல் கைப்பற்றி விட வேண்டும் என்று தனது பரிவாரங்களை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார். இந்த தொகுதியில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுக்கு இருக்கும் கணிசமான வாக்குகள் மூலம், அதிமுக வேட்பாளரை எளிதில் வெற்றி பெற வைத்துவிடலாம் என்றும் ஆளும்தரப்பு கணக்குப் போடுகிறது. ஆனால், அமமுக சார்பில் களம் இறங்கியுள்ள முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம், பிரதான எதிர்க்கட்சியான திமுகவைக் காட்டிலும் கடும் சவாலாக விளங்குவார் என எடப்பாடி தரப்பினரே சொல்கின்றனர். ஏனெனில் எஸ்.கே.செல்வம், சேலம் மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகு...
சேலம்: அதிமுக வேட்பாளருக்கு பாமக ‘டிக்டேட்’!

சேலம்: அதிமுக வேட்பாளருக்கு பாமக ‘டிக்டேட்’!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக வேட்பாளர், பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறியபோது, அவரை மேற்கொண்டு பேச விடாமல் பாமக நிர்வாகி அருள் அழைத்துச்சென்றது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மக்களவை தொகுதியில் திமுக - அதிமுக நேரடியாக மோதுகிறது. கடந்த 22ம் தேதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், திங்கள்கிழமை (மார்ச் 25, 2019) சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தனது பெயர் ராசி, நட்சத்திரம், நல்லநேரம் பார்த்து குளிகை காலத்தில் பகல் 2.40 மணியளவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக எம்எல்ஏ வெங்கடாஜலம் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் அருள் (பாமக), ராதாகிருஷ்ணன் (தேமுதிக), கோபிநாத் (பாஜக) ஆகியோர் வேட்புமனு தாக்கலின்போது உடன் இருந்தனர்.   முன்னதாக, சேலம...
சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) வேட்புமனு தாக்கல் செய்தார். அவர், தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.6 கோடி சொத்துகள் இருப்பதாக கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.   மக்களவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பரப்புரையை தொடங்கியுள்ளன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் பரவலாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) மதியம், சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, காங்கிர...
சேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல்! இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்!!

சேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல்! இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் சிறுமியை ஐந்து பேர் கொண்ட கும்பல் துடிக்க துடிக்க கூட்டு வன்புணர்வு செய்து, கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம், வியாழனன்று (மார்ச் 21, 2019) பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.   சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளி. இவருடைய மகள் பூங்கொடி (10). அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த, 14.2.2014ம் தேதி இரவு, சிறுமி பூங்கொடி தனது பெற்றோர், சகோதரிகளுடன் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மறுநாள் காலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. பரமசிவமும் அவருடைய மனைவியும் பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். சென்றாயன்பாளையம் பெருமாள் மலைக்கரடு பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில், சிறுமி தூக்கில் சடலமாக தொங்கிக் க...
சேலம் தொகுதியில் ஹாட்ரிக் அடிப்பாரா எடப்பாடி?; குஸ்தி போடும் திமுக – அமமுக!

சேலம் தொகுதியில் ஹாட்ரிக் அடிப்பாரா எடப்பாடி?; குஸ்தி போடும் திமுக – அமமுக!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதியை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தக்க வைத்துக்கொள்வதில் எடப்பாடியின் அதிமுகவுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுகவும், அதிமுகவும் அடுத்தடுத்து வெளியிட்டு, அரசியல் களத்தை சூடேற்றி இருக்கின்றன. முதல்வர் மாவட்டம் என்பதால், மற்ற தொகுதிகளைக் காட்டிலும் சேலம் மக்களவை தொகுதி அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.   மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக நேரடியாக சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதாலும் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. திமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் களம் இறங்குகிறார். அதிமுக சார்பில், கே.ஆர்.எஸ். ...
சேலம் சிறுமி கூட்டு வன்புணர்வு செய்து கொலை!; பாமக பிரமுகர் உள்ளிட்ட ஐவர் மீதான வழக்கில் மார்ச் 19ல் தீர்ப்பு!

சேலம் சிறுமி கூட்டு வன்புணர்வு செய்து கொலை!; பாமக பிரமுகர் உள்ளிட்ட ஐவர் மீதான வழக்கில் மார்ச் 19ல் தீர்ப்பு!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, பத்து வயது சிறுமியை துடிதுடிக்க கூட்டு வன்புணர்வு செய்து படுகொலை செய்த வழக்கில், வரும் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளி. இவருக்கு பத்து வயதில் பூங்கொடி என்ற மகள் உள்பட மொத்தம் மூன்று குழந்தைகள். கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இரவு, சிறுமி பூங்கொடி சகோதரிகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது பெற்றோர் அருகில் உள்ள தறிக்கூடத்தில் நெசவு நெய்து கொண்டிருந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், சிறுமியை பலவந்தமாக அருகில் உள்ள பெருமாள் கோயில் மலைக்குத் தூக்கிச்சென்று, துடிதுடிக்க கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இதில் அவள், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனாள். பின்னர் அவர்கள், சிறுமியை அங்க...
8826 போலீஸ் பணிக்கு ஆளெடுப்பு! எஸ்எஸ்எல்சி போதுமானது!!

8826 போலீஸ் பணிக்கு ஆளெடுப்பு! எஸ்எஸ்எல்சி போதுமானது!!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக காவல்துறை, சிறைத்துறைகளில் காலியாக உள்ள 8826 இரண்டாம்நிலை காவலர், சிறைக்காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் (டிஎன்யுஎஸ்ஆர்பி), இரண்டாம்நிலை காவலர், இரண்டாம்நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பாணையை மார்ச் 6, 2019ம் தேதி வெளியிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் மாவட்ட / மாநகர ஆயுதப்படைகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்காக மட்டுமே 2465 இரண்டாம்நிலைக் காவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தவிர, தமிழ்நாடு சிறப்புக்காவல் படையில் 5962 இரண்டாம்நிலை காவலர் பணியிடங்களுக்கும், சிறைத்துறையில் 208 (22 இடங்கள் பெண்களுக்கானவை) இரண்டாம்நிலை சிறைக்காவலர் பணியிடங்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் 191 தீயணைப்பாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 8826 பதவிகளுக்கு போட்டித்தேர்வ...
கோகுல்ராஜ் வழக்கை நாமக்கல் நீதிமன்றம் விசாரிக்க கூடாது! – ஹைகோர்ட்

கோகுல்ராஜ் வழக்கை நாமக்கல் நீதிமன்றம் விசாரிக்க கூடாது! – ஹைகோர்ட்

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கை, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து, உயர்நீதிமன்றம் மார்ச் 6, 2019ம் தேதி உத்தரவிட்டுள்ளது.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதியன்று திடீரென்று காணாமல் போனார். மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ், தலை வேறு முண்டம் வேறாக கொல்லப்பட்டுக் கிடந்தார். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. படித்து வந்தபோது, தன்னுடன் ஒரே வகுப்பில் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் கோகுல்ராஜ் நெருக்கமாகப் பழகி வந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதியை காதலிப்பதாக கருதிய கும்பல், அவரை சாதிய வன்மத்துடன் ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று அப்போது பல்வேற...
சங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள்! வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு!!

சங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள்! வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு!!

ஈரோடு, குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த விவசாயிகளும், சிறு தொழில் அதிபர்களும் சண்முகம் மற்றும் மணி என்ற இருபெரும் கந்துவட்டி மாஃபியாக்களால் சொத்து, சுகங்களை இழந்து நடுத்தெருவில் தத்தளிக்கும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த 7.2.2019ம் தேதியன்று சென்னையில் தங்களை, விவசாயிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட சங்ககிரி சண்முகம் பிரதர்ஸ் தங்களுடைய, நிலத்தையும் இதர சொத்துகளையும் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ் மிரட்டுவதாக ஊடகங்களிடம் குமுறினர். ஆளுங்கட்சியினர்க்கு எதிரான குற்றச்சாட்டு என்பதால் அதை அப்படியே எல்லா ஊடகங்களும் பிரதிபலித்தன.   ஆனால், சண்முகம் சகோதரர்களின் பேட்டியைப் பார்த்த சங்ககிரிகாரர்களோ தலையில் அடித்து நொந்து கொண்டனர். உள்ள நிலவரம் வேறு; செய்தியாக சொல்லப்படுவதோ வேறு என்பதால் அந்த ஊர் மக்கள் ஊடகங்கள் மீதும் நம்பிக்கையற்றுப் ப...
தடம் – விமர்சனம்! ‘ஓருரு இரட்டையர்களின் சடுகுடு ஆட்டம்!’

தடம் – விமர்சனம்! ‘ஓருரு இரட்டையர்களின் சடுகுடு ஆட்டம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'தடையறத்தாக்க', 'மீகாமன்' வரிசையில் இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இருந்து வந்திருக்கும் மற்றுமொரு சிறந்த படைப்பு, 'தடம்'. அண்மைக்காலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து இருக்கிறார், அருண்விஜய். அந்த பட்டியலில் அவரின் ஆகச்சிறந்த படங்களுள் 'தடம்' படத்திற்கு முக்கிய இடம் உண்டு. நடிகர்கள்: அருண்விஜய் தன்யா ஹோப் ஸ்மிருதி வித்யா பிரதீப் யோகிபாபு பெப்சி விஜயன் மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு: கோபிநாத்; இசை: அருண் ராஜ்; எடிட்டிங்: ஸ்ரீகாந்த் இயக்கம்: மகிழ் திருமேனி   கதையின் 'ஒன்லைன்': ஓருரு இரட்டையர்கள் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். அந்தக் கொலை வழக்கில் இருந்து சட்ட ரீதியாக விடுதலை செய்யப்படுகின்றனர். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து அவர்கள் எப்படி தப்பினார்கள் என...