Saturday, March 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Blog

தமிழ்நாட்டில் ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது! பழ.கருப்பையா சொல்கிறார்!!

தமிழ்நாட்டில் ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது! பழ.கருப்பையா சொல்கிறார்!!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த 2011 முதல் 2016 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் பழ.கருப்பையா (76). அவருடைய மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அக்கட்சியில் இருந்தும் வெளியேறி இருக்கிறார் பழ.கருப்பையா. பழ.கருப்பையா, ஒரு கட்சியில் இருந்து கொண்டே எப்போது அந்தக் கட்சியையே எதிர்மறையாக விமர்சிக்கிறாரோ அதையடுத்து அவர் அக்கட்சியைவிட்டு விலகி வேறு கட்சியில் சேரப்போகிறார் என்பது அவருடைய கடந்த கால அரசியல் செயல்பாடுகளை உற்றுக் காண்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.   இந்திய தேசிய காங்கிரஸ், சிண்டிகேட் காங்கிரஸ், ஜனதா கட்சி, திமுக, மதிமுக மீண்டும் காங்கிரஸ், பின்னர் அதிமுக, திமுக என கடந்த 50 ஆண்டுகளில் அவர் போகாத அரசியல் கட்சிகள் இல்லை. நாளையே அவர் மீண்டும் திமுகவில் இணைந்தாலும், சேர்த்துக் கொள்ள அக்கட்சியும் மறுக்காது. ஆனாலும், தரம...
பணமதிப்பிழப்பு காலத்தில் சொத்துகளை வாங்கி குவித்த சசிகலா! 

பணமதிப்பிழப்பு காலத்தில் சொத்துகளை வாங்கி குவித்த சசிகலா! 

அரசியல், முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில், ஜெயலலிதான் தோழி சசிகலா, 1674.5 கோடிக்கு சொத்துகளை வாங்கி குவித்துள்ளதை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, இந்தியாவில் அதுவரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று அறிவித்தார்.   கருப்புப்பணத்தை ஒழிப்பது, தீவிரவாதிகளுக்கு பணம் கைமாறுவதை தடுப்பது, ஊழலை ஒழிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அப்போது அவர் சொன்னார்.   பிறகு, 2017 ஜனவரி மாதம் முதல் புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் தாள்களை அச்சிட்டு புழக்கத்திற்கு கொண்டு வந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மாபெரும் முட்டாள்தனம் என்று பாஜகவினரைத் தவிர உலகின் எல்லா பொருளாதார வல்லுநர்களும...
அன்று தீவிரவாதி; இன்று வன்முறை! சிக்கிக் கொண்டாரா ரஜினி?

அன்று தீவிரவாதி; இன்று வன்முறை! சிக்கிக் கொண்டாரா ரஜினி?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலியாயினர். அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டக்காரர்களுடன் தீவிரவாதிகளும் நுழைந்ததால்தான் போராட்டம் வேறு திசைக்குச் சென்றதாகவும், இப்படி எதற்கெடுத்தாலும் போராடினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றும் சொன்னார். இப்படி அவர் கருத்து சொன்ன அடுத்த நிமிடமே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தனர். போராட்டக்காரர்களையும், குண்டடிபட்டு இறந்தவர்களையும் ரஜினி தீவிரவாதிகள் என்கிறாரா? என பொதுவெளியில் வினாக்களை முன்வைத்தனர். அதற்கு ரஜினியிடம் இருந்து மவுனமே பதிலாக இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்நிலையில், நடுவண் பாஜக அரசு, குடியுரிமை திர...
சேலம்: உள்ளாட்சி தேர்தலில் 17216 பேர் வேட்புமனு; இன்று பரிசீலனை!

சேலம்: உள்ளாட்சி தேர்தலில் 17216 பேர் வேட்புமனு; இன்று பரிசீலனை!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 17216 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீது இன்று (டிச. 17) பரிசீலனை நடக்கிறது. கடைசி நாளான நேற்று ஒரே நாளில், 8219 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.   தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ம் தேதியும் நடக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் இத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, கடந்த 9ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, கடைசி நாளான நேற்று (டிசம்பர் 16, 2019) மட்டும் 29 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 163 பேரும், 20 ஒன்றியங்களில் உள்ள 288 ஊராட...
சேலம்: உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

சேலம்: உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

சேலம், முக்கிய செய்திகள்
ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (டிசம்பர் 9) தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நேரடியாக 4299 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.   தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் வரும் 27.12.2019ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30.12.2019ம் தேதியும் நடக்கிறது. தேர்தல் நடக்கும் நாளன்று, வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை, வரும் 2.1.2020ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.   மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்...
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 23 நாள்தான் அவகாசம்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 23 நாள்தான் அவகாசம்!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் 23 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.   இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். வருகிற 2020ம் ஆண்டு மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் நடைமுறைகள் டிசம்பர் 2, 2019ம் தேதி தொடங்கியது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்ய கடைசி நாள், டிசம்பர் 31ம் தேதி ஆகும். நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அஞ்சல் வழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதற்கென தொடங்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன. மாதிரி விண்ணப்பமும் வழங்கப்பட்டுள்ளது.   இத்தேர்வுக்கு விண்ண...
விளையாட்டு வீரர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் தபால் துறையில் வேலை!

விளையாட்டு வீரர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் தபால் துறையில் வேலை!

தகவல், முக்கிய செய்திகள்
பிளஸ்2 முடித்த, விளையாட்டுத்துறையில் சிறந்த நிலையில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்துறையில் காலியாக உள்ள Multi tasking staff, Postman, Postal assistant / Sorting assistant பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 231 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த 25.11.2019ம் தேதியன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க, 31.12.2019ம் தேதி கடைசி நாள்.   முற்றிலும் தகுதி (meritorious) அடிப்படையில் மட்டுமே இப்பணியிடங்கள் நிரப்பப்படும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.   காலியிடம் மற்றும் ஊதிய விவரம்:   போஸ்டல் அசிஸ்டன்ட்: 89 சம்பளம்: ரூ.25500 - ரூ.81100 போஸ்ட்மேன்: 65 சம்பளம்: ரூ.21700 - ...
நிலம் உங்களுக்கு… ஆனால் உரிமை எங்களுக்கு! சதிராடும் சேலம் ஆவின்!!

நிலம் உங்களுக்கு… ஆனால் உரிமை எங்களுக்கு! சதிராடும் சேலம் ஆவின்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழகத்தில் ஒன்பது முறை ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. ஆனால், ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து, வீட்டு மனை பெற்றவர்களுக்கு இன்னும் கிரய பத்திரம் வழங்காமல் சேலம் ஆவின் நிறுவனம் வஞ்சித்து வருகிறது.   சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில், கடந்த நாற்பது ஆண்டுகளாக 'சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட்' எனப்படும் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பால் கொள்முதல், விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இந்நிறுவனம், சில ஆண்டுகளிலேயே பால் பவுடர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் ஆலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆலை விரிவாக்கத்திற்காக தளவாய்ப்பட்டி, அதைச் சுற்றியுள்ள சித்தனூர், ரொட்டிக்காரன் வட்டம், பெருமாள் கரடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 அப்பாவி குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆர்ஜி...
பாலக்கோடு: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்! ஆசிரியர் பணியிடைநீக்கம்!!

பாலக்கோடு: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்! ஆசிரியர் பணியிடைநீக்கம்!!

தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளி வகுப்பறையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில் கணித ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளி சந்தையில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 90 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பிரகாஷ்குமார் (54) என்பவர், இப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, ஆசிரியர் பிரகாஷ்குமார், 6ம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகளிடம் வகுப்பறையில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட சிறுமிகள் இதுபற்றி பெற்றோர்களிடம் அன்றே கூறியிருக்கின்றனர். அதன்பேரில், பெற்றோர்கள் இதுபற்றி பள்ளித்தலைமை ஆசிரியர் சிவகாமசுந்தரியை நேரில் சந்தித்துப் பு...
ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூர் அருகே, சேகோ ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டியின் மேல் மூடியை திறந்தபோது விஷ வாயு தாக்கியதில் கூலித்தொழிலாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.   சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கெங்கவல்லி பள்ளக்காட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). அப்பகுதியில் சண்முகா சேகோ பேக்டரி என்ற பெயரில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் அம்மம்பாளையம் கண்ணகி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணி என்கிற ஜெயச்சந்திரன் (35) கூலி வேலை செய்து வந்தார். அவருடன், பள்ளக்காட்டைச் சேர்ந்த மாது (55), காங்கமுத்து (50), கலியன் (48) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.   ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்பதற்கான மரவள்ளிக் கிழங்குகளை அரைத்த பின்னர் வெளியேற்றப்படும் கழிவு நீரை தேக்கி வைக்க, 6...