Tuesday, September 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

காயத்ரியை திட்டமிட்டு காப்பாற்றினாரா பிக்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரிக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சி மீதான டிஆர்பி வெகுவாக குறைந்ததாகச் சொல்லப்படுகிறது. போதாக்குறைக்கு ஜூலியானா வெளியேற்றப்பட்டதும் ரசிகர்கள் குறைந்ததற்கு இன்னொரு காரணம்.

இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், காயத்ரி மட்டுமே அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொன்னார். அந்த டாஸ்க்கில் அவர் வெற்றி பெற்றதை அடுத்து, அவரை எவிக்ஷன் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார்.

இந்த வாரம் பார்வையாளர்கள் தரப்பில் இருந்து சக்தி, காயத்ரி ஆகியோருக்குதான் மிகக்குறைந்த வாக்குகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இப்போதைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிண்டு முடியும் வேலைகளை காயத்ரி திறம்பட செய்து வருவதால், அவர் இருந்தால்தான் ஓரளவுக்காவது இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று கருதியே, காயத்ரிக்கு திட்டமிட்டு சலுகை காட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.