Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

பூவனம்: வான் தொட்டில் (கவிதை) – ஆ.மணிவண்ணன்

பூவனம்: வான் தொட்டில் (கவிதை) – ஆ.மணிவண்ணன்

இலக்கியம், புத்தகம்
காக்கி உடைக்குள் இப்படியும் ஒரு கவிஞனா? என ஆச்சர்யம் கொள்ள வைக்கிறார், மதுரையைச் சேர்ந்த முனைவர் ஆ.மணிவண்ணன். 'வான் தொட்டில்' கவிதை நூலை வெளியிட்டுள்ள இவர், காவல்துறை உதவி ஆணையராக பணியாற்றுகிறார். நூல் வெளியீடு, வானதி பதிப்பகம். காவல்துறை அதிகாரி என்பதால் துறை சார்ந்த முன்னாள், இந்நாள் உயரதிகாரிகளிடம் வாழ்த்துரை பெற்றிருக்கிறார். டிஜிபி கி.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்து மடலில், 'பகலில் காவலராகவும் இரவில் கவிஞராகவும் பரிணமித்திருக்கிறார்' என சுட்டியுள்ளார். 'வான் தொட்டில்' நூல், அறம், சட்டத்தை மதித்தல், குடும்பம், கடமை, ஆன்மீகம் ஆகியவற்றைப் பேசுகிறது. செலவில்லாமல் கிடைப்பதும், மதிக்கப்படாமலே போவதும் எதுவென்றால் இரண்டுக்கும் ஒன்றேதான் பதிலாக அமையும். அது, அறிவுரைகள். பொருள் சார்ந்து இயங்கும் இன்றைய உலகில் அறிவுரைகள் சொல்பவர்கள்கூட அருகிவிட்டனர். தான் சந்தித்த அனுபவங்கள் வாயிலாக இளைஞர்...
பூவனம்:  மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்)  -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்

பூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்

இலக்கியம், புத்தகம்
பட்டியல் இனத்தவரிலும் குறிப்பாக பறையர் சாதி தோன்றியதன் வரலாறு குறித்து ஏற்கனவே பல்வேறு ஆய்வு நூல்கள் வந்துவிட்டன. இப்போது சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன், 'மறைக்கப்பட்ட பறையர் வரலாறு' என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். வெளியீடு, கலகம் வெளியீட்டகம். ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், பின் அட்டைக் குறிப்பு வழங்கி கூடுதல் வண்ணம் சேர்த்துள்ளார். இந்நூலை முழுவதும் வாசித்து முடிக்கையில், பறையர் என்ற இனமே இந்தியாவில் பேரினமாக இருந்திருக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது. இசை பறையன், களத்து பறையன், கிழக்கத்தி பறையன், நெசவுக்கார பறையன், பரமலை பறையன், பஞ்சி பறையன், பறையாண்டி பறையன் உள்பட 100க்கும் மேற்பட்ட பெயர்களில் இந்த சமூகத்தினர் அழைக்கப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது. பறையர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து பதிவு செய்யும்போது, அண்ணல் அம்பேத்கரை மேற்கோளாக பதிவு...
லெனோவா கே8 நோட் விரைவில் அறிமுகம்.!

லெனோவா கே8 நோட் விரைவில் அறிமுகம்.!

தொழில்நுட்பம், முக்கிய செய்திகள், வர்த்தகம்
லெனோவா நிறுவனம் பொதுவாக பல்வேறு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்துவருகிறது,மேலும் தற்போது லெனோவா நிறுவனம் புதிய லெனோவா கே8 நோட் என்ற மாடலை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது, அதன்பின் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன். லெனோவா கே8 நோட் வரும் 09.08.2017 அன்று அறிமுகப்படுத்தபடும் என லெனோவா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆண்ட்ராய்டு: லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் பொதுவாக ஸ்னாப்டிராகன் 660 செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம்: இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிக்கும் வசதி இவற்றில் உள்ளது ...
பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா: சொல்கிறது ஐஎம்எஃப்

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா: சொல்கிறது ஐஎம்எஃப்

அரசியல், இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், வர்த்தகம்
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, நடப்பு ஆண்டில் அபரிமிதமாக இருக்கும் என்றும், சீனாவை பின்னுக்குத் தள்ளி வேகமாக வளரும் என்றும் சர்வதேச நிதியகம் (ஐ.எம்.எப்) தன்னுடைய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.ன் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். இருந்தாலும், நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சவால் மிகுந்ததாக இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தெரிவித்திருந்தார். ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகமானது. இதில் துவக்கத்தில் சிறிது காலத்துக்கு மந்தநிலை காணப்பட்டாலும், இது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ஐஎம்எஃப் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. பணமதிப்பு நீக்கம்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்...
முதல் டெஸ்ட்: 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது இந்தியா

முதல் டெஸ்ட்: 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது இந்தியா

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு ஆரம்பமே அட்டகாசமாக அமைந்துள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காலேயில் நடைபெற்ற இந்த டெஸ்டில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்களையும், இலங்கை 291 ரன்களையும், இந்தியா 2வது இன்னிங்சில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களையும் எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இன்று (29/07/17) 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீ...
இவள் புதியவள்:  ”முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்!” சொல்கிறார் உமை பானு

இவள் புதியவள்: ”முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்!” சொல்கிறார் உமை பானு

அரசியல், மகளிர், வர்த்தகம்
''பெண்கள் சுதந்திரமாகவும், அனைத்து உரிமைகளையும் பெற்று இருக்க வேண்டும் என்றுதான் இஸ்லாத் கூறுகிறது. ஆனால், நடைமுறையில் முஸ்லிம் பெண்களை ஆண்கள் சமுதாயம் வளர விடுவதில்லை,'' என பொறி பறக்கிறார் உமைபானு. மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்டு செயல்படும் சேலம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் செயலாளராக, தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இருந்து வரும் உமைபானு, இன்றைய தேதியில் பொருளாதாரத்தில் நலிவுற்ற முஸ்லிம் சிறுபான்மை பெண்களின் நம்பிக்கை நட்சத்திரம் எனலாம். தவிர, அல் அமாநாத் சோஷியல் அன்டு சாரிட்டபுள் டிரஸ்டின் தலைவராகவும் உள்ளார். பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றதாலோ என்னவோ, முஸ்லிம் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய ஊக்கியாகவும் இருந்து வருகிறார். அமைப்பின் சேவைகள், பெண்கள் அரசியல் குறித்தும் தைரியமாக பேசினார். அவர் சொல்கிறார்... என் கணவர், பாஷா. ஏற்றுமதி தொழில் செய்து ...
திரை இசையில் வள்ளுவம்: குடித்தால் போதை தரும் மது; நினைத்தால் போதை தரும் காதல்…(தொடர்)

திரை இசையில் வள்ளுவம்: குடித்தால் போதை தரும் மது; நினைத்தால் போதை தரும் காதல்…(தொடர்)

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஒன்றே முக்கால் அடியில் உலகையே அளந்த வள்ளுவன்தான், காதலின் உச்சமும் ஆழமும் தொட்டவன் என்றால் மிகையாகாது. 1330 பாக்களில், 250 பாடல்களே காமத்துப்பாலில் இடம் பெற்றிருந்தாலும், வள்ளுவனின் உச்சபட்ச கற்பனை வளத்தை அதில்தான் காண முடியும் என்பது என் கருத்து.   மாந்தர்களிடையே காதல் பூக்கும் தருணம், காதலர்களுக்குள் ஏற்படும் ஊடல், பின் கூடல் ஆகிய உணர்வுகளை மிக நுட்பமாக, உளவியல் ரீதியாக ஆராய்ந்து எழுதி இருப்பானோ என்றுகூட தோன்றுகிறது. காதலுக்கு வள்ளுவன் வகுத்தளித்த கோட்பாடுகள் இன்றும் மாறவே இல்லை. உலகம் முழுவதும் அப்படித்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.   இப்போதுபோல், சங்க காலத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி இருப்பார்களா? எனத்தெரியாது. ஆனாலும், அவன் காலத்திலும் சமூகத்தை சீரழிக்கக் கூடியதாகத்தான் மதுபானம் இருந்திருக்கிறது என்பதை 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தின் மூலம் அறியலாம். ...
திரை இசையில் வள்ளுவம்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா…! #தொடர்

திரை இசையில் வள்ளுவம்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா…! #தொடர்

இலக்கியம், சினிமா, முக்கிய செய்திகள்
பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் அறம், பொருளைவிட காமத்துப்பாலில்தான் அதீத கற்பனை ஊற்றெடுக்க பாடல்களை புனைந்துள்ளான். இதை நாம் கடந்த தொடரிலேயே சொல்லி இருக்கிறோம். சினிமாக்காரர்கள் மொழியில் சொல்வதென்றால் வள்ளுவர், 'கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காமத்துப்பாலில்தான் இறக்கி வெச்சிருக்காரு,' போலருக்கு. காதலை நோய் என்ற வள்ளுவன்தான், பெண்ணை மான் என்றான்; மயில் என்றான்; தெய்வம் என்றான்; எமன் என்றும் சொன்னான். ஓரிடத்தில் அவன், 'பெண்களை புரிந்து கொள்ள முடியாத தீ' என்றும் கூறுகிறான். உங்களிடம் ஒரு கேள்வி. நெருப்பின் அருகில் சென்றால் என்ன நடக்கும்?. உடல் சூடாகும் அல்லவா!. அதேநேரம் நெருப்பை விட்டு சற்று தொலைவு விலகிச் சென்றால் உடல் குளிரும் அல்லவா? இதுதான் இயல்பு. ஆனால், இயற்கைக்கு முரணான இயல்புடன் கூடியவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என வள்ளுவன் ஆச்சர்யம் மேலிட சொல்கிறான். உலகளந்த வள்ளுவனுக்கு, ...
திரை இசையில் வள்ளுவம்: மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ… #தொடர்

திரை இசையில் வள்ளுவம்: மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ… #தொடர்

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
 #தொடர்   ஒன்றரை அடி குறட்பாவில் உலகளந்தவன் வள்ளுவன். அதனால்தான், குறளின் பெருமையை, 'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' என்றார், இடைக்காடர். ஏழு சீர் கொண்ட குறட்பாக்களை, பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்த்ததால்தான் தமிழர்கள் ஓரளவுக்கேனும் அதை படித்து வைத்திருக்கிறோம். இல்லாவிட்டால், திருக்குறளின் மேன்மையைச் சொல்ல, வடநாட்டில் இருந்து தருண்விஜய் போன்று யாராவது வந்தால்தான் ஆச்சு. குறளின் இன்பத்தை, நாம் திரை இசை வழியாக இந்த தொடரில் பார்த்து வருகிறோம். கருத்துச் சொல்வதாக இருந்தாலும், மசாலா சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால், 'போச்சுடா...இங்கேயும் பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்களா...?' என வாசகர்கள் சட்டென அடுத்தப் பக்கத்தை திருப்பிவிடுவார்கள். அதனால்தான் குறளின் வலிமையை சினிமா பாடல்களின் ஊடாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். காதலை, அதன் வலிமையை,...
முதல்வராக வந்தால்தான் வாய் திறப்பாரா ரஜினி?: சீமான் கடும் தாக்கு

முதல்வராக வந்தால்தான் வாய் திறப்பாரா ரஜினி?: சீமான் கடும் தாக்கு

அரசியல், இந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை: அமைதியாகவே இருந்துவிட்டு முதல்வராக வந்தால்தான் வாய் திறப்பேன் என்று சொல்லும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், "ரஜினி போன்றவர்கள் தமிழகத்தில் வந்து பிழைக்கலாம். கட்சியை ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கக் கூடாது. ரஜினி இங்கு வந்து வேலை செய்ய ஒன்றும் இல்லை. அதனை நாங்களே செய்து கொள்கிறோம். என் தாய் நிலத்தை எங்கள் அளவிற்கு யாராலும் நேசிக்க முடியாது. நாங்கள் நீண்ட காலமாக காயம் பட்டுக் கிடக்கிறோம். என் மொழி சிதைந்து கிடக்கிறது. என் பண்பாடு செத்துப் போய்விட்டது. என் வேளாண்மை செத்துவிட்டது. என் வளங்கள் களவு போய்விட்டன. இதில் இருந்து எப்படியாவது நாங்கள் மீண்டெழத் துடிக்கும் போது, ம...