தமிழக முதல்வர் கிரிஜாவை மதிக்கிறேன்!; எஸ்.வி. சேகருக்கு காமெடி நடிகர் கிண்டல் ட்வீட்!!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நடிகர் சங்க பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி. சேகருக்கு, காமெடி நடிகர் கருணாகரன் கிண்டலாக ட்விட்டரில் பதில் அளித்துள்ளது கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16.8.2018ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 17ம் நாடு முழுவதும் பொது விடுமுறை விடப்பட்டது. தமிழக அரசும் ஒரு வார காலத்திற்கு துக்கம் அனுசரிக்கும் என்று அறிவித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம், (ஆகஸ்ட் 19) நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அவர் அரசியல் தலைவர் என்பது மட்டுமின்றி, ...